Broad money (M2b) continued to grow at a high pace, recording a growth of 17.8 per cent (year-on-year) in December 2015 compared to 13.4 per cent in December 2014. The year-on-year growth of credit granted to the private sector by commercial banks accelerated during the year, with a growth of 25.1 per cent in December 2015 in comparison to 8.8 per cent in December 2014. In absolute terms, the expansion in private sector credit during 2015 amounted to Rs. 691.4 billion compared to Rs. 223.9 billion in 2014.
-
Monetary Policy Review - February 2016
-
Inflation in January 2016
Inflation, as measured by the change in the National Consumer Price Index (NCPI) (2013=100), which is compiled by the Department of Census and Statistics, decreased to -0.7 per cent in January 2016 from 4.2 per cent in December 2015, on year-on-year basis mainly due to the higher base of the corresponding period in 2015. Annual average NCPI inflation decreased to 2.9 per cent in January 2016 from 3.8 per cent recorded in December 2015.
-
Road Map 2019 - Monetary and Financial Sector Policies for 2019 and Beyond
எமது கொள்கை நிலையினை விளக்குவதற்கும் 2018ஆம் ஆண்டின் பொருளாதாரம் தொடர்பான எமது மதிப்பீடுகளை வழங்குவதற்கும் நான் இவ்வுரையினை தொடங்குகின்றேன். 2018இல் இலங்கையின் பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரம், நிதியியல் மற்றும் வெளிநாட்டுத் துறையினை மோசமாகப் பாதித்த புவியியல்சார் அரசியல் அபிவிருத்திகள் என்பனவற்றிலிருந்து முக்கியமாகத் தோன்றிய அதிகளவான சவால்களையும் எதிர்நோக்கியது.பல உள்நாட்டுச் சவால்களும் காணப்பட்டன.நிச்சயமற்ற அரசியல் நிலைமைகள் குறிப்பாக, ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டிற்கான சவால்களை அதிகரித்தன. 2017இன் குறைவடைந்த வளர்ச்சியைத் தொடர்ந்து 2018இலும் குறைவான பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தது. சாதகமான வானிலை நிலைமைகள் வேளாண்மைத் துறையின் மீளெழுச்சிக்கு ஆதரவளித்த வேளையில் பணிகள் நடவடிக்கைகளின் விரிவாக்கம் பரந்த அடிப்படையினைக் கொண்டிருந்தது.
-
Monetary Policy Review - No. 8 of 2018
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2018 திசெம்பர் 27இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அதன் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதெனத் தீர்மானித்துள்ளது. அதன்படி மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பன முறையே 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரமானது அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைந்து கொள்வதனை இயலுமைப்படுத்தும் வகையில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிப்படுத்துகின்ற பரந்த நோக்குடன் உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு நிதியியல் சந்தை என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் அதேபோன்று வெளிநாட்டுப் பொருளாதாரச் சூழலினையும் நாணயச் சபையானது கவனத்திற் கொண்டுள்ளது.
-
Inflation in November 2018
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013=100) ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2018 நவெம்பரில் அதன் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிலிருந்தும் மாற்றமடைந்து 2018 ஒத்தோபரின் 0.1 சதவீதத்திலிருந்து 1.0 சதவீதமான அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. 2018 நவெம்பரில் ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கத்தில் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டமைக்கு உணவு விடயங்களின் விலைகளில் காணப்பட்ட அதிகரிப்பு முக்கிய தூண்டுதலாக அமைந்தது. ஆண்டிற்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 2018 ஒத்தோபரில் -6.6 சதவீதத்திலிருந்து 2018 நவெம்பரில் -3.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், ஆண்டிற்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கம் 2018 ஒத்தோபரின் 5.8 சதவீதத்திலிருந்து 2018 நவெம்பரில் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
-
External Sector Performance - October 2018
2018 ஒத்தோபரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தது. ஒத்தோபரில் ஏற்றுமதிகளில் சிறிதளவு வளர்ச்சி காணப்பட்ட வேளையில், இறக்குமதிச் செலவினம் உயர்ந்த வளர்ச்சியைக் கொண்டிருந்தமையின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவிற்கு விரிவடைந்தது. எனினும், குறிப்பிட்ட இறக்குமதி வகைகளின் மீது அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளின் காலங்கடந்த தாக்கத்தின் காரணமாக இனிவரும் ஆண்டுகளில் இறக்குமதிகளின் அதிகரித்துச் செல்லும் போக்கு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் ஒத்தோபரில் ஆரோக்கியமான அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்த வேளையில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் சிறிதளவு அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. நிதியியல் கணக்கு, அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை என்பனவற்றிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்பாய்ந்தமையைக் காட்டியது.
