• Inflation in August 2016

    தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் (2013=100) அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 யூலையின் 5.8 சதவீதத்திலிருந்து 2016 ஓகத்தில் 4.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2016 ஓகத்தில் உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்துள்ளன.  

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 யூலையின் 3.4 சதவீதத்திலிருந்து 2016 ஓகத்தில் 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.  .

  • The FIU Sri Lanka Entered into a Memorandum of Understanding with Suspicious Transaction Reporting Office of Singapore

    இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு (FIU - Sri Lanka) சிங்கப்பூரின் ஐயத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் அலுவலகத்துடன் (STRO) இருவயினொத்த தன்மை, ஒத்துழைப்பு தாற்பரியம் மற்றும் பரஸ்பர ஈடுபாடு என்பனவற்றின் அடிப்படையில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடல் தொடர்பான புலன்விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடுத்தல் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு வசதியளிக்கும் விதத்தில், ஒவ்வொரு நாட்டினதும் தேசிய சட்டவாக்கங்களின் கட்டமைப்பிற்குட்பட்டு 2016 செத்தெம்பர் 01ஆம் நாளன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை (MOU) மேற்கொண்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது நிதியியல் உளவறிதல் பிரிவு - இலங்கையினால் 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாட்டு நியதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

  • External Sector Performance - September 2017

    2017 செத்தெம்பரில் ஏற்றுமதித் துறைச் செயலாற்றமானது ஏற்றமதிகளில் ஏற்பட்ட இரட்டை இலக்க வளர்ச்சியினால் தூண்டப்பட்டு தொடர்ந்து மூன்றாவது மாதமாக மாதாந்த ஏற்றுமதிகளை ஐ.அ.டொலர் 1 பில்லியன் அளவினை விஞ்சிக் காணப்பட்டன. எனினும், இம்மாத காலப்பகுதியில் எரிபொருள் மற்றும் அரிசி என்பனவற்றின் உயர்ந்த இறக்குமதிகள் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2016 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் முக்கிய சேரிடங்களிலிருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் ஓரளவு குறைந்த எண்ணிக்கை காரணமாக சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் இம்மாத காலப்பகுதியில் மிதமாக வீழ்ச்சியடைந்தன. 2017இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியின் விளைவாக செத்தெம்பரிலும் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ந்தும் மிதமானதாகக் காணப்பட்டது.

  • Establishing the Department of Foreign Exchange to Implement the Foreign Exchange Act, No. 12 of 2017

    மூலதனப் பாய்ச்சல்களை மேலும் தளர்த்தல் மற்றும் நடைமுறைக் கணக்கு கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பல்வேறு வகையான வெளிநாட்டு நாணய/ ரூபாக் கணக்குகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை இலகுவாக்கும் நோக்குடன் புதிய வெளிநாட்டுச் செலாவணிச் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்கம் அதன் 2016ஆம் ஆண்டிறக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் அறிவித்திருந்தது. 

  • IMF Staff Concludes Visit to Sri Lanka to Discuss Progress of Economic Program

    தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

  • Inflation in October 2017

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 செத்தெம்பரில் 8.6 சதவீதத்திலிருந்து 2017 ஒத்தோபரில் 8.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 செத்தெம்பரில் 6.8 சதவீதத்திலிருந்து 2017 ஒத்தோபரில் 7.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

  • Monetary Policy Review - September 2016

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி, 2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் 2015இன் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 7.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2.6 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக தற்காலிகமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதேவேளை 2016இன் முதற்காலாண்டின் வளர்ச்சி 5.2 சதவீதத்திற்குத் திருத்தப்பட்டது. 

  • Sri Lanka Purchasing Managers’ Index Survey - October 2017

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒத்தோபர் மாதத்தில் 54.8 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 செத்தெம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4.2 புள்ளிகளாலான ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 செத்தெம்பர் உடன் ஒப்பிடும் போது 2017 ஒத்தோபரில் ஒரு குறைந்த வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட அதிகரித்திருந்த மட்டங்களிலிருந்து மெதுவடைந்த புதிய கட்டளைகள் மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களினால் உந்தப்பட்டது. உற்பத்தி மற்றும் கொள்வனவுகள் இருப்பு துணைச்சுட்டெண்களும் ஒத்தோபர் மாதத்தில் ஒரு குறைந்த வீதத்தில் விரிவடைந்திருந்தது. அதே வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் ஒரு உயர் வீதத்தில் நீட்சியடைந்ததுடன், இதற்கு வெளிநாட்டு வழங்குனர்களில் வேறு நாடுகளிலிருந்தான வழங்கல் கேள்விகளின் அதிகரிப்பு காரணமாக அவர்களுடைய வழங்கல் நேரம் நீட்சியடைந்தமையே காரணமாக அமைந்தது.

  • Financial Intelligence Unit of Sri Lanka Entered into a Memorandum of Understanding with Department of Immigration and Emigration

    2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுபப்தற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பெறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 செத்தெம்பர் 27ஆம் நாளன்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் திரு. எம்.என். ரணசிங்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு. எச்.

  • Statement of the Monetary Board on the Recent Media Reports

    அரச பிணையங்கள் சந்தையில் தொழிற்படுகின்ற முதனிலை வணிகர்களை ஒழுங்குமுறைப்படுத்துகின்றவர் என்ற முறையில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பேர்பெச்சுவல் றெசறீஸ் லிமிடெட்டின் பரீட்சிப்புத் தொடர்பான அறிக்கை பற்றி அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரந்தளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.  

Pages