தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அவர்கள் கண்டறிந்த பூர்வாங்க விடயங்களை அறிவிக்கின்ற அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு, சபைக் கலந்துரையாடல் ஒன்றிற்கு வழிவகுக்காது.
-
IMF Staff Concludes Visit to Sri Lanka to Discuss Progress of Economic Reform Program - September 27, 2018
-
Monetary Policy Review - May 2016
விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி, ஓரளவு மெதுவான போக்கினை எடுத்துக் காட்டி 2016 பெப்புருவரியின் 19.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 18.9 சதவீததத்pனைப் பதிவு செய்தது. உள்நாட்டுக் கொடுகடனில் ஏற்பட்ட விரிவாக்கம் விரிந்த பணத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுகோலாக விளங்கியதுடன், இதில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் முன்னைய மாதத்தின் 26.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 27.7 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது. கொடுகடனின் துறைவாரியான பகிர்ந்தளிப்பினைப் பொறுத்தவரையில், கைத்தொழில் மற்றும் வணிகத் துறைகள் கொடுகடன் பகிர்ந்தளிப்பில் உயர்நத் மட்டங்களை கவர்ந்து கொண்ட வேளையில் தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களும் கணிசமான அதிகரிப்பினைப் பதிவு செய்தன.
-
Opening of Bank Accounts for the Disaster Relief Fund of the Government of Sri Lanka
2016 மேயில் நிகழ்ந்த வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கையர்களிடமிருந்தும் வெளிநாட்டு தயாளசிந்தைபடைத்தவர்களிடமிருந்தும் நன்கொடைகளைச் சேகரிக்கப்படுவதற்கு வசதியளிக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கம் சம்பத் வங்கி பிஎல்சி இல் பின்வரும் கணக்குகளைத் திறந்திருக்கிறது.
-
Inflation in April 2016
தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம் (2013=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மார்ச்சின் 2.2 சதவீதத்திலிருந்து 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வெறியமல்லா குடிவகைகள்; வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; ஆடைகள் மற்றும் காலணிகள் தளபாடங்கள்; வீட்டுஉபயோகச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு உபயோகப் பொருட்கள்; நலன்; போக்குவரத்து; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; கல்வி; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத்துறைகள் என்பன ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்தன.
-
Release of 'Sri Lanka Socio-Economic Data - 2018' Publication
இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடான ''இலங்கையின் சமூக பொருளாதார தரவுகள் 2018" என்ற அதன் தரவு ஏட்டினைத் தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது. இத் தொடரில் இது 41 ஆவது தொகுதியாகும்.
-
Inflation in August 2018
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2018 ஓகத்தில் உணவு விலைகளில் மாதாந்த வீழ்ச்சியினால் தூண்டப்பட்டு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 யூலையின் 3.4 சதவீதத்திலிருந்து 2018 ஓகத்தில் 2.5 சதவீதமாக குறைவடைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 யூலையின் 5.1 சதவீதத்திலிருந்து 2018 ஓகத்தில் 4.7 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.
-
Date of Announcement of the Monetary Policy Review - No. 6 of 2018
வழிகாட்டல் 2018 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகளுக்காக வழிகாட்டலில் அறிவிக்கப்பட்டவாறு, 2018 செத்தெம்பர் 28 வெள்ளிக்கிழமை வெளியிடுவதற்காக முன்னரே அட்டவணைப்படுத்தப்பட்ட 2018இன் 6ஆவது நாணயக்கொள்கை மீளாய்வானது 2018 ஒத்தோபர் 02ஆம் திகதி மு.ப 7.30 மணிக்கு மீள அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
-
Margin Deposit Requirement against Letters of Credit (LCs) opened with Commercial Banks for the Importation of Vehicles
வர்த்தக நோக்கங்களுக்கல்லாத பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற மோட்டார் வாகன இறக்குமதிக்காக வர்த்தக வங்கிகளில் திறக்கப்படுகின்ற நாணயக் கடிதங்களுக்கெதிராக உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் 100 சதவீத எல்லை வைப்புத் தேவைப்பாடொன்றினை இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை விதித்துள்ளது. அதற்கமைய, இவ்வாகன வகுப்புகளின் இறக்குமதிக்கான நாணயக் கடிதங்கள் குறைந்தபட்சம் 100 சதவீத காசு எல்லையுடன் மாத்திரம் மேற்கொள்ளக்கூடியதாகும்.
எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கான தீர்மானமானது தீர்க்கப்படாவிடின் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை அச்சுறுத்தக்கூடிய அண்மைக்கால அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது:
-
The Central Bank of Sri Lanka meets the People of Rajarata and Wayamba
இரஜரட்டை மற்றும் வயம்ப பிராந்திய மக்களுக்கு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மத்திய வங்கி சேவைகளின் இலகுவான கிடைப்பனவை மற்றும் மத்திய வங்கியின் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட பொதுமக்களுக்கான சேவைநாள் நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலக வளாகத்திலும் மற்றும் அனுராதபுர பொது மைதானத்திலும் (சல்காடோ) 2018 செத்தெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
-
Clarification on the Erroneous Report regarding Sri Lanka issued by Nomura Holdings Inc.
இலங்கை உள்ளிட்ட ஏழு வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் செலாவணி வீத நெருக்கடி இடர்நேர்வில் காணப்படுகின்றன என்பதனை காண்பிக்கின்ற நொமுறா கோல்டிங்ஸ் இன்ங் மூலமான பகுப்பாய்வொன்றினை பல பன்னாட்டு ஊடகத் தளங்கள் அண்மையில் எடுத்துக்காட்டியுள்ளன.
இலங்கையின் குறுகியகால வெளிநாட்டுப் படுகடன் ஐ.அ.டொலர் 160 பில்லியன் வரை உயர்வானது எனக் குறிப்பிடுகின்ற அறிக்கையினை சொல்லப்பட்ட ஊடகத் தளங்கள் மேலும் எடுத்துக்காட்டியுள்ளன. இலங்கையின் குறுகியகால வெளிநாட்டுப் படுகடன் எவ்விதத்திலேனும் இத்தொகைக்கு அண்மித்துக் காணப்படாமையினால், இலங்கை மத்திய வங்கியானது தமது கணிப்புகளில் உள்ள பிழைகளைச் சரிசெய்யுமாறு நொமுறா இனைக் கோரியது.1