இலங்கை ரூபாவின் மீது நாணய அழுத்தத்தினை தேவைப்படுத்துகின்ற அடிப்படை அம்சங்கள் எதுவும் காணப்படவில்லை. தற்பொழுது மொத்த வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 9.1 பில்லியனாக ஆரோக்கியமான மட்டத்தில் காணப்பட்டதுடன் உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீத சுட்டெண்கள் நாணயம் போட்டித்தன்மையுடையதாக விளங்குவதனை எடுத்துக்காட்டின.
-
CBSL Determined to Curb Unwarranted Depreciation of the Rupee
-
SL Purchasing Managers’ Index - April 2018
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாச்சு மாதத்திலிருந்து 20.1 சுட்டெண் புள்ளிகள் குறைவடைந்து ஏப்பிறல் மாதத்தில் 45.5 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்வதன் மூலம் சரிவடைந்திருந்தது. முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட உயர் மட்டத்திலான நடவடிக்கைகளை தொடர்ந்து ஏப்பிறல் மாதத்தில் காணப்பட்ட புத்தாண்டு விடுமுறைகள் தயாரிப்பு நடவடிக்கைகளை பின்னோக்கி இழுத்தத்துடன் முன்னைய வருடங்களில் அவதானிக்கப்பட்ட போக்கிற்கு ஏற்ற விதத்திலும் காணப்பட்டது. ஏப்பிறல் மாதத்தில் கொ.மு.சுட்டெண்ணில் காணப்பட்ட சரிவிற்கு உற்பத்திகள் மற்றும் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட சரிவுகளே பெரிதும் காரணமாக அமைந்தன. கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் இம்மாதகாலப்பகுதியில் குறைவடைந்திருந்தன.
-
External Sector Performance – February 2018
சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சி, பங்குப் பரிவர்த்தனைக்கான தொடர்ச்சியான தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்க விரிவு காணப்படுகின்றமை 2018 பெப்புருவரியில் ஏற்றுமதித் துறைச் செயலாற்றத்தின் முக்கிய பண்பாகக் காணப்பட்டது. ஏறத்தாழ 3½ ஆண்டு கால ஒட்டுமொத்த வணிக இறக்குமதிகளில் மிக விரைந்த அதிகரிப்பிற்கு பின்னால் முக்கிய தூண்டுதலாக தங்க இறக்குமதிகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்புக் காணப்பட்டதுடன் இது, 2018 பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் விரிவடைய வழிவகுத்தது. 2018 சனவரியிலிருந்து அவதானிக்கப்பட்ட வளர்ச்சி உத்வேகத்தின் தொடர்ச்சியாக சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2018 பெப்புருவரியில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. எனினும், சனவரியில் காணப்பட்ட வளர்ச்சியினைத் தொடர்ந்து, 2018 பெப்புருவரியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் வீழ்ச்சியடைந்தன.
-
The Central Bank of Sri Lanka Maintains Policy Interest Rates Unchanged
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2018 மே 10ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்தது. இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் முறையே 7.25 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் தொடர்ந்தும் காணப்படும். சபையினது இத்தீர்மானத்தின் நோக்கம் யாதெனில், நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டத்தில உறுதிப்படுத்துவதும் அதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் சாதகமான வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்குப் பங்களிப்பதுமேயாகும்.
-
SL Purchasing Managers’ Index Survey - June 2016
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவதானிக்கப்பட்ட சுருக்கத்திலிருந்து 2016 யூனில் சாதகமான நிலைமையொன்றிற்கு மீட்சியடைந்து 55.1 சதவீத சுட்டெண் புள்ளியைப் பதிவுசெய்தது. இது 2016 மேயிலிருந்து 7.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். இம்முன்னேற்றத்திற்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே பக்கபலமாக விளங்கியது. மேலும், அனைத்துக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் நிரம்பலர் வழங்கலிலிருந்து விலகி முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்தது. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து அனைத்து துணைச் சுட்டெண்களும் தொழில்நிலைச் சுட்டெண்ணிலிருந்து விலகி 50.0 கீழ் மட்ட நிலைக்கு மேலே காணப்பட்டது. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பக்களும் அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்னேற்றமொன்றினை எடுத்துக்காட்டின.
-
Foreign Sentiment Signals Confidence in Sri Lanka’s Economic Performance and Potential
இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பில் அண்மைய நாட்களில் கடுமையான கரிசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதன் பின்னணியில், பன்னாட்டு மூலதனச் சந்தையிலிருந்து இலங்கையின் பொருளாதாரத்திற்கான வெளிநாட்டு ஆதரவு மட்டத்தினை மதிப்பிடுவது பயன்மிக்கதாகும். பன்னாட்டு மூலதனச் சந்தைகள் தமது கணிப்பீடுகளில் வளைந்து கொடுக்காமையினால் இது, இலங்கையின் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் பற்றிய சுயாதீன அளவீட்டுக்கருவியொன்றாகவிருக்கும்.
-
The Annual Report of the Central Bank of Sri Lanka for the Year 2017
1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இலங்கை நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது அறுபத்து எட்டாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் மாண்புமிகு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆண்டறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டவாறான 2017இல் இலங்கையின் பொருளாதாரத்தின் செயலாற்றம் பற்றிய சாராம்சம் கீழே தரப்படுகிறது: -
Clarification on Treasury Bond Service Payments
திறைசேரி முறிகளை முதிர்ச்சித் திகதிக்கு முன்னர் அவற்றிற்கான கொடுப்பனவுகளை செலுத்த போதுமான நிதியில்லை என்பதனைக் காட்டும் தவறான ஊடக அறிக்கையினை இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கின்றது.
இலங்கை மத்திய வங்கி மேற்குறிப்பிட்ட ஊடக அறிக்கைகளில் துல்லியமான தன்மையில்லை என்பதனை அவதானித்திருப்பதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு படுகடனைத் தீர்ப்பனவு செய்வதில் அரசாங்கம் அப்பளுக்கற்ற படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுப் பதிவேடுகளைக் கொண்டிருப்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. முதிர்ச்சியில் வட்டியையும் முதல் தொகையினையும் தவணைத் திகதிக்கு முன்னர் கொடுப்பனவு செய்யாது, தவணைத் திகதியில் (சரியான நேர கொடுப்பனவு) கொடுப்பனவு செய்வது, அரசாங்கத்தின் சார்பில் பொதுப்படுகடனை முகாமைப்படுத்துகின்ற அதன் முகவர் தொழிற்பாடுகளை ஆற்றும் போது இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படுகின்ற விதியாகும்.
-
inflation in June 2016
தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்படும் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மேயில் 5.3 சதவீதத்திலிருந்து 2016 யூனில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 யூனில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 மேயில் 2.7 சதவீதத்திலிருந்து 2016 யூலையில் 3.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
Inflation in March 2018
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் 2017 நவெம்பரிலிருந்து தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினைத் தொடர்ந்தது. எனவே ஆண்டுக்கு ஆண்டு தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் முதன்மைப் பணவீக்கம் 2018 மாச்சில் 2018 பெப்புருவரியின் 3.2 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் இது 2016 ஏப்பிறலிற்குப் பின்னர் ஏற்பட்ட மிகக்குறைந்த அளவுமாகும். 2018 மாச்சில் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சிக்கு சாதகமான வழங்கல் நிலைமைகள் காரணமாக அமைந்து 2018 மாச்சில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் வீழ்ச்சியடைய உதவியது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 பெப்புருவரியின் 7.2 சதவீதத்திலிருந்து 2018 மாச்சில் 6.7 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.