• International Sovereign Bond Issuances of the Government of Sri Lanka

    இலங்கை அரசாங்கமானது 2007 தொடக்கம் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்கிவருகின்றது. இலங்கை அரசாங்கம் சுதந்திரம் பெற்றது முதல் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் உள்ளடங்கலாக அதன் படுகடன் கடப்பாடுகளை உரிய காலத்தில் தீர்ப்பனவு செய்வதன் மீது மாசற்ற பதிவொன்றினைப் பேணி வந்துள்ளது.

    2014 சனவரி மற்றும் ஏப்பிறல் மாதங்களில் வழங்கப்பட்ட முறையே ஐ.அ.டொலர் 1,000 மில்லியன் மற்றும் 500 மில்லியன் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் 2019 சனவரி மற்றும் ஏப்பிறல் மாதங்களில் முதிர்ச்சிபெறவுள்ளன. இலங்கை அரசாங்கமானது உபாயமற்ற சொத்துகளின் உரிமை மாற்றல் பெறுகைகள் ஊடாகவும் கூட்டு ஏற்பாடுகள் மூலம் நிதியளித்தல் ஊடாகவும் 2019இல் முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான முன்நிதியளித்தல் ஒழுங்குகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.

  • Recent Economic Developments: Highlights of 2018 and Prospects for 2019

    இலங்கை மத்திய வங்கி அதனது அரையாண்டு வெளியீடான – “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2018இன் முக்கிய பண்புகளும் 2019இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. 

    2018இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பான சுருக்கம் இவ்வெளியீட்டில் வெளிக்காட்டப்பட்டவாறு கீழே தரப்பட்டுள்ளது: 

  • External Sector Performance - August 2018

    2018 ஓகத்தில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் குறைந்தளவில் காணப்பட்டது. இம்மாத காலப்பகுதியில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, ஏற்றுமதி வருமானமானது இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை விஞ்சிக் காணப்பட்டமையின் காரணமாக ஓராண்டிற்கு முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சிறிதளவு குறுக்கமடைந்து காணப்பட்டது. அதேவேளை, நடைமுறைக் கணக்கிற்கான ஏனைய உட்பாய்ச்சல்கள் சுற்றுலா மற்றும் சுற்றுலாவிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்பு, தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றின் காரணமாக 2018 ஓகத்தில் தொடர்ந்தும் மிதமானதாகவே காணப்பட்டது. தேறிய அடிப்படையில் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு இம்மாத காலப்பகுதியில் வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தமைக்கு அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆகிய இரண்டிலுமிருந்து வெளிநாட்டு முதலீடுகள் எடுப்பனவு செய்யப்பட்டமையும் தொடர்ச்சியான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுமே காரணங்களாக அமைந்தன.

  • The Parliament of Sri Lanka passes the resolution to raise Rs. 310 billion by way of loans in or outside Sri Lanka for Active Liability Management by the Government of Sri Lanka

    பாராளுமன்றம் 2018.10.26 அன்று 2018ஆம் ஆண்டின் தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் “இலங்கை அரசாங்கம், 2018ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளில் குறித்துரைக்கப்பட்டவாறான அத்தகைய நோக்கங்களுக்காக ரூ.310.0 பில்லியனை விஞ்சாத தொகையொன்றினை கடன் மூலமாக இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ திரட்டுவதற்கான தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.”

  • Land Price Index – First Half of 2018

    உண்மைச் சொத்துத் துறையின் அபிவிருத்திகளைக் கண்காணிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியானது பல குறிகாட்டிகளைத் தொகுத்து பகுப்பாய்வு செய்கிறது. இதன்படி, காணி விலைச் சுட்டெண் (அடிப்படை ஆண்டு: 1998) 1998இலிருந்து 2008 வரை ஆண்டுதோறும் 2009 – 2017 காலப்பகுதியில் அரையாண்டிற்குகொரு தடவையும் தொகுக்கப்பட்டதுடன் அது கொழும்பு மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின் 50 நிலையங்களை உள்ளடக்கியிருந்தது.

  • Inflation in September 2018

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 ஓகத்தின் 2.5 சதவீதத்திலிருந்து 2018 செத்தெம்பரில் 0.9 சதவீதத்திற்கு 2016 சனவரிக்குப் பின்னர் மிகக் குறைந்ததொரு மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தது. செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்தமைக்கு தளத்தாக்கமும் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சியுமே தூண்டுதலாக அமைந்தன. ஆண்டிற்கு ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 ஓகத்தின் 4.7 சதவீதத்திலிருந்து 2018 செத்தெம்பரில் 4.0 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 

  • The Government of Sri Lanka secured USD 1 Billion Foreign Currency Term Financing Facility

    இலங்கை அரசாங்கம், 2018 மாச்சில் ஐக்கிய அமெரிக்க டொலர் அல்லது யப்பானிய யென் அல்லது யூரோ நாணய இன வகையில் குறித்துரைக்கப்பட்ட அல்லது அவை இணைந்த ஐ.அ.டொலர் 1,000 மில்லியன் வரையிலான வெளிநாட்டு நாணய தவணை நிதியிடல் வசதியொன்றிற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வங்கிகள் மற்றும் முதலீட்டு இல்லங்களுக்கு அழைப்பு விடுத்தது. 

