வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிக்கின்ற அதேவேளை முறைசாரா வழிகளின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்யும் குறிக்கோளுடன் புதிய, குறைந்த செலவு பணவனுப்பல் வழிகளை அறிமுகப்படுத்துவதற்கான தேவையினை இனங்கண்டு, இலங்கைக்கென புதிய பணவனுப்பல் வழிகளை ஆய்வுசெய்து ஆலோசிப்பதற்கும் பணவனுப்பல் செய்யப்படுகின்ற செலவினைக் குறைப்பதன் மீது பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி பணியாற்றுக் குழுவொன்றினை நியமித்தது.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, ஹட்டன் நஷனல் வங்கி, ஹொங்கொங் அன்ட் சங்காய் வங்கி, கார்கில்ஸ் வங்கி, டயலொக் எக்ஸியாட்டா, மொபிட்டல் (பிறைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றிலுள்ள அனுபவம்பெற்ற தொழில்சார் நிபுணர்களை இப்பணியாற்றுக் குழு உள்ளடக்குகின்றது.









இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ‘இலங்கையில் வியாபாரம்; செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்’ நூலின் ஒன்பதாவது தொடர் பதிப்பு தற்பொழுது பொதுமக்களுக்காக ஆங்கில மொழியில் கிடைக்கப்பெறுகின்றது. வியாபாரச் சமூகத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தேவையான தகவல்களை உள்ளடக்குகின்ற இந்நூல் அத்தகைய தகவல்களை பெற்றுக்கொள்வதில் அவர்களின் நேரத்தையும் செலவையும் மீதப்படுத்த வசதியளிக்கின்றது. இலங்கையில் தொழில்முயற்சியொன்றை தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடுதல் போன்றவற்றிற்கு ஏற்புடைய வலுவிலுள்ள அனைத்து ஒழுங்குவிதிகளையும் வாய்ப்புமிக்க தொழில்முயற்சியாளர்களுக்கு உபயோகமான ஏனைய தகவல்களையும் தனியொரு மூலமாக இக்கையேடு தன்னகத்தே கொண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திரு . அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகர் அதி மேதகு தாரிக் முஹம்மது அரிபுல் இஸ்லாம் அவர்களை இன்று, (செத்தெம்பர் 24) இலங்கை மத்திய வங்கியில் சந்தித்திருந்தார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வங்காளதேச ஏற்றுமதிகளுக்காக கொழும்பு துறைமுகத்தின் உச்ச பயன்பாடு பற்றியும் இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.