-
SAARCFINANCE Coordinators’ Meeting held in Colombo on 1 September 2016
-
External Sector Performance - June 2016
விரிவடைந்துவரும் வர்த்தகப் பற்றாக்குறை, தொழிலாளர் பணவனுப்பல்களிலும் சுற்றுலா வருவாய்களிலும் காணப்பட்ட ஒப்பீட்டு ரீதியில் குறைந்த வளர்ச்சி என்பனவற்றின் காரணமாக 2016 யூனில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் தொடர்ந்தும் மிதமான தன்மையினைக் கொண்டதாகக் காணப்பட்டது. ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் படிப்படியான முன்னேற்றத்தினைக் காட்டிய வர்த்தகப் பற்றாக்குறை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டினதும் நலிவடைந்த செயலாற்றத்தின் காரணமாக மேயிலும் யூனிலும் மோசமடைந்தது. சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் ஆண்டின் மற்றைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் யூனில் குறைந்த வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வளர்ச்சியும் மிதமானதாகவே காணப்பட்டது.
-
Central Bank of Sri Lanka - 10th International Research Conference
இலங்கை மத்திய வங்கியின் 10ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2017 திசெம்பர் 8ஆம் நாளன்று நடைபெற்றது. பல்வேறுபட்ட விடயப்பரப்புகளிலிருந்து தமது அனுபவங்களையும் நோக்குகளையும் பகிர்ந்துகொள்வதற்கு கொள்கைவகுக்கின்ற மற்றும் கல்விசார் நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களுக்கான தளமொன்றினை வழங்குகின்ற அதேவேளை சமகால பேரண்டப் பொருளாதார கொள்கை விடயங்கள் மீதான புதுமையான கோட்பாட்டு ரீதியான மற்றும் அனுபவம் சார்ந்த ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்குடன் 'உறுதியான எதிர்காலமொன்றினை நோக்கிய பேரண்டப் பொருளாதார கொள்கை மறுசீரமைப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
-
The International Monetary Fund Releases the Fourth Tranche of USD 251.4 million under the Extended Fund Facility
பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் மூன்றாவது மீளாய்வினை நிறைவு செய்து, சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 177.774 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 251.4 மில்லியன்) பெறுமதியான நான்காவது தொகுதியினைப் பகிர்ந்தளித்துள்ளது.
-
The Central Bank Further Strengthens Resolution Measures on Finance Companies
ஒரு சில உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினால் எதிர்நோக்கப்படும் நிதியியல் பிரச்சனைகள் தொடர்பில் கரிசனைகளை ஏற்படுத்துகின்ற விதத்தில் ஒரு சில செய்தித் தாள்களில் வெளியிடப்பட்ட சில குறிப்பிட்ட தவறான செய்திகளை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது. ஆகவே பொதுமக்களின் நலன்கருதி அத்தகைய செய்திகளின் துல்லியமற்ற தன்மைக்குப் பின்னாலுள்ள உண்மைகளை தெளிவுபடுத்த மத்திய வங்கி விரும்புகின்றது.
-
Sri Lanka Purchasing Managers’ Index Survey - August 2016
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 யூலையின் 50.6 இலிருந்து ஓகத்தில் 53.5 இற்கு அதிகரித்தது. இது 2.9 சுட்டெண் புள்ளிகள் கொண்டதொரு அதிகரிப்பாகும். ஓகத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு புதிய கடட்ளைகள், தொழில்நிலை மற்றும் உற்பத்திச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகளே தூண்டுதலாக அமைந்தன. தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் மாற்றமடையாது காணப்பட்ட கொள்வனவுகளின் இருப்பு தவிர, அனைத்துத் துணைச் சுட்டெண்களும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்தன. குறிப்பாக, புதிய கடட்ளைகள், தொழில்நிலை மற்றும் நிரம்பலர் வழங்கல் நேர சுட்டெண்கள் யூலையில் அவதானிக்கப்பட்ட சுருக்கத்திலிருந்தும் மீட்சியடைந்தன. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து மற்றைய அனைத்துச் சுட்டெண்களும் சமநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலே காணப்பட்டன. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்னேற்றமொன்றினை எடுத்துக்காட்டின.
