• Sri Lanka Purchasing Managers’ Index - August 2018

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட 57.2 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 ஓகத்தில் 58.2 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்திருந்தது. ஓகத்தில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடானது விசேடமாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் தயாரிப்பு துறையில் புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் வழிநடத்தப்பட்ட உற்பத்தியின் அதிகரிப்பினால் பிரதானமாக உந்தப்பட்டது. மேலும், தொழில்நிலையும் புதிய தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பினூடாக  ஒரு உயர்வான வீதத்தில் அதிகரித்திருந்ததுடன், இதற்கு விசேடமாக உணவு மற்றும் குடிபான துறையினுள் நடவடிக்கைகளின் அதிகரிப்பிற்கான சாதகமான எதிர்பார்க்கையினால் வழிநடத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கொள்வனவுகளின் இருப்பு, ஒரு மெதுவடைதலை காண்பித்ததுடன் விசேடமாக ஏனைய உலோகமல்லாத கனிப்பொருள் உற்பத்திகளின் தயாரிப்பு நடவடிக்கைளில் உணரப்பட்டது.

  • Statement of the Monetary Board on Treasury Bond Auctions

    இது, 2016 மாச்சு பிற்பகுதியில் இடம்பெற்ற திறைசேரி முறிகளின் ஏலங்கள் தொடர்பான அண்மைய கட்டுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பானதாகும். இக்கட்டுரைகள் மற்றும் கலந்துரையாடல்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் போதுமானளவிற்கு வெளிப்படையான தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளை ஏலமிடுவது தொடர்பில் 2015 பெப்புருவரியிலிருந்து முழுமையாகச் சந்தையினை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறைகளைப் போன்ற நடைமுறைகளே இப்பொழுதும் பின்பற்றப்பட்டிருக்கிறது என்ற உண்மையின்பால் பொதுமக்களின் கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றோம்.  

  • IMF Approves USD 1.5 Billion Extended Fund Facility for Sri Lanka

    இலங்கையின் சென்மதி நிலுவையின் நிலைமைக்கு ஆதரவளிப்பதற்கும் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த செயற்றிட்டத்திற்கு ஆதரவாகவும் சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 1.1 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) பெறுமதியான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு 2016 யூன் 03 அன்று பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஒப்புதலளித்தது. இத்தொகையானது பன்னாட்டு நாணய நிதியத்தினுடனான நாட்டின் தற்போதைய பொறுப்புப் பங்கின் 185 சதவீதத்திற்கு சமமானது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 119.9 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 168.1 மில்லியன்) பெறுமதியான முதலாவது தொகுதி இலங்கைக்கு உடனடியாக கிடைக்கதக்கதாக செய்யப்படும். எஞ்சிய தொகையானது மூன்று ஆண்டுகளைக்கொண்ட காலப்பகுதியில் ஆறு தொகுதிகளாக வழங்கப்படுவதுடன், கடைசி தொகுதியானது 2019 ஏப்பிறலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Release of 'Economic and Social Statistics of Sri Lanka - 2018' Publication


    இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் பொருளாதார சமுகப் புள்ளிவிபரங்கள் - 2018 என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

  • Clarification Regarding False Information Published in the Media About Expenses Incurred by the Governor of the Central Bank of Sri Lanka

    இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரச நிதியினைப் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரொருவரினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளது.  

    இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரோ அல்லது வேறு எந்தவொரு அலுவலருமோ தமது சொந்தச் செலவுகளுக்காக அரச நிதியினை பயன்படுத்தவில்லை என்பதனையும் எந்தவிதத்திலேனும் அரச நிதியினைத் தவறாகப் பயன்படுத்தவில்லையெனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுக் கொள்ளவிரும்புகின்றது. அனைத்து அலுவல்சார் கடமைகள் தொடர்பிலும் ஆளுநரும் இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கலந்துகொள்ளும் நிகழ்வுடன் தொடர்பிலுமான செலவினங்கள் மற்றைய அமைச்சு அல்லது திணைக்களங்களின் பொதுவான நடைமுறைகளை ஒத்தவிதத்திலேயே மத்திய வங்கியினாலும் வழங்கப்படுகின்றன.  

  • External Sector Performance - February 2016

    வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தமை, சுற்றுலாப் பயணிகளின் வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் வடிவில் ஏற்பட்ட வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல் என்பன தொடர்ந்தும் உறுதியான வேகத்தில் வளர்ச்சியடைந்தமையின் காரணமாக 2016 பெப்புருவரி மாத காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினைக் காட்டியது. இம்மாத காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்தபோதும், எரிபொருள் இறக்குமதிகள், உணவு மற்றும் குடிபானங்கள் மற்றும் போக்குவரதது; சாதனங்கள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி வர்த்தகப் பற்றாக்குறையில் சுருக்கத்தினை ஏற்படுத்தின. எனினும், அரச பிணையஙக்ள் சந்தையும 'கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும்' இக்காலப்பகுதியில் தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவு செய்தன.   

  • Inflation in May 2016

    தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருள் துணைத்துறை தவிர்ந்த உணவல்லா அனைத்து வகைகளும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளன.  

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 ஏப்பிறலில் 2.6 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 2.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

  • Monetary Policy Review - June 2016

    தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2016இன் முதற்காலாண்டில், உண்மை நியதிகளில் இலங்கையின் பொருளாதாரம் 2015இன் முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட 2.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 5.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருக்கிறது. இப்பொருளாதார வளர்ச்சிக்கு, கூட்டப்பட்ட பெறுமதி நியதிகளில், 2016இன் முதற்காலாண்டில் முறையே 8.3 சதவீதத்தினாலும் 4.9 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைந்த கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளே பெரும் உதவியாக அமைந்தன. அதேவேளையில், இக்காலப்பகுதியில் வேளாண்மையுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் 1.9 சதவீதம் கொண்ட மிதமான வளர்ச்சியைப் பதிவுசெய்தன. முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சி வீதம் இவ்வாண்டிற்காக எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியுடன் பெருமளவிற்கு ஒத்துச்செல்வதாகக் காணப்பட்டது.  

  • Commencement of Compensation Payment to CIFL Depositors

    நாணயச் சபையானது சென்றல் இன்வெஸ்ட்மன் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதியினை நிதி வியாபாரச் சட்டத்தின் 37(3)ஆம் பிரிவிற்கமைய 2018.03.05 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச் செய்தது.

    2010ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க (திருத்தப்பட்டவாறு) இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் ஒழுங்குவிதிகளிற்கமைய (இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதிகள்) 2018 ஓகத்து 27 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் சென்றல் இன்வெஸ்ட்மன் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என்பதை இலங்கை மத்திய வங்கி மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது. 

  • Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with Insurance Regulatory Commission of Sri Lanka

    2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறில் பிரிவு, காப்புறுதித் துறையில், பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலை முக்கிய கவனத்தில் கொண்டு அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வு மேற்பார்வையின் அடிப்படையில் கண்டறியப்பட்ட தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்காக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை 2018 ஓகத்து 01ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் மேற்கொண்டது.

Pages