இலங்கை மத்திய வங்கி பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலில் அறிவிக்கப்பட்டவாறு வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பின்வரும் தகவல்களை வழங்கவிரும்புகின்றது.
இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் ஏனைய அரசாங்கங்கள்இ மத்திய வங்கிகள்இ நிதியியல் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடி ஈடுபாடுகளின் தொடரொன்றினை ஆரம்பித்துள்ளன.









இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால், கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் அதிமேதகு செய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானி அவர்களுடன் கொவிட் தாக்கங்களிலிருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.