தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 யூனின் 58.9 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 66.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூனின் 75.8 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 82.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூனின் 43.6 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 52.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.
















