பிரதேச அலுவலகம் - கிளிநொச்சி

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகமானது வட மாகாணத்திலுள்ள புத்திஜீவிகள் குழுவொன்றின் பங்களிப்புடன் வட மாகாணத்தின் தற்கால சமூகப் பொருளாதார சவால்கள், சாத்தியமான பரிகாரங்கள், அதேபோன்று பரிந்துரைகள் என்பவற்றைப் பிரதிபலிக்கின்ற வட மாகாண முதன்மைத் திட்டமொன்றுக்கான "பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு" இனை முன்வைக்கின்றது. 

மேற்குறித்த நிகழ்வு 2019 பெப்புருவரி 08 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ்ப்பாண பொதுநூலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. 

 

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகமானது 29 யூலை 2020 அன்று யாழ்ப்பாண வணிகர் கழக கேட்போர்கூடத்தில் யாழ்ப்பாண வணிகர் கழக நிர்வாக அங்கத்தவர்களுடன் கொவிட் 19 நிவாரண  திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்றில் பங்கேற்றது. இதில் யாழ்ப்பாணத்தின் முன்னணிஉரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

வடக்கில் நிலவும் போருக்குப்பின்னரான சமூக பொருளாதார சவால்களை தற்போதுள்ள பிராந்திய இயலுமை மற்றும் வளங்களினால் வெளிப்படுத்தக்கூடியதான ஓர் புதிய அணுகுமுறையினை அவசியப்படுத்துகின்றதும் இலங்கை மத்திய வங்கியினால் பொறுப்புரிமையளிக்கப்பட்டதுமான அறிக்கை மதிப்பிற்குரிய நிதியமைச்சர் மங்கள் சமரவீரவினால்; மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், கொடைநிறுவன உறுப்பினர்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர், அரச திறைசேரியின் செயலாளர் மற்றும் மற்றும் ஏனைய சிரேஷ்ட அலுவலர்கள் முன்னிலையில் 22 பெப்புருவரி 2019 ஆம் நாளன்று நிதியமைச்சில் வெளியிடப்பட்டது.

இது வடக்கின் வாய்ப்புக்களினை யதார்த்தமாக்குகின்றதும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றதுமான ஓர் முன்னோக்கிய திட்டவரைபினை வழங்குவதுடன் தனித்துவமான ஓர் கொள்கை அணுகுமுறைக்கான அவசியத்தை வேண்டி நிற்கும் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மீதான போரின் தாக்கங்கள் மீதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அறிக்கையின் தரவிறக்கத்திற்காக : “வடமாகாண முதன்மைத் திட்டமொன்றிற்கான பொருளாதார அபிவிருத்திக்கட்டமைப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அவர்களும்; மூத்த அலுவலகர்களும் இணைந்து நுண்நிதித் துறையில் காணப்படும் பிரச்சனைகளுக்கான பொருத்தமான தீர்வுகளை ஆராய்வதற்காக 2020 செத்தெம்பர்; 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வடமாகாணத்திற்கு வருகை தந்;தனர். இதுதொடர்பில்இ இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகம் கிளிநொச்சியானது வடக்கிலுள்ள பல்வேறுபட்ட குழுமங்களை சேர்ந்த அக்கறையுடைய தரப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக நிகழ்ச்சி தொடரொன்றினை ஒழுங்குபடுத்தியிருந்தது.

இதன்படி வடமாகாண ஆளுநர் திருமதி. பி. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களுடன் அவரது அலுவலகத்தில் 07 செத்தெம்பர் 2020 அன்று நடைபெற்ற கலந்துரையாடலானது இந்நிகழ்ச்சித் தொடரினை ஆரம்பித்து வைத்தது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட அரச அதிபர்கள், உயர் அரச அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், நிதியியல் நிறுவனங்களின் வடமாகாண தலைவர்கள், தெரிவு செய்யப்பட்ட நுண்நிதி நிறுவன தலைவர்கள், கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் குடிசன சமூகப்பிரதிநிதிகள் ஆகியோருடனான பல்வேறுவிதமான கலந்துரையாடல்களானவை 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இதற்கு மேலதிகமாக, இவ் வருகையின் ஒரு பகுதியாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அவர்களும்; மூத்த அலுவலகர்களும் இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் உள்ள வெற்றிகரமான தொழில்முயற்சியாளர்கள் இருவரை சந்தித்திருந்தனர் (ரேஸ்ரா இண்ரஸ்ரிஸ், யாழ்ப்பாணம் மற்றும் பொசிபிள் கிறீன் (பிறைவேற்) லிமிட்டெட், கிளிநொச்சி).

 

மேலும் புகைப்படங்களை பாா்க்க

Five Sub-Help Desks are in operation at District Secretariats in all five Districts of Northern Province in addition to the Help Desk available at Regional Office – Kilinochchi with a view to guide and assist public on financial aspects.

Details of Sub Help Desk

 

 

 

 

Pages