• SL Purchasing Managers’ Index Survey - July 2016

    The Manufacturing PMI decreased to 50.6 in July indicating a neutral performance in comparison to 55.1 in June 2016. The decline in July in comparison to June was mainly due to the decrease in New Orders and Production Indices. The month-on-month decline of the PMI and the sub-indices follows the significant increase observed in the month of June compared to May 2016. All sub-indices of PMI, apart from Employment and Stock of Purchases Indices, declined compared to the previous month. Overall data points to an expansion on the strength of Production and Stock of Purchases Indices while all the other sub-indices remained below the neutral 50.0 threshold. The expectations for activities indicated an improvement for the next three months.

  • Issue of a Circulation Standard Commemorative Currency Note to Mark the 70th Independence Celebration of Sri Lanka

    நாட்டில் இடம்பெறும் 70ஆது சுதந்திர தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி ரூபா 1000 ஞாபகார்த்த நாணயத் தாளினை 04.02.2018 அன்று சுற்றோட்டத்திற்கு விடுகிறது. இது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 4ஆவது ஞாபகார்த்தத் தாளாகும்.

    ஞாபகார்த்த நாணயத் தாளின் அளவு, முதன்மையான நிறம் மற்றும் பாதுகாப்புப் பண்புகள் என்பன 11ஆவது நாணயத் தாள் தொடரிலுள்ள தற்போது சுற்றோட்டத்திலுள்ள ரூ.1000 நாணயத் தாளின் அதே பண்புகளுடன் பின்வரும் மாற்றங்களை மாத்திரம் கொண்டிருக்கும்.

    தாளின் முன்பக்கத்தில் (கீழே காட்டப்பட்டுள்ளது):

  • External Sector Performance - November 2017

    2017 நவெம்பரின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திற்கு அரச பிணையங்கள் சந்தைக்கான உயர்ந்த வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் காரணமாக சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு ஏற்பட்ட தொடர்ச்சியான உட்பாய்ச்சல் ஆதரவாக அமைந்ததுடன், சுற்றுலாவிலிருந்த வருவாய்கள் சிறிதளவில் மேம்பட்டன. 2016 நவெம்பரில் பதிவுசெய்யப்பட்ட தாழ்ந்த தளத்தின் ஓரளவு காரணமாக ஏற்றுமதிகளில் இரட்டை இலக்க வளர்ச்சி பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற போதும் உயர்ந்த இறக்குமதிகளின் காரணமாக இம்மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவிற்கு விரிவடைந்தது. அதேவேளை, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மோசமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகளின் காரணமாக தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தன. இதன்படி, சென்மதி நிலுவை 2017 நவெம்பர் இறுதியளவில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 2.0 பில்லியன் கொண்ட திரண்ட மிகையைப் பதிவுசெய்தது.

  • Inflation in December 2017

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013ஸ்ரீ100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 நவெம்பரின் 8.4 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பர்pல் 7.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு 2016 திசெம்பரில் நிலவிய உயர்ந்த தளத் தாக்கமே காரணமாகும்.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 நவெம்பரின் 7.5 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பரில் 7.7 சதவீதத்துக்கு அதிகரித்தது.

  • SL Purchasing Managers’ Index Survey - December 2017

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பர் மாதத்தில் 59.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும ;போது 0.3 சுட்டெண் புள்ளிகளாலான ஒரு சிறிதளவான அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 நவம்பர் உடன் ஒப்பிடும் போது 2017 திசெம்பரில்; ஒரு உயர்வான வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக அதிகரித்திருந்த உற்பத்தி துணைச்சுட்டெண்ணினால் உந்தப்பட்டது. மேலும் நவம்பர் 2017 உடன் ஒப்பிடுகையில் மாதகாலப்பகுதியில் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண் குறைவான வீதத்தில் அதிகரித்திருந்த வேளையில் கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் ஒரு உயர்வான வேகத்தில் அதிகரித்திருந்தது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு உயர்வான வீதத்தில் நீட்சியடைந்திருந்தது.

  • Statement Issued by the Central Bank of Sri Lanka

    2008 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியின் போது அரசாங்கப் பிணையங்கள் வழங்குவதில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது பற்றி இலங்கை மத்திய வங்கியிடமிருந்து உடனடி அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது. 

    இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் 2018 சனவரி 11ஆம் நாளன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் மீது கவனம் ஈர்க்கப்படுகின்றது. அதிலுள்ள இறுதிப்பந்தியானது தடயம்சார் கணக்காய்வொன்று நடாத்தப்படும் எனக் குறிப்பிடுகின்றது. இக்கணக்காய்வானது 2008  தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியின் போது அரசாங்கப் பிணையங்கள் மற்றும் ஊழியர் சேம நிதியத் தொழிற்பாடுகள் மீது கவனம் செலுத்தும். இது வெளித்தரப்பினர் மூலம் நடாத்தப்படும். தடயம்சார் கணக்காய்வு நிறைவுபெறுவதற்கு முன்னர் இது தொடர்பில் ஏதேனும் அறிக்கையொன்றினை வெளியிடுவது உசிதமானதல்ல.  

  • Statement by the Monetary Board of the Central Bank of Sri Lanka

    2015 பெப்புருவரி 01 இலிருந்து 2016 மாச்சு 31 வரையான காலப்பகுதியின் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் சனாதிபதி புலனாய்வுக் குழுவின் விதந்துரைப்புக்கள் மற்றும் அறிக்கை தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அறிக்கையும் பொதுப்படுகடன் மற்றும் ஊழியர் சேம நிதியத்தின் முகாமைத்துவத்தினையும் கட்டுப்பாட்டினையும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட வழிமுறைகளும்.

  • Inflation in July 2016

    தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் (2013=100) அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2015 யூனின் 6.4 சதவீதத்திலிருந்து 2016 யூலை 5.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2016 யூலையில் உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்துள்ளன.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 யூனில் 3.1 சதவீதத்திலிருந்து 2016 யூலையில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

  • Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited

    இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை தொடரும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, 2018 சனவரி 04ஆம் நாளன்று பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் லிமிட்டெட்டினை முதனிலை வணிகர் வியாபாரத்தினையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதிலிருந்து இடைநிறுத்துவதனை 2018 சனவரி 05ஆம் நாள் பி.ப. 04.30 மணியளவிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

  • Monetary Policy Review - August 2016

Pages