கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2025 ஒத்தோபரில் மேலும் அதிகரித்து, பணவீக்க இலக்கினை நோக்கி தொடர்ந்தும் முன்னேற்றமடைவதைக் காண்பிக்கின்றது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கமானது இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கு இசைவாக, (ஆண்டிற்கு ஆண்டு) 2025 செத்தெம்பரின் 1.5 சதவீதத்திலிருந்து 2025 ஒத்தோபரில் 2.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-   
          CCPI based headline inflation further accelerated as expected towards the target in October 2025     
  
 -   
          Sri Lanka PMI - Construction increased in September 2025    
  
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்)இ மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 செத்தெம்பரில் 67.6 இனை அடைந்து 2021இ;ன் பிந்திய பகுதி தொடக்கம் அவதானிக்கப்பட்ட நடடிவக்கையில் வலுவான அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. தொடர்ச்சியாக கருத்திட்ட வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றமை கட்டடவாக்கத்துறையில் வளர்ச்சிக்கு உறுதியாக துணையளித்துள்ளது என பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.
 -   
          External Sector Performance – September 2025    
  
இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட தொடர்ச்சியான மாதாந்த நடைமுறைக் கணக்கு மிகைகளைத் தொடர்ந்து, 2025 செத்தெம்பரில் மாதாந்த நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்தது. எனினும், முதல் ஒன்பது மாதங்களுக்கான ஒன்றுசேர்ந்த நடைமுறைக்கு கணக்கு மிகை ஐ.அ.டொலர் 1.9 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதிகளின் மிதமிஞ்சிய அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டு இறக்குமதிச் செலவினம் ஐ.அ.டொலர் 2 பில்லியனை விஞ்சியமையினால், வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு விரிவாக்கமொன்றைப் பதிவுசெய்தது.
 -   
          Appointment of New Deputy Governors of the  Central Bank of Sri Lanka    
  
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க ஆளும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, உதவி ஆளுநரான முனைவர் சி. அமரசேகர மற்றும் உதவி ஆளுநரான திரு. கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோரை முறையே 2025.10.24 மற்றும் 2025.11.03 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கௌரவ நிதி அமைச்சர் நியமித்துள்ளார்.
 -   
          Sri Lankan Delegation Engaged in High-Level Meetings at the 2025 World Bank Group/ International Monetary Fund Annual Meetings, and Governor was Honoured with “A Grade” Award by Global Finance Magazine    
  
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமையிலான இலங்கையின் பேராளர்குழு 2025 ஒத்தோபர் 13 – 18 காலப்பகுதியின் போது வோசிங்டன் டி.சி இல் 2025 உலக வங்கிக் குழுமம்/ பன்னாட்டு நாணய நிதிய வருடாந்த கூட்டத்தின் போது தொடரான உயர்மட்ட இருதரப்பு மற்றும் பல்தரப்புச் சந்திப்புக்களில் முனைப்புடன் பங்கேற்றது.
 -   
          SL Purchasing Managers’ Index (PMI) – September 2025    
  
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 செத்தெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 செத்தெம்பரில் 55.4 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவடைதலொன்றை எடுத்துக்காட்டுகின்றது. தொழில்நிலைக்கானவைத் தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் நடுநிலையான அடிப்படையான அளவிற்கு மேல் காணப்பட்டன.
 -   
          Appointment of a New Member to the Governing Board of the Central Bank of Sri Lanka    
  
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி, 2025.10.02 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளும் சபையின் உறுப்பினரொருவராக திரு. மைத்திரி எவன் விக்ரமசிங்க, சனாதிபதி சட்டத்தரணி அவர்களை நியமித்துள்ளார். 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் விவகாரங்களின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் பொதுவான கொள்கைகளின் நிர்ணயம் என்பவற்றை மேற்பார்வை செய்வதற்கு பொறுப்பான அமைப்பாக ஆளும் சபை தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 12(1)(ஆ) பிரிவின் நியதிகளுக்கமைய ஆளும் சபை உறுப்பினர்கள் நாணயக் கொள்கைச் சபையின் உறுப்பினர்களாகவும் இருப்பர்.
 -   
          IMF Staff Reaches Staff-Level Agreement on the Fifth Review Under Sri Lanka’s Extended Fund Facility Arrangement    
  
திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுவொன்று விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான ஐந்தாவது மீளாய்விற்காக 2025 செத்தெம்பர் 24 தொடக்கம் ஒத்தோபர் 9 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வு குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை எட்டியதையடுத்து பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2025 ஒத்தோபர் 09 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
 -   
          The Central Bank of Sri Lanka Releases the Financial Stability Review for the Year 2025    
  
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1)இன் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி 2025ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கின்றது. இச்சட்டரீதியான அறிக்கை, நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான கணிப்பீட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பனவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்வதோடு மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைகளினால் செயற்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மேற்கோடிடுகிறது. மேலும், 2025ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வின் சுருக்க அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை பிரதானமாக 2025ஆம் ஆண்டின் யூன் வரையான தரவுகளை உள்ளடக்குகின்றது. இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளத்தில் பார்வையிடமுடியும்.
 -   
          External Sector Performance – August 2025    
  
நடைமுறைக் கணக்கானது அதன் அதிகளவிலான மாதாந்த மிகைகளைப் பேணியதால் இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் 2025 ஓகத்தில் மேலும் தொடர்ந்தும் வலுவடைந்தது.
இறக்குமதியை விடவும் ஏற்றுமதியில் உயர்ந்தளவான வளர்ச்சியைப் பிரதிபலித்து, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 2025 ஓகத்தில் சுருக்கமடைந்தது.
 
            







