• Sri Lanka Purchasing Managers’ Index - June 2018

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட 60.6 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 யூன் மாதத்தில் 57.6 சுட்டெண் புள்ளிகளுக்கு குறைவடைந்ததுடன் முன்னைய வருடங்களில் அவதானிக்கப்பட்ட போக்கிற்கு ஏற்ற விதத்திலும் காணப்பட்டது. இதற்கு உற்பத்தியில்  ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவிலான வீழ்ச்சி பாரியளவில் பங்களித்திருந்ததுடன் விசேடமாக உணவு, குடிபான மற்றும் புகையிலை உற்பத்திகளின் தயாரிப்பு நடவடிக்கைகளில் உணரப்பட்டது. புதிய கட்டளைகள் மற்றும் கொள்வனவுகளின் இருப்புக்களும் மாதகாலப்பகுதியில் குறைவடைந்திருந்தன. எவ்வாறாகினும், புடவைகள், அணியும் ஆடை, தோல் மற்றும் அதனுடன் சார்ந்த உற்பத்தி பொருட்களின் தயாரிப்பு நடவடிக்கைகளின் புதிய ஆட்சேர்ப்புகளின் காரணமாக ஒட்டுமொத்த தொழில்நிலை அதிகரித்திருந்தது.

  • Payment for Deposit Holders of Swarnamahal Financial Services PLC

    ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பன தொடர்பில் 2018.01.02ஆம் திகதியிடப்பட்ட பத்திரிகை வெளியீட்டிற்கு மேலதிகமானது. 

    வைப்பாளர்களின் கோரிக்கையினைப் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புப் பொறுப்புக்களின் 10 சதவீதத்தினை 2018.07.10ஆம் திகதி தொடக்கம் உடனடியாகக் கொடுப்பனவு செய்யுமாறு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

  • The Central Bank of Sri Lanka Maintains Policy Interest Rates at Current Levels

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2018 யூலை 5ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்தது. இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் முறையே 7.25 சதவீதமாகவும் 8.50 சதவீதமாகவும் தொடர்ந்தும் காணப்படும். நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டத்தில் உறுதிப்படுத்துவதும் அதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் சாதகமான வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்குப் பங்களிப்பதுமான நோக்குடன் இசைந்து செல்லும் வகையில் சபையின் தீர்மானம் அமைந்துள்ளது.

  • Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited

    பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கடட்ளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2018 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.

  • External Sector Performance - April 2018

    நடைமுறைக் கணக்கில் கலப்பான செயலாற்றமொன்று எடுத்துக்காட்டப்பட்டமைக்கிடையிலும், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட உட்பாய்ச்சல்களின் காரணமாக 2018 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை வலுப்பெற்றது. நிதியியல் கணக்கிற்கான உயர்நத் உட்பாய்ச்சல்கள், குறிப்பாக 12ஆவது நாட்டிற்கான பன்னாட்டு முறியின் வழங்கலின் பெறுகைகள் செயற்றிட்டக் கடன்கள் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவிற்கான கடன்கள் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தையில் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் என்பன மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018 இறுதியில் ஐ.அ.டொலர் 9.9 பில்லியன் கொண்ட வரலாற்றிலே மிக உயர்நத் மட்டமொன்றினை அடைவதற்கு வழிவகுத்தன. இறக்குமதிச் செலவினங்கள் உயர்நத் வேகத்தில் அதிகரித்த வேளையில் ஏற்றுமதி வருவாய்கள் தொடர்ந்தும் குறைவடைந்தமையின் காரணமாக நடைமுறைக்கணக்கு நியதிகளில், வர்தத்கப் பற்றாக்குறை 2018 ஏப்பிறலில் விரிவடைந்தது.

  • Statement Issued by Dr. Indrajit Coomaraswamy, Governor of the Central Bank of Sri Lanka

    அண்மைய நாட்களில், முன்னாள் நிதியமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் மூத்த துணை ஆளுநர் முனைவர். நந்தலால் வீரசிங்க அவர்களுக்கெதிராக மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்.

    இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற முறையில், நான் பணியிலிருந்து வருகின்ற இவ்விரண்டாண்டு காலப்பகுதியில், மிகச் சிறந்த பொருளியலாளரான வீரசிங்க வங்கியின் பணிக்கு வானளாவிய பங்களிப்பினை ஆற்றியிருப்பது பற்றி விதிமுறைசார்ந்த அறிக்கையொன்றினை விடுக்க விரும்புகின்றேன்.

    மேலும், முன்னாள் நிதியமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க தமது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்குப் பக்கபலமாக எந்தவொரு சான்றினையும் சமர்ப்பிக்கவில்லை என்பதனைக் குறிப்பிடுவதற்கு நான் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். 

  • The Department of Census and Statistics Compiles the Gross Domestic Product

    மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளைத் தொகுக்கின்ற ஏக பொறுப்பு 2007 இலிருந்து தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாட்டின் மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை மாற்றியமைப்பதில் இலங்கை மத்திய வங்கி தொடர்புபட்டிருக்கிறது என்ற பொருளில் ஆர்வமுடைய தரப்பினரால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பற்றி மத்திய வங்கி தனது அவதானிப்பினைச் செலுத்தியிருக்கிறது. இது பொதுமக்களைப் பிழையாக வழிநடத்துமொன்றாகும்.

  • Financial Intelligence Unit of Sri Lanka Entered into a Memorandum of Understanding with Securities and Exchange Commission of Sri Lanka

    2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில் இலங்கை நிதியியல் உளவறில் பிரிவு பிணையங்கள் துறையில் பணம் தூயதாக்கலுக்கெதிரான பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலை முக்கிய கவனத்தில் கொண்டு அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வின் அடிப்படையிலும் மேற்பார்வையின் அடிப்படையிலும் கண்டறியப்பட்டவை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்காக இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை 2018 யூன் 19ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் மேற்கொண்டது.

  • Inflation in May 2018

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 ஏப்பிறலின் 1.6 சதவீதத்திலிருந்து 2018 மேயில் 2.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2018 மேயில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உணவல்லா வகையில் காணப்படும் விடயங்களின் மேல்நோக்கிய விலைத் திருத்தங்களே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 ஏப்பிலின் 6.1 சதவீதத்திலிருந்து 2018 மேயில் 5.7 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 

  • Sri Lanka Purchasing Managers’ Index - May 2018

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட பருவகால சரிவடைதலை தொடர்ந்து மே மாதத்தில் மீட்சியடைந்து ஏப்பிறல் மாதத்திலிருந்து 15.1 சுட்டெண் புள்ளிகள் அதிகரித்து 60.6 சுட்டெண் புள்ளிகளை மே மாதத்தில் பதிவு செய்தது. கொ.மு.சுட்டெண்ணில் ஏற்பட்ட மீட்சிக்கு பிரதானமாக மாதகாலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய கடட் ளைகள் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்பிறல் மாதத்தில் பூர்த்திசெய்யப்படாத கடட்ளைகள் என்பவற்றை பூர்த்தி செய்வதற்காக உற்பத்தி அதிகரித்திருந்ததுடன், இதற்கு விசேடமாக புடவைகள், அணியும் ஆடை, தோல் மற்றும் அதனுடன் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலான குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பெரிதளவில் பங்களித்திருந்தது. புதிய கட்டளைகள், கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் அதிகரித்திருந்தன.

Pages