2026 ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது நிதியியல் முறைமை பற்றிய சந்தைப்பங்கேற்பாளர்களின் எண்ணப்பாங்கினைப் பிரதிபலிக்கின்றது. இந்த அளவீடு 2025 திசெம்பர் 19 முதல் 2026 சனவரி 16 வரையான, டிட்வா சூறாவளிக்குப் பின்னைய உடனடிக்காலத்தில் நடாத்தப்பட்டது.
-
The CBSL releases the key findings of the Systemic Risk Survey (SRS) – H1 2026
-
CCPI based headline inflation decelerated in February 2026
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2026 பெப்புருவரியில் குறைவடைந்துள்ளது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கம், 2025 சனவரியின் 2.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 பெப்புருவரியில் 1.6 சதவீதமாகப் பதிவாகியது.
-
External Sector Performance - January 2026
வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது அண்மைய மாதங்கள் மற்றும் 2025இன் சனவரி ஆகிய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2026 சனவரியில் பாரியளவிலான மிகையொன்றினைப் பதிவுசெய்தது. இது 2025இல் ஐ.அ.டொலர் 1.7 பில்லியன் தொகையிலான (தற்காலிகமானது) மதிப்பிடப்பட்ட மிகையினைப் பின்தொடர்வதுடன் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்தில் தொடர்ச்சியான மேம்பாட்டினைக் குறித்துக்காட்டுகின்றது.
ஏற்றுமதி வளர்ச்சியானது இறக்குமதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியினை விஞ்சிக் காணப்பட்டமையினால் வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2026 சனவரியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் சுருக்கமடைந்தது.
-
Sri Lanka PMI - Construction Increased Notably in January 2026
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2026 சனவரியில் 75.0 கொண்ட சுட்டெண் பெறுமதியினை அடைந்து 2020 யூலையில் 75.7 கொண்ட உச்சத்தின் பின்னர் அதன் இரண்டாவது அதிகூடிய வாசிப்பினை பதிவுசெய்தது. புதிய ஆண்டில் புதிய கருத்திட்டங்கள் தொடங்கப்பட்டமை அத்துடன் திசெம்பரில் எதிர்கொண்ட காலநிலை தொடர்புபட்ட இடையூறுகள் தளர்வடைந்தமை மூலம் தூண்டப்பட்டு மாதகாலப்பகுதியில் அதிகரித்த கருத்திட்ட நடவடிக்கைகளை அநேகமான நிறுவனங்கள் அறிக்கையிட்டன.
-
Land Valuation Indicator – Second Half of 2025
கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2024இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மேல்நோக்கிய போக்கில் சென்று, 2025இன் இரண்டாம் அரையாண்டில்; 10.6 சதவீதத்தினால் அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, முறையே 12.4 சதவீதம், 11.3 சதவீதம் மற்றும் 8.0 சதவீதம் கொண்ட ஆண்டு அதிகரிப்புகளைப் பதிவுசெய்த வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளுக்கிடையில் இவ்வதிகரிப்பு காணக்கிடைத்தது. அதேவேளை, காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் அதன் துணைக் குறிகாட்டிகளும் 2025இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் பதிவாகிய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில், 2025இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் அரையாண்டு அடிப்படையில் மிதமான அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. வர்த்தக மற்றும் வதிவிட காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள், 2025இன் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் உயர்வான அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.
-
Notice to General Public on Prohibited Pyramid Schemes
திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ்இ இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு “I.C.A.N Advertising (Pvt) Ltd மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களான icanonlineadvertising.com / bannercuts.com / bannercuts.lk / bannercuts.net / bannercuts.org” என்பன தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவித்துள்ளது என உறுதிசெய்து தீர்மானித்துள்ளது.
-
Central Bank of Sri Lanka to promote digital payments in Kurunegala
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் ஏனைய முதுநிலை அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2026 பெப்புருவரி 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் குருநாகலையில் வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் குறித்த விழிப்புணர்வினை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வுப் பிரச்சாரமொன்றினை இலங்கை மத்திய வங்கி ஏற்பாடுசெய்துள்ளது.
-
The Managing Director of the International Monetary Fund Visits the Central Bank of Sri Lanka
பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் முனைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கைக்கான அவரது விஜயத்தின் போது 2026 பெப்புருவரி 17ஆம் திகதி அன்று இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்தார். இவ்விஜயமானது இலங்கையின் பன்னாட்டு நாணய நிதிய அங்கத்துவத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவு என்பவற்றுடன் ஒருங்கிணைந்ததாகக் காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகள் ஆகியோரை முனைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சந்தித்தார்.
-
SL Purchasing Managers’ Index (PMI) – January 2026
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 சனவரியில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 சனவரியில் 56.1 சுட்டெண் பெறுமதியொன்றைப் பதிவுசெய்தது. தயாரிப்பு நடவடிக்கைகளில் 2025 திசெம்பரில் காணப்பட்ட பருவகால ரீதியிலான உச்சத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதமொன்றில் மாதத்திற்கு மாத விரிவாக்கமொன்றை இது பிரதிபலிக்கின்றது. மாதகாலப்பகுதியில் அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் காணப்பட்டன.
-
The Central Bank of Sri Lanka releases the Monetary Policy Report – February 2026
மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2026இற்கான அதன் முதலாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. ஆண்டொன்றிற்கு இருமுறை வெளியிடப்படுகின்ற நாணயக் கொள்கை அறிக்கையானது பொருளாதாரம், குறிப்பாக பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாடு, தொடர்பிலான முன்னோக்கிய பார்வையிலமைந்த நுண்ணோக்குகள் மற்றும் எறிவுகளிற்கான இடர்நேர்வுகள் என்பவற்றினை வழங்குகின்றது. இவ்வறிக்கையின் ஊடாக, மத்திய வங்கி அதன் அண்மைய நாணயக் கொள்கைத் தீர்மானங்களிற்குப் பின்னணியிலுள்ள நியாயபூர்வதன்மையினைத் தொடர்பூட்டுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறுந்தன்மை என்பவற்றினை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது.








