இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழ் ஐ.அ.டொலர் 3 பில்லியனிற்குப் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஒப்புதலளிக்கின்றது

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் மறுசீரமைப்புக்களுக்கும் ஆதரவளிக்கும் பொருட்டு  சி.எ.உ 2.286 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3 பில்லியன்) கொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட ஏற்பாடொன்றிற்கு பன்னாட்டு நாணய நிதிய சபை ஒப்புதலளித்தது.

பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினையும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினையும் மீட்டெடுத்தல், நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொண்டு வருவதற்கான கட்டமைப்புசார் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தல் என்பன விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட செயற்றிட்டத்தின் நோக்கங்களாகும். அனைத்து செயற்றிட்ட வழிமுறைகளும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் மற்றும் ஆளகையினை மேம்படுத்துகின்றதன் அவசியத்தினைக் கவனத்திற்கொண்டுள்ளன.

செயற்றிட்ட சுட்டளவுகளுக்கு இணங்க படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினை மீட்டெடுக்கும் படுகடன் முகாமைத்துவமொன்றினைத் துரிதப்படுத்துவதற்கு இலங்கைக்கும் அதன் சகல கொடுகடன் வழங்குநர்களுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பானது இன்றியமையானதாகும்.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, March 21, 2023