இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 பெப்புருவரி 21இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கப்படுகின்ற நியதி ஒதுக்கு விகிதத்தை 2019 மாச்சு 01இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 1.00 சதவீதப் புள்ளியினால் 5.00 சதவீதத்திற்கு குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. நாணயச் சபையானது மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் மாற்றமின்றிப் பேணுவதற்கு தீர்மானித்ததுடன், அதன்படி மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே தற்போதைய 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரமானது அதனுடைய உள்ளார்ந்த வளத்தினை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதியாக பேணவேண்டிய பரந்த நோக்குடன், உள்நாட்டு பொருளாதாரம், நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து நாணயச் சபையானது இந்த முடிவுக்குவந்தது.
-
Monetary Policy Review - No. 1 of 2019
-
Inflation in January 2019
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100) ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2018 திசெம்பரின் 0.4 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் 1.2 சதவீதமாக அதிகரித்தது. 2019 சனவரியில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்பானது, தளத்தாக்கம் மற்றும் உணவல்லா வகைகளிலுள்ள பொருட்கள் விலைகளின் அதிகரிப்பினால் உந்தப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கம் 2018 திசெம்பரில் பதிவுசெய்யப்பட்ட 4.7 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் 6.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. எவ்வாறாயினும், ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கமானது 2018 திசெம்பரின் -4.5 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் -4.8 சதவீத்திற்கு மேலும் குறைவடைந்தது.
-
A Response From the Governor, CBSL to the News Item Published in LankaCNews
ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் தொடர்பான கொடுக்கல்வாங்கல்கள் பற்றி மாண்புமிகு விமல் வீரவன்ச பா.உ அவர்களினால் எனக்கு முகவரியிடப்பட்ட கடிதமென குறிப்பிடப்பட்டு லங்கா சி நியூஸ் வெப்தளத்தில் வெளியிடப்பட்ட 2019.02.17ஆம் திகதியிடப்பட்ட கட்டுரை பற்றி எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அத்தகைய கடிதமொன்றினை நான் இன்னமும் பெறாதபோதும் குறிப்பிட்ட வெப்தளம் தொடர்பில் பின்வரும் விடயங்களை பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
-
Sri Lanka Purchasing Managers’ Index - January 2019
தயாரிப்பு நடவடிக்கைகள் 2018 திசெம்பர் உடன் ஒப்பிடுகையில் சனவரி மாதத்தில் ஒரு உயர்வான வீதத்தில் அதிகரித்தது. இது, தொழில்;நிலை மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட விரிவாக்கத்தினால் விசேடமாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அத்துடன் சார்ந்த நடவடிக்கைகளினால் பிரதானமாக உந்தப்பட்டது. வெற்றிடங்களை நிரப்புவதற்கு சேர்க்கப்பட்ட புதிய தொழிலாளர்களின் தொழில்நிலையில் ஒரு குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் உணரப்பட்டது. அதன்படி, முன்னைய மாதத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கட்டளைகள் மற்றும் அதிகரித்த தொழில்;நிலையுடன் உற்பத்தியும் அதிகரித்திருந்தது
-
Sale of Subsidiaries, Sub-Subsidiaries and Investment Properties of ETI Finance Ltd
மேற்குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் 2019.02.13 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையுடன் தொடர்புடையது.
மேற்குறித்த கட்டுரையின் உள்ளடக்கங்களில் பல பிழையான மற்றும் தவறாக வழிநடாத்துகின்ற தகவல்கள் காணப்பட்டன என்பதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புக்களை பின்வருமாறு குறிப்பிட விரும்புகின்றது.
-
Regulatory Actions Taken by the Central Bank of Sri Lanka on The Finance Co PLC
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2008 ஆண்டின் குழுமத்தினுள்ளான பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய தேவையாகவுள்ள மோசமான திரவத்தன்மைப் பிரச்சனைகளுடன் தற்போது காணப்படுகின்றது. வாய்ப்புமிக்க முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீள்கட்டமைப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அத்தகைய முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. எனவே, தற்போதைய நிலைமையினைத் தொடர்வது கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலன்களுக்கு மேலும் கெடுதல் ஏற்படுத்துவதாகவிருக்கும்.
-
Sale of Subsidiaries, Sub-Subsidiaries and Investment Properties of ETI Finance Ltd
ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை
ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் அதன் துணை நிறுவனங்கள் துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களை விற்பனை செய்தமை பற்றியும் அது தொடர்பில் மத்திய வங்கியின் ஈடுபாடு பற்றியும் பரப்பப்படும் சில தவறான தகவல்களைப் பற்றியும் இலங்கை மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
குறிப்பிட்ட கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பின்வருவன பற்றித் தெளிவுபடுத்த விரும்புகின்றது.
-
Ensuring the Safety of Payment Card Transactions
தன்னியக்கக்கூற்றுப் பொறி வலையமைப்பினூடாக பணத்தினை எடுப்பனவு செய்தல் மற்றும் உலகளாவிய வணிகர்களுக்கிடையில் பரிமாற்றல்களைச் செய்தல் போன்ற வசதிகளை கொடுப்பனவு அட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து நிதியினை களவாடல் செய்யும்பொருட்டு தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் மற்றும் கொடுப்பனவு அட்டைகளை வாசிக்கும் பொறிகள் என்பன குற்றங்கள் இழைப்போரினால் தவறாக உபயோகிக்கக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றது.
-
A Commemorative Coin to Mark the 150th Anniversary of Colombo Municipal Council
The Central Bank of Sri Lanka (CBSL) issued a special silver uncirculated commemorative coin with a face value of Rs.500 to mark the 150th Anniversary of Colombo Municipal Council in recognition of its service to the country.
-
Monetary Policy Review - December 2015
The year-on-year growth of broad money (M2b) continued to expand at a high rate of 17.0 per cent in October 2015 compared to 16.0 per cent recorded in the previous month, driven by the expansion of credit extended to both private and public sectors by the banking system. Amongst contributory factors, credit granted to the private sector by commercial banks increased by 26.3 per cent, year-on-year, compared to 22.2 per cent in the previous month. Tentative data for November 2015 also shows that credit flows to the private sector continue to expand at a high rate. Meanwhile, excess liquidity in the domestic money market continues to remain high, fuelling monetary expansion.








