• Compensation Payments to the depositors of The Finance Company PLC - Second Stage

    இலங்கை மத்திய வங்கி, 2020.07.02ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்தினை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கமைய அத்தகைய கொடுப்பனவுகள் நாடுமுழுவதிலுமுள்ள மக்கள் வங்கியின் 63 கிளைகளில் இடம்பெறும். இந்நட்டஈட்டு பொறிமுறையின் நியதிகளுக்கிணங்க, ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் ரூ.600,000 என்ற அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படும். 

    இவ்விரண்டாம் கட்ட நட்டஈட்டின் கீழ், த பினான்ஸ் கம்பனி பிஎல்சியினால் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து வைப்பாளர்களுக்குமான நட்டஈடு 2020.07.02 இலிருந்து ஆரம்பிக்கப்படும்.  

  • Statement Made by the Central Bank of Sri Lanka on Regulation and Supervision of Non - Bank Financial Institutions

    2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்டிருந்த உரிமம்பெற்ற பல நிதிக் கம்பனிகள் முறிவடைந்தமை மற்றும் அதனைத்தொடர்ந்து அவற்றின் உரிமங்கள் இரத்துச்செய்யப்பட்டமை தொடர்பான பொறுப்புக்களைச் சுமத்துகின்ற பல ஊடக அறிக்கைகளை இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது.

  • The Central Bank of Sri Lanka’s COVID-19 Relief Measures: How are we helping the Country, Economy and YOU?

    இவ்வூடக அறிக்கையானது கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு, நிதியியல் முறைமைக்கு மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2020இன் இற்றைவரையிலும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்பாட்டு மற்றும் கொள்கை சார்ந்த வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதனை இலக்காகக் கொள்கின்றது. நாட்டின் உச்சமட்ட நிதியியல் நிறுவனம் என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியானது முடக்கல் காலப்பகுதியின் போது பொருளாதாரத்திற்கும் நிதியியல் முறைமைக்கும் அதன் முழுமையான அத்தியாவசிய பணி நோக்கெல்லையினையும் வழங்கியது. மத்திய வங்கியானது உலகளவிலான எதிர்பாராத இவ்விடையூறின் போது பொதுமக்கள் மீதான சுமையினை தளர்த்துவதற்கு முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேவேளை பொருளாதார, விலை மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கான அதன் சட்ட முறையான பொறுப்பாணை மீதான கவனத்தினை தக்கவைத்திருந்தது.

  • Central Bank Approved Rs. 28 Billion Loans at 4% among 13,861 Businesses Affected by the COVID-19 Outbreak

    கொவிட்-19 நோய்த்தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் அவசிய தேவையினையும் அதனூடாக நாட்டில் பொருளாதார நடவடிக்கையினை ஊக்குவிப்பதையும் இனங்கண்டு மத்திய வங்கியும் இலங்கை அரசாங்கமும் 2020 மாச்சு 24ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டவாறு சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி என்ற பெயரில் சௌபாக்கியா (சுபீட்சம்) கடன் திட்டத்தின் கீழ் புதிய மீள்நிதியிடல் கடன் வசதியொன்றினைத் தொடங்கியுள்ளன.

    மத்திய வங்கியானது இத்திட்டத்தின் கட்டம் I இன் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென ரூ.27.9 பில்லியன் தொகைக்கு ஒப்புதலளித்துள்ளது. இதில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூன் 24 வரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 7,274 வியாபாரங்கள் மத்தியில் ரூ.14.8 பில்லியனை ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன. இக்கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலத்துடனும் கூடிய 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும்.