-
External Sector Performance - December 2015
விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறை, சுற்றுலா வருவாய்களில் காணப்பட்ட தொடர்ச்சியான உயர்ந்த வளர்ச்சி மற்றும் மிதமான தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பனவற்றின் காரணமாக 2015 திசெம்பர் மாதத்தில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை கலந்த செயலாற்றமொன்றினைக் காட்டியது. ஒன்றுசேர்ந்த அடிப்படையில் 2015ஆம் ஆண்டுப் பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை சிறிதளவால் விரிவடைந்த வேளையில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. அதேவேளை, 2015இல் தொழிலாளர் பணவனுப்பல்கள் சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவு செய்தன. 2015ஆம் ஆண்டுப் பகுதியில் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சலின் முக்கிய மூலமாக நாட்டிற்கான இரண்டு பன்னாட்டு முறிகளின் வழங்கலும் இந்திய றிசேர்வ ;வங்கியின் பரஸ்பர பரிமாற்றல் ஒழுங்குகளும் காணப்பட்டன.
-
Sri Lanka Purchasing Managers’ Index - November 2018
நவம்பரில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலானது விசேடமாக புடவைகள்இ அணியும் ஆடைகள்இ தோல் மற்றும் அதனுடன் சார்ந்த உற்பத்தி பொருட்களின் தயாரிப்பு நடவடிக்கைகளின் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட மெதுவடைதலினால் பிரதானமாக உந்தப்பட்டது. எவ்வாறாகினும்இ உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைளின் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியானது நத்தார் பருவகால கேள்வியுடன் மேம்பாடொன்றினை காண்பித்தன. தொழில்நிலையானது இக்காலப்பகுதியில் மாற்றமடையாது காணப்பட்டதுடன்இ இதற்கு விசேடமாக தளபாடங்கள் தயாரிப்பு நடவடிக்கைகளில் மேலதிகமாக தொழிலாளர்களை சேர்ப்பதில் காணப்பட்ட இடையூறுகள் காரணமாக அமைந்தன.
-
Central Bank of Sri Lanka hold its 11th International Research Conference
இலங்கை மத்திய வங்கி அதன் 11 ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை 2018 திசெம்பர் 07ஆம் நாளன்று ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடத்தியது. இம்மாநாடானது சமகால பேரண்டப் பொருளாதார கொள்கை தொடர்பான கோட்பாட்டு மற்றும் அனுபவ ரீதியான ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் பல்லினத்தன்மைச் சூழலிலிருந்து வருகை தருகின்ற ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டறிந்த விடயங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பமொன்றினை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இவ்வாண்டின் மாநாடானது 'பணவீக்க இலக்கிடல் மற்றும் மத்திய வங்கியின் சுயாதீனம், பொறுப்புக்கூறும்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை" என்ற தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்பட்டது.
-
Compensation Payments to the Depositors of The Standard Credit and Finance Ltd. under Sri Lanka Deposit Insurance and Liquidity Support Scheme
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கு அமைய நிதி வியாபாரத்தினை மேற்கொள்வதற்காக ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட உரிமம் 2018.07.25ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச்செய்யப்படுள்ளது.
இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை துணையளித்தல் திட்டத்தின் கீழ் ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களுக்கு நட்டஈட்டினைக் கொடுப்பனவு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கை வைப்புக் காப்புறுதி ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கு அமைவாக நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும். விண்ணப்ப பிரமாணம் தொடர்பான அறிவுறுத்தல்கள் அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவிக்கப்படும்.