பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் முதலாவது மீளாய்வினை வெற்றிகரமாக மீளாய்வு செய்து கொண்டமையினைத் தொடர்ந்து சிஎஉ 119.894 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 162.6 மில்லியன்) பெறுமதியான இரண்டாவது தொகுதியினை 2016 நவெம்பர் 18ஆம் நாளன்று பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
-
The International Monetary Fund Releases the Second Tranche of US Dollars 162.6 million under the Extended Fund Facility
-
Inflation in October 2016
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 ஒத்தோபரின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பஙக்ளித்துள்ளன.
ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின்மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 செத்தெம்பரின் 3.8 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 4.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
Provincial Gross Domestic Product - 2016
2016ஆம் ஆண்டிற்கான மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மூலம் தொகுக்கப்பட்ட பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியினை பிரிப்பதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் கணிக்கப்பட்டிருக்கிறது. மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில், மொ.உ. உற்பத்தியிலுள்ள ஒவn; வாரு தொகுதி விடயத்தினதும் பெறுமதியானது மாகாண மட்டத்தில் தொடர்பான குறிகாடடி;களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டுள்ளது.
-
Monetary Policy Review - November 2016
எதிர்பார்க்கப்பட்டவாறு, 2015 இறுதியிலிருந்து மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்டுவரும் நாணயக் கொள்கை வழிமுறைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் 2016 செத்தெம்பர் காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் வளர்ச்சி குறிப்பிடத் தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி முன்னைய ஆண்டின் 27.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் 25.6 சதவீதத்தினைப் பதிவு செய்தது. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் வீழ்ச்சி ஏற்பட்டபோதும் விரிந்த பணத்தின் (M2b) வளர்ச்சி முன்னைய மாதத்தின் 17.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்; 18.4 சதவீதத்திற்கு விரிவடைந்தமைக்கு வர்த்தக வங்கிகளிலிருந்தான அரச துறையின் கடன்பாடுகள் இம்மாத காலப்பகுதியில் விரிவடைந்தமையே காரணமாகும்.
-
Licensing, Regulation and Supervision of Companies Carrying on Microfinance Business
தற்பொழுது ஒழுங்குமுறைப்படுத்தப்படாதிருக்கும் நுண்நிதியளிப்பு நிறுவனங்களை உள்ளடக்கும் விதத்தில் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பொன்றினை வழங்கும் குறிக்கோளுடன் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் நோக்கம் குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்கும் நுண்பாக தொழில்முயற்சிகளுக்கும் நிதியியல் பணிகள் வழங்கப்படுவதனை மேம்படுத்தல், நிதியியல் பணிகள் கிடைப்பதனை அதிகரித்தல், நுண்நிதியளிப்பு நிறுவனங்களின் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் முறைமையினையும் வலுப்படுத்துதல், பரந்தளவு நிதியிடல் மூலங்களைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் நுண்நிதியளிப்பு நிறுவனங்களுக்கு வசதியளித்தல், நுகர்வோர் பாதுகாப்பினை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பானதும் உறுதியானதுமான நிதியியல் முறைமையினை மேம்படுத்துதல் என்பனவாகும்.
-
Licensed Banks to enhance Minimum Capital by end 2020
பலமானதும் இயலாற்றல் மிக்கதுமான வங்கித்தொழில் துறையை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கான குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இந்நோக்கத்திற்காக கருத்திலெடுக்கப்பட்ட மூலதனமானது உயர் இழப்புக்களை ஈர்க்கும் இயலளவுள்ள உயர்தர மூலதனத்தினால் பெருமளவு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.
குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடுகளை உயர்த்துவது வங்கிகளின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையை பலப்படுத்துவதற்காக இலங்கையில் பாசல் III இனை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் என்பதுடன் வங்கித்தொழில் துறையின் திரட்சிப்படுத்தலுக்கும் வழிவகுக்கும். இதன்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கையில் நிறுவப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்பட இருக்கும் புதிய வங்கிகள் பின்வரும் மூலதனத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவைப்படுத்தப்படுகின்றன:
-
External Sector Performance - August 2016
வர்த்தகப் பற்றாக்குறை குறைவடைந்து, சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணவலுப்பல்களிருந்தான உட்பாய்ச்சல்கள் ஆரோக்கியமான வீதத்தில் வளர்ச்சியடைந்த வேளையில் 2016 ஓகத்து காலப்பகுதியில் வெளிநாட்டுத்துறை மிதமான செயலாற்றமொன்றினைப் பதிவுசெய்தது. 2016 ஓகத்து காலப்பகுதியில் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைப் பதிவுசெய்த போதும் இறக்குமதிகள் வளர்ச்சியடைந்து வர்த்தகப்பற்றாக்குறையில் விரிவொன்றினைத் தோற்றிவித்தன. எனினும், சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணவலுப்பல்களிலிருந்தான வருவாய்கள் வளர்ச்சியடைந்தமை வர்தத் கப்பற்றாக்குறையின் தாக்கத்தினை குறைவடையச்செய்தன. அதேவேளை, நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களுக்கு அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை என்பனவற்றிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகளும் 2016இல் அரசிற்கான நீண்டகால கடன் உட்பாய்ச்சல்களும் உதவியாக விளங்கின.
-
Inflation in September 2017
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 செத்தெம்பரில் 8.6 சதவீதத்திற்கு 2017 ஓகத்தின் 7.9 சதவீதத்திலிருந ;து அதிகரித்தது. 2017 செத்தெம்பரின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 ஓகத்தின் 6.5 சதவீதத்திலிருந்து 2017 செத்தெம்பரின் 6.8 சதவீதத்துக்கு அதிகரித்தது.
-
9th International Research Conference of Central Bank of Sri Lanka
இலங்கை மத்திய வங்கியின் 9ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு 2016 திசெம்பர் 2ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாடானது, சமகால தொனிப்பொருட்களின் மீதான ஆராய்ச்சிகளைத் தூண்டுவதனை நோக்கமாகக் கொண்டிருந்த வேளையில் மத்திய வங்கித்தொழில் மற்றும் பேரணட் பொருளாதார முகாமைத்துவம் என்பன தொடர்பான விடயஙக் ள் மீது மத்திய வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் நாணய அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்கள் அவற்றின் அண்மைக்கால கோட்பாட்டு ரீதியான அம்சங்களையும் அனுபரீதியான ஆய்வுகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒரு அரங்கினை உருவாக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
-
SL Purchasing Managers’ Index Survey - November 2016
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 நவெம்பரில் 58.4ஆக விளங்கி 2016 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் 1.9 சுட்டெண் புள்ளிகள் அதிகரிப்பினைக் கொண்டிருந்தமையின் மூலம் தயாரிப்பு நடவடிக்கைகள் ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் நவெம்பரில் விரிவடைந்தமையினை எடுத்துக் காட்டியது. இதற்கு இம்மாதகாலப்பகுதியில் விரிவடைந்த தொழில்நிலை மற்றும் உற்பத்தித் துணைச் சுட்டெண்களில் ஏற்பட்ட உயர்ந்தளவு வேகமே முக்கிய காரணமாகும். இம்மாத காலப்பகுதியில் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்ணும் அதிகரித்தது. நவெம்பரில் கொள்வனவுகள் இருப்புத்துணைச் சுட்டெண் வீழ்ச்சியடைந்து வரவிருக்கும் பண்டிகைக்காக இருப்புக்கள் பயன்படுதத்ப்படுகின்றமையை எடுத்துக்காட்டிய வேளையில் நிரம்பலின் வழங்கல் நேரம் நீண்டுகாணப்பட்டது. ஒட்டுமொத்த தரவுப்புள்ளிகள் விரிவடைந்த விடத்து மற்றைய அனைத்துத் துணைச்சுட்டெண்களும் சமநிலையான 50.0 அடிமட்டத்திறகு; மேலேயே காணப்பட்டன.