  • NCPI based Inflation decreased further in May 2020

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஏப்பிறலில் 5.9 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 5.2 சதவீதத்திற்கு மேலும் குறைவடைந்தது. இது, 2019 மேயில் நிலவிய உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினாலும் பிரதானமாக உந்தப்பட்டிருந்தது. அதேவேளையில், உணவுப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஏப்பிறலின் 12.2 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 11.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் உணவல்லா பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஏப்பிறலின் 1.1 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 0.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

  • External Sector Performance - April 2020

    2020 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் கொவிட்-19 தொற்றுடன் தொடர்பான பொருளாதார இடையூறுகளினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நாட்டில் பகுதியளவிலான முடக்கம் விதிக்கப்பட்டமையானது 2020 ஏப்பிறலில் இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதிகள் துறையினைக் குறிப்பிடத்தக்களவில் பாதித்த வேளையில், சுற்றுலாத் தொழில் துறையினை முழுமையாகவே இழுத்து மூடியிருக்கிறது. இறக்குமதிகளுடன் தொடர்பான நிரம்பல் சங்கிலிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாகவும் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இன்றியமையாதனவல்லாத இறக்குமதிகளின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினாலும் வணிகப்பொருள் இறக்குமதிகள் மீதான செலவினம் வீழ்ச்சியடைந்தது.

  • The Central Bank of Sri Lanka Implements New Credit Schemes to Support the Revival of the Economy

    இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது கடந்த சில ஆண்டுகளாக மோசமான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன் உடனடி தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் கொவிட்-19 உலகளாவிய தொற்று நோய்த் தாக்கமானது எதிர்வரும் காலங்களில் பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பன மீது தீவிரமான அழுத்தத்தினைத் தோற்றுவிக்கலாம். இப்பின்னணியில், பொருளாதாரத்திற்கு புத்துயிரளிப்பதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூன் 16ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 83ஆம் பிரிவின் கீழ் புதிய கொடுகடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

  • The Central Bank of Sri Lanka Further Reduces the Statutory Reserve Ratio
    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூன் 16 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2020 யூன் 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் 2.00 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நியதி ஒதுக்கு விகிதத்தின் இக்குறைப்பானது உள்நாட்டு பணச் சந்தைக்கு ஏறத்தாழ ரூபா 115 பில்லியன் கொண்ட மேலதிக திரவத்தன்மையினை உட்செலுத்தி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் நிதியச் செலவுகளைக் குறைக்கின்ற வேளையில் பொருளாதாரத்திற்கு கொடுகடன் பாய்ச்சலினை துரிதப்படுத்துவதற்கு நிதியியல் முறைமையினை இயலச்செய்யும்.
  • Sri Lanka Purchasing Managers’ Index - May 2020

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2020 மேயில் 49.3 சுட்டெண் புள்ளிகளினை அடைந்து ஒரு குறிப்பிடத்தக்களவு எழுச்சியினை பதிவு செய்ததுடன் இது 2020 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து காலத்திற்குமான தாழ்ந்த 24.2 சுட்டெண் புள்ளியிலிருந்து 25.1 சுட்டெண் புள்ளிகள் கொண்ட ஒரு அதிகரிப்பாகும். தயாரிப்பு துறையின் பொருளாதார நடவடிக்கைகளின் ஆரம்பத்திற்கு இடநகர்விற்கான தடைகளின் படிப்படியான இலகுபடுத்தல்கள் பங்களிப்புச் செய்தன. 

  • Statement by Deshamanya Professor W.D. Lakshman Governor of the Central Bank of Sri Lanka
    இலங்கையின் நிதியியல் முறைமையும் நிதியியல் நிறுவனங்களும் பலவீனமான நிலையில் காணப்படுகின்றன என்றும் அத்தகைய நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்ட தமது வைப்புக்களை பொதுமக்கள் இழக்கும் இடர்நேர்வில் காணப்படுகின்றனர் என்றும் பல்வேறு குழுக்களினாலும் தனிப்பட்டவர்களினாலும் ஆதாரமற்ற ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

    நாட்டில் பொதுமக்களின் வைப்புக்களை ஏற்கின்ற வங்கித்தொழில் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் இரண்டினதும் ஒழுங்குமுறைப்படுத்துநராக இலங்கை மத்திய வங்கியானது, பொதுமக்களின் வைப்புக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு அனைத்து சாதகமான வழிமுறைகளும் தொடர்ச்சியாக எடுக்கப்படும் என்பதனை பொதுமக்களுக்கு உறுதியாக அறிவிக்க விரும்புகின்றது. நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உறுதிப்பாடு தொடர்பிலான உண்மையான நிலைமைகளைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக நான் இவ்வறிக்கையினை விடுக்க விரும்புகின்றேன்.

Pages