-
Release of 'A Step by Step Guide to Doing Business in Sri Lanka' and 'Sri Lanka Socio-Economic Data – 2016' Publications
'இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியானதொரு வழிகாட்டல்" நூலின் ஆறாவது பதிப்பு இலங்கை மத்திய வங்கியினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வெளியீடானது, இலங்கையில் வியாபாரத் தொழில்முயற்சிகளைத் தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடிவிடுதல் தொடர்பில் பயன்மிக்க ஒழுங்குமுறைப்படுத்தல் தகவல்களைக் கொண்டிருக்கின்றது. தொடர்பான நிறுவனங்களினால் முன்மொழியப்பட்டவாறு, 2016இன் முதற்காலாண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அவசியமான திருத்தங்கள் இவ்வெளியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
-
Sri Lanka Prosperity Index - 2016
சுபீட்சமானது, நாட்டினதும் அதன் மாகாணங்களினதும் சுபீட்சத்தின் மட்டத்தினை அளவிடுகின்றதும் ஒப்பீடு செய்கின்றதுமான ஒரு கலப்புக் குறிகாட்டியாக விளங்கும் இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணின்1 மூலம் அளவிடப்படுகிறது. இது முன்னைய ஆண்டின் 0.684 இலிருந்து 2016இல் 0.746 இற்கு மேம்பட்டிருக்கிறது. இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணின் துணைச் சுட்டெண்களின் அசைவினைப் பகுப்பாய்வு செய்யும் பொழுது, 2015 இலிருந்து 2016 வரையான காலப்பகுதியில் பொருளாதாரம் மற்றும் வியாபாரச் சூழல் மற்றும் மக்களின் நலனோம்புகை துணைச் சுட்டெண்கள் மேம்பட்ட வேளையில் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணில் மிதமான தன்மையொன்று காணப்பட்டது.
-
Regulatory Actions on Distressed Finance Companies
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ், நிதித் தொழிலைக் கொண்டு நடத்துவதற்காக சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கிய உரிமத்தினை இரத்துச் செய்வதற்கான அறிவித்தலை விடுப்பதற்கு 2017.11.06ஆம் திகதி தீர்மானித்திருக்கின்றது.
-
Transparency in Government Securities Market further Improves
இரண்டாவது கட்டமாக, 2016.09.15 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அரச பிணையங்கள் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களுக்காக, புளும்பேர்க் இலத்திரனியல் முறிகள் வர்த்தகப்படுத்தல் தளத்தில் வர்த்தக வங்கிகள் இணைந்து கொண்டன. இதற்கு முன்னதாக, அனைத்து முதனிலை வணிகர்களும் வர்த்தகத் தளத்தில் 2016.08.01இல் இணைந்து கொண்டனர். ஆகவே, தற்பொழுது அனைத்து முதனிலை வணிகர்களும் வங்கிகளும் இத்தளத்தில் தமக்கிடையே வர்த்தகப்படுத்தல்களை மேற்கொண்டதுடன், ரூ.50 மில்லியனுக்கும் அதற்கு மேற்பட்டதுமான தொகையைக் கொண்ட வணிகங்களைக் கொண்ட முதலீட்டாளர்கள் தொடர்பான அனைத்து வணிகங்களும் 30 நிமிடங்களுக்குள் கருமபீடங்களிலேயே மேற்கொள்ளப்பட்டன. மத்திய வங்கி, மறுநாள், வர்த்தகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பிணையத்தினதும் அடிப்படை விளைவுகள் மற்றும் அளவுகள் மீதான அடிப்படை வர்த்தகத் தகவல்களை அதன் வெப்தளத்தில் வெளியிடுகிறது.