  • Sri Lanka Purchasing Managers' Index - September 2018

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2018 ஓகத்தில் பதிவு செய்யப்பட்ட 58.2 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 செத்தெம்பரில் 54.1 சுட்டெண் புள்ளிகளுக்கு குறைவடைந்திருந்தது. செத்தெம்பரில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலுக்கு புதிய கட்டளைகள் மற்றும் தயாரிப்பில் விசேடமாக உணவு மற்றும் குடிபான உற்பத்திகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மெதுவடைதலினால் பிரதானமாக தூண்டப்பட்டது. உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி தேய்வினூடாக இறக்குமதி செய்யப்படுகின்ற மூலப்பொருட்களின் அதிகரித்திருந்த உள்நாட்டு செலவினம் காரணமாக இக்காலப்பகுதியில் விற்பனை விலைகளை அதிகரிக்க நேரிட்டது என பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இது அவர்களுடைய பொருட்களுக்கான கேள்வியினை குறைத்ததுடன், இதன் விளைவாக புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் குறைவடைந்தன. எவ்வாறாகினும், பிரதானமாக ஏற்றுமதி சார்ந்த புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி இக்காலப்பகுதியில் அதிகரித்திருந்தது. ஒட்டுமொத்த தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பும் மெதுவடைந்திருந்தது. அதேவேளை, நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரமானது வழக்கமாக பொருளாதாரத்தின் குறுகிய காலத்தில் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தின் துரித வளர்ச்சியை குறித்துக்காட்டுகின்றது. எவ்வாறாயினும், இச்சந்தர்ப்பத்தில், நீட்சியடைந்த நிரம்பலர் நேரமானது உற்பத்தியாளர்களின் உள்நாட்டு நாணய பெறுமதி தேய்வின் முன்னோக்கிய உறுதித்தன்மை எதிர்பார்க்கப்பட்டமை காரணமாக தாமாகவே உள்நாட்டு பொருட்களின் கிடைப்பனவு நேரத்தினை அதிகரித்தமையினால் ஏற்பட்டதாகும். ஆகையால், இது பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு விரிவாக்கத்தினை குறித்துக்காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான 50.0 எல்லைக்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்து ஒகத்துடன் ஒப்பிடுகையில் செத்தெம்பரில் மெதுவான வீதத்தில் விரிவடைந்தமையினைக் காண்பித்தது.

  • Progress on Implementation of the Recommendations of the Presidential Commission of Inquiry to Investigate, Inquire and Report on the Issuance of Treasury Bonds (COI) during the period from 1 Feb 2015 to 31 March 2016

    மத்திய வங்கியனாது, திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் திறைசேரி முறிகள் வழங்கல் பற்றிய பரிந்துரைகளுக்கிசைவாக இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகளின் பல்வேறு விடயப்பரப்புக்களில் வெளிப்படைத்தன்மையினையும் பொறுப்புக்கூறலினையும் வலுப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் சில ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கவிரும்புகின்றது.

    மத்திய வங்கி தொழிற்படுகின்ற சட்ட ரீதியான கட்டமைப்பு தொடர்பில் மத்திய வங்கிக்கு ஏற்புடையதான பல சட்டங்களை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாணயவிதிச் சட்டம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் தொடர்பில் திருத்தங்கள் முறைப்படுத்த்தப்பட்டு வருகின்றன. 

  • The Central Bank Responds to Misleading Newspaper Articles on Rupee Depreciation

    இலங்கை மத்திய வங்கி, 2018 ஒத்தோபர் 08 மற்றும் 09ஆம் திகதிய செய்தித்தாள்கள் பலவற்றில் வெளிவந்த ''ரூபாவின் பெறுமானத் தேய்வினை கையாள இயலாமல் இருப்பதன் மூலம் அரசாங்கமும் மத்திய வங்கியும் மிக முக்கியமான சட்ட ரீதியான கடமைகளை கைவிட்டிருக்கின்றன". என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தொடர்பில் பின்வரும் அறிக்கையினை வெளியிட விரும்புகின்றது.

Pages