நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்

நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களமானது திருத்தப்பட்டவாறான, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ்  நிறுவப்பட்டது. ஆரம்பத்தில், நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்கள் தொடர்பில் நிதியியல் வாடிக்கையாளர்களினால் அனுப்பப்படும் அனைத்து வெளிவாரி முறைப்பாடுகளையும் பெறுதல் மற்றும் அவற்றின் பரவலின் ஒரு முக்கிய தொடர்பு புள்ளியாக செயல்படும். முன்னோக்கிச் செல்கையில், நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களமானது நிதி நிறுவனங்களின் சந்தை நடத்தைகளின் தரங்களை மேற்பார்வை செய்தல், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை அபிவிருத்தி மற்றும் சிறந்த நடைமுறைகளுடன் இசைந்து செல்லும் நிதியியல் நுகர்வோர் பாதுகாப்பு கொள்கைகளினை மீளாய்வு செய்தல், முறைப்பாடுகள் தொடர்பான செயற்றிறன் மற்றும் எதிர்வினை வழிமுறைகளை மேற்கொள்ளும் அதேவேளை நிதியியல் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களில் வளர்ந்துவரும் பாதிப்புகளை அடையாளம் கண்டு கண்காணித்தல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தும்.

நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் பின்வருமாறு.

  1. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்
  2. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்
  3. உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்
  4. சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள்
  5. அதிகாரமளிக்கப்பட்ட முதனிலை முகவர்கள்
  6. கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் பங்கேற்பாளர்கள் (ஏனைய நிதியியல் நிறுவனங்கள்)

குளோபல் பேமன்ஸ் ஏசியா பசுபிக் லங்கா (பிறைவேற் லிமிடெட்*
டயலொக் எக்‌ஷியாட்டா பிஎல்சி*
மொபிடல் (பிறைவேற்) லிமிடெட்*

* கொடுப்பனவு முறைமை தொடா்பான விடயங்களுக்கு மட்டும்

கீழே தரப்பட்டுள்ள இணைப்பிலிருந்து அல்லது கியுஆர் (QR) குறியீட்டிலிருந்து முறைப்பாட்டுப் படிவத்தினை தரவிறக்கம் செய்வதன் மூலம் மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனத்தின் மீதான முறைப்பாட்டினை நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்திற்கு மின்னஞ்சல், தபால் அல்லது தொலைநகல் மூலம் சமர்ப்பிக்கலாம்.

https://www.cbsl.gov.lk/sites/default/files/fcrd_complaint_submission_form_t.pdf

கியுஆர்(QR) குறியீடு:

 

 

 

 

நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தின் முறைப்பாட்டுக் கையாளல் செயன்முறைச் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

 

  1. கிடைக்கப்பெற்ற முறைப்பாடு மீது நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பு இலக்கத்தினை குறித்தொதுக்குவதுடன் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தினால் ஆரம்ப முறைப்பாட்டாளருக்கு இந்நடவடிக்கைக்கான முறைப்பாட்டு தொடர்பு இலக்கத்துடனான ஓர் ஏற்றுக்கொள்ளல் கடிதம் விருப்பப்படும் தொடர்புமுறையினூடாக அனுப்பி வைக்கப்படும்.
  2. முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்தலினைத் தீhமானிப்பதற்காக நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தினால் ஆரம்பக்கட்ட மீளாய்வு மேற்கொள்ளப்படும்.
  3. முறைப்பாட்டாளரினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட்ட முறைப்பாடு முறைப்பாட்டிற்கான காரணத்தின் அடிப்படையில் பொருத்தமான நிதியியல் நிறுவனத்திடம் அல்லது இலங்கை மத்திய வங்கியின் ஏனைய திணைக்களங்களிடம் பரிசீலிப்பதற்காக சமர்ப்பிக்கப்படும். 
  4. தொடர்புடைய நிதியியல் நிறுவனம் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் முறைப்பாட்டாளருக்கு பொருத்தமான பதிலினை எழுத்து மூலம் நேரடியாக சமர்ப்பிக்கவும் முறைப்பாடு தீர்த்துக் கொள்வதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினை நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தவும் வேண்டப்படும். 
  5. நிதியியல் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பதிலுடன் ஆரம்ப முறைப்பாட்டாளர் திருப்தியடையாவிடின், நிதியியல் நிறுவனத்தினால் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டவாறான நடவடிக்கை (நடவடிக்கைகள்) நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தினால் மீளாய்வு செய்யப்படும். நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் விடயத்தினை மீண்டும் பரிசீலனையில் கொள்வதற்கு முறைப்பாட்டாளர் விரும்புவாராயின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தின் மேலதிகப் பரிசீலனைக்காக ஆரம்ப முறைப்பாட்டாளர் முறைப்பாட்டின் பிந்திய நிலைமை பற்றி மீண்டும் சமர்ப்பித்தல் வேண்டும்.
  6. அதன்பின்னர், நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தினால் மீளாய்வு செய்யப்பட்ட பதில் மற்றும் பொருத்தமான குறிப்புரைகளுடனான பிந்திய முறைப்பாடு பற்றிய நிலையினை குறித்துரைக்கப்பட்ட கால எல்லைக்குள் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு நிதியியல் நிறுவனத்திடம் மீள்பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும்.
  7. நிதியியல் நிறுவனத்தின் நடவடிக்கை(கள்) முறைப்பாடு தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுடன் இணங்காவிடின், தேவையான நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பொருத்தமான தகுதியுடைய அதிகாரிக்கு அறிவிக்கப்படும்.

 

நிதியியல் வாடிக்கையாளா்களான உங்களது உாிமைகள்

தபால் முகவரி : நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்,
  இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01
விசாரணைகளுக்கான துரித அழைப்பு : 1935
தொலைபேசி : +94 112477966
தொலைநகல் : +94 112477744
மின்னஞ்சல் :