தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013ஸ்ரீ100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 நவெம்பரின் 8.4 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பர்pல் 7.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு 2016 திசெம்பரில் நிலவிய உயர்ந்த தளத் தாக்கமே காரணமாகும்.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 நவெம்பரின் 7.5 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பரில் 7.7 சதவீதத்துக்கு அதிகரித்தது.
            







