• External Sector Performance – November 2025

    நடைமுறைக் கணக்கானது முன்னைய இரண்டு மாதங்களில் பற்றாக்குறைகளைப் பதிவுசெய்ததன் பின்னர் 2025 நவெம்பரில் மிகையொன்றிற்குத் திரும்பலடைந்தது. நடைமுறைக் கணக்கு மிகையானது 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,678 மில்லியனாகக் காணப்பட்டது.

    வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 நவெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் விரிவடைந்தது. மேலும், 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையானது ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிற்கு 2024இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்தது.

  • Sri Lanka PMI - Construction increased in November 2025

    நடைமுறைக் கணக்கானது முன்னைய இரண்டு மாதங்களில் பற்றாக்குறைகளைப் பதிவுசெய்ததன் பின்னர் 2025 நவெம்பரில் மிகையொன்றிற்குத் திரும்பலடைந்தது. நடைமுறைக் கணக்கு மிகையானது 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,678 மில்லியனாகக் காணப்பட்டது.

    வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 நவெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் விரிவடைந்தது. மேலும், 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையானது ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிற்கு 2024இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்தது.

  • Closure of Public Debt Department of the Central Bank of Sri Lanka

    இலங்கை மத்திய வங்கி 2026 சனவரி 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் பொதுப் படுகடன் திணைக்களத்தை மூடி, பொதுப் படுகடன் திணைக்களத்தின் லங்கா செக்குயர் பிரிவினை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்திற்கு இடமாற்றுவதாக அறிவிக்கின்றது. 

  • Administrative Penalties imposed by the Financial Intelligence Unit on Reporting Institutions from July to September 2025

    2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் பிரகாரம், நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றினைப் பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

  • Provincial Gross Domestic Product (PGDP) - 2024

    நாட்டின் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் மேல் மாகாணம் பாரியளவிலான பங்களிப்பினைத் தொடர்ந்தும் தக்கவைத்திருக்கின்ற வேளையில் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் முக்கிய பங்களிப்பாளர்களாகத் தொடர்ந்தும் திகழ்கின்றன

    நாட்டின் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் மேல் மாகாணம் முக்கிய பங்களிப்பாளராகத் தொடர்ந்தும் காணப்பட்டு, 2024இல் 42.4 சதவீத பங்கொன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. பணிகள் மற்றும் கைத்தொழில் ஆகிய இரு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட வலுவான நடவடிக்கைகளில் மேல் மாகாணத்தின் முக்கியத்துவம் தெளிவாகப் புலப்பட்டது. அதேவேளை, 2024இல் பொருளாதாரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது உயர்ந்தளவிலான பங்குகளை முறையே வடமேல் (11.5 சதவீதம்) மற்றும் மத்திய (10.7 சதவீதம்) மாகாணங்கள் பதிவுசெய்துள்ளன. மேலும், மத்திய, கிழக்கு, வடமேல், சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலிருந்தான பெயரளவு மொ.உ.உற்பத்திகான பங்களிப்புக்கள் 2023 உடன் ஒப்பிடுகையில் 2024இல் அதிகரித்தன.

  • IMF Executive Board Approves US$206 Million in Emergency Financial Support for Sri Lanka

    பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது துரித நிதியளிப்புச் சாதனத்தின்  கீழ் அவசரகால நிதியளிப்பிற்கு ஒப்புதலளித்து,  பேரழிவுமிக்க டித்வா புயலிலிருந்து எழுகின்ற அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் சிறப்பு எடுப்பனவு உரிமை 150.5 மில்லியனுக்கு (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 206 மில்லியன், ஒதுக்கீட்டின் 26 சதவீதத்திற்கு நிகராக) உடனடி அணுகலை வழங்கியுள்ளது. 2025 திசம்பர் 19 அன்று பன்னாட்டு நாணய நிதியம் பின்வரும் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளது. பின்வரும் இணைப்பினூடாக அவ்வறிக்கையைப் பார்வையிடலாம்.

  • SL Purchasing Managers’ Index (PMI) – November 2025

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 நவெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

    தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 நவெம்பரில் 55.5 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்தது. அனைத்து துணைச் சுட்டெண்களிலிருந்தான சாதகமான பங்களிப்புக்களுடன் மாதத்திற்கு மாத அடிப்படையொன்றில் தயாரிப்பு நடவடிக்கைகளில் இது விரிவாக்கமொன்றை எடுத்துக்காட்டுகின்றது. 

  • Central Bank of Sri Lanka Conducts the International Research Symposium - 2025

    இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கி பன்னாட்டு ஆராய்ச்சி ஆய்வரங்கு – 2025 நிகழ்வினை “சுபீட்சத்திற்கான உறுதிப்பாடு” எனும் கருப்பொருளின் கீழ் 2025 திசெம்பர் 08 தொடக்கம் 10 வரை இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடாத்தியது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இவ்வாய்வரங்கானது பொருளாதார ஆராய்ச்சி மற்றும் சான்றுகளின் அடிப்படையிலமைந்த கொள்கை உருவாக்கத்தினை மேம்படுத்துவதற்கான இலங்கை மத்திய வங்கியின் அர்ப்பணிப்பினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் பின்வரும் மூன்று ஆராய்ச்சி நிகழ்வுகளைக் கொண்டிருந்தது:

  • Relief Measures to Assist Individuals and Businesses affected by the Recent Cyclonic and Flood Disasters by Licensed Banks

    அண்மைய புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டும், வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கிகள் சங்கத்தின் (உத்தரவாதம்) முன்மொழிவுகளையும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்குப் பங்கமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்றிறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்கான தேவையினையும் முன்னிறுத்தி, வருமானம் அல்லது வியாபாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள (இதனகத்துப் பின்னர் கடன்பாட்டாளர்கள் எனக்குறிப்பீடு செய்யப்படும்) தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்கான நிவாரண வழிமுறைகளை வழங்குவதற்கு அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் 2025.12.05 அன்று திகதியிடப்பட்ட 2025ஆம் ஆண்டின் 04ஆம் இலக்கச் சுற்றறிக்கையினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டது. 

  • CCPI based headline inflation remained unchanged in November 2025

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100)  அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக உயர்வடைந்ததன் பின்னர், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 நவெம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்டது.  

     உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2025 ஒத்தோபரில் பதிவாகிய 3.5 சதவீதத்திலிருந்து 2025 நவெம்பரில் 3.0 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2025 ஒத்தோபரில் பதிவாகிய 1.4 சதவீதத்திலிருந்து 2025 நவெம்பரில் 1.7 சதவீதமாக அதிகரித்தது. 

Pages