மறைக்குறி நாணயத்தைப் (Cryptocurrency) பயன்படுத்துவதிலும் முதலீடுசெய்வதிலுமுள்ள இடர்நேர்வுகள்

“கிறிப்டோ” என பொதுவாக குறிப்பிடப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்கள் விசாரணைகளையும் அவதானிக்கப்படும் அபிவிருத்திக்களையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கிறிப்டோ நாணயங்களைப் பயன்படுத்துவதுடனும் முதலீடுசெய்வதுடனும் தொடர்புடைய குறிப்பிடத்தக்க இடர்நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு மீளவும் வலியுறுத்துகின்றது. கிறிப்டோ நாணயம் என்பது ஒரு நாட்டின் நாணய அதிகாரசபையினாலன்றி தனியார் நிறுவனங்களினால் உருவாக்கப்படுகின்ற மெய்நிகர் நாணய வகையொன்றாகும். ‘கிறிப்டோ நாணயம்’ என்ற சொற்பதமானது மறைகுறியாக்கம் மற்றும் பகிரப்பட்ட பேரட்டு தொழில்நுட்பம் அல்லது அதையொத்த தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற டிஜிட்டல் பெறுமதியின் பிரதிநிதித்துவத்தைக் குறிப்பிடுகின்றது. கிறிப்டோ – வர்த்தகம், இலாபகரமான முதலீடொன்றாக சில நிறுவனங்களினால் பரந்தளவில் ஊக்குவிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் தாம் மேற்கொண்ட கிறிப்டோ முதலீடுகளின் மூலமாக பாரியளவில் நட்டங்களை சந்தித்துள்ளனர் என்றும் சில சந்தர்ப்பங்களில் கிறிப்டோவுடன் தொடர்புடைய திட்டங்க;டாக முன்னெடுக்கப்பட்ட நிதியியல் மோசடிகளுக்கும் ஆளாகின்றனர் என்றும் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்கப்பெறுகின்ற அண்மைய முறைப்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.

கிறிப்டோ நாணயத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய இடர்நேர்வுகள் அதேபோன்று வாடிக்கையாளர் பாதுகாப்பு கரிசனைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி 20182021இ அத்துடன் 2022இஆம் ஆண்டுகளில் ஊடக வெளியீடுகளினூடாக ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ளது. கிறிப்டோ நாணய வணிகங்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் அண்மையில் தோல்வியடைந்து சில கிறிப்டோ நாணயங்களின் பெறுமதிகளின் நிலைகுலைவு மற்றும் இழப்புடன் இவ்விடர்நேர்வுகளும் கரிசனைகளும் ஏற்கனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கிறிப்டோ நாணயங்கள் இலங்கையில் சொத்து வகுப்பொன்றாக அங்கீகரிக்கப்படாத ஒழுங்குமுறைப்படுத்தப்படாத முதலீட்டு சாதனங்கள் என்பதை பொதுமக்களுக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், கிறிப்டோ நாணயங்கள், இலங்கையில்  சட்டப்பூர்வமான நாணயமானவையல்ல என்பதுடன் நாட்டில் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தல் பாதுகாப்புக்களும் காணப்படவில்லை. இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க பணிப்புரைகளுக்கமைவாக, கிறிப்டோ நாணயத்தை கொள்வனவு செய்வதற்கு பற்று அட்டைகள் மற்றும் கடனட்டைகள் போன்ற இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகள் பயன்படுத்துவதற்கு  அனுமதிக்கப்படவில்லை. கிறிப்டோ நாணயம் முறைசாரா வழிக;டாக தொழிற்படுவதனால், தேசிய பொருளாதாரத்திற்கு அது பங்களிப்பதில்லை என்பதுடன் நாட்டின் பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயத்தையும் இழக்க நேரிடுகின்றது.

கிறிப்டோ முதலீடுகளை அடிப்படையாகக்கொண்டு, உயர்ந்தளவான வருவாய்களுக்கான வாக்குறுதியுடன் தொழிற்படுகின்ற பல எண்ணிக்கையிலான நிதியியல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன தொடர்பிலும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். கிறிப்டோ நாணயத்தில் பணத்தை முதலீடுசெய்வதன் மூலம் அதிகளவிலான வருமானத்தை வழங்குவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதும் அதேபோன்று மோசடியான கிறிப்டோ நாணய திட்டங்களில் முதலீடுசெய்யுமாறு கூறி தனிப்பட்டவர்களை ஏமாற்றுவதும் இம்மோசடிகளில் உள்ளடங்குகின்றன. அத்தகைய மோசடிகள், மரபுசார் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் சட்ட பாதுகாப்பு பொறிமுறைகளை தவிர்த்து, தனிப்பட்டவர்கள் பாடுபட்டு உழைத்த தமது சேமிப்புக்களையும் செல்வத்தையும் இழக்க வழிவகுக்கின்றது.

ஆகவே, பொதுமக்கள் பாடுபட்டு உழைத்த தமது பணத்தைப் பாதுகாக்குமாறும் இணையத்தளம், ஏனைய ஊடக வழிகள் மற்றும் நேரடியாக எவரேனும் ஆளின் மூலமாக வழங்கப்படும் ஏதேனும் கிறிப்டோ நாணய திட்டத்தில் முதலீடுசெய்யாமாலிருக்குமாறும் திட்டத்துடன் ஈடுபாடாதிருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு வலுவாக அறிவுறுத்துகின்றது. மேலும், இலங்கை மத்திய வங்கியானது கிறிப்டோ நாணயத்தை ஈடுபடுத்துகின்ற திட்டங்களை தொழிற்படுத்துவதற்கு ஏதேனும் உரிமம் வழங்கவில்லை அல்லது எவரேனும் ஆட்களுக்கு அல்லது வியாபாரத்திற்கு அதிகாரமளிக்கவில்லை என்பதுடன் ஏதேனும் ஆரம்ப நாணயக் குற்றி அல்லது அதன் ஏதேனும் திரிபை வழங்குதல், கிறிப்டோ நாணய வார்ப்பு தொழிற்பாடுகள், கிறிப்டோ நாணய பரிமாற்றல்கள், கிறிப்டோ நாணயம் அல்லது ஏதேனும் கிறிப்டோ நாணய முதலீட்டு ஆலோசனைப் பணிகளுடன் தொடர்புடைய வைப்பு ஏற்றல் அல்லது கட்டுக்காப்பு பணிகள் போன்றவற்றை வழங்குவதற்கு அதிகாரமளிக்கவில்லை என்பது பற்றியும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

கிறிப்டோ நாணயத்துடன் இணைந்த பரந்தளவிலான இடர்நேர்வுகளையும் நிதியியல் இழப்புகள் உள்ளடங்கலாக பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் கருத்திற்கொண்டு கிறிப்டோ நாணயத்தை ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டினை ஊக்குவிப்பதை வசதிப்படுத்தல் அத்துடன் விற்பனை செய்தல் என்பனவற்றில் ஈடுபடுகின்றவர்களை அத்தகைய நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்திருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்துகின்றது.

Published Date: 

Wednesday, March 29, 2023