2021 செத்தெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபையின் செயலாளராக உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனை இலங்கை மத்திய வங்கி மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது.
உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக முதுமானிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரயோகப் புள்ளிவிபரவியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தினையும் விஞ்ஞானமானி (பௌதீக விஞ்ஞானம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் (CIMA) சக உறுப்பினரும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களின் (CMA) இணை உறுப்பினருமாவார்.









இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக திரு. அஜித் நிவாட் கப்ரால் 2021 செத்தெம்பர் 15, புதன்கிழமை அன்று கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டது. அதற்கமைய, திரு. கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகத் தொழிற்படுவார்.