• External Sector Performance - April 2019

    சுருக்கமடைகின்றவர்த்தகப் பற்றாக்குறையினால் ஆதரவளிக்கப்பட்டு வெளிநாட்டுத் துறையானது 2019 ஏப்பிறலில் ஒப்பீட்டளவில் உறுதியானதாகக் காணப்பட்டது.

    2019 ஏப்பிறலில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2018 ஏப்பிறலின் ஐ.அ.டொலர் 999 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 797 மில்லியனுக்குசுருக்கமடைந்தது. 

    2019 ஏப்பிறலில் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்களவு குறைவு ஏற்பட்டமைக்கு, இறக்குமதிச் செலவினத்தில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏற்பட்ட 11 சதவீத வீழ்ச்சியும் ஏற்றுமதி வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏற்பட்ட 0.4 சதவீத சிறிதளவான அதிகரிப்பும் காரணமாக அமைந்தன.

  • Sri Lanka Purchasing Managers’ Index - May 2019

     2019 மேயில் தயாரிப்பு நடவடிக்கைகள் 50.7 சதவீதம் கொண்ட சுட்டெண் பெறுமதிக்கு மீட்சியடைந்தன. இது 2019 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 9.7 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். தயாரிப்பு கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணின் மீட்சிக்கு தயாரிப்பு மற்றும் புதிய கட்டளைகளில், குறிப்பாக, புடவைகளின் தயாரிப்பு, அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான உற்பத்திகள் என்பனவற்றின் உற்பத்திகளிலும் புதிய கட்டளைகளிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும். உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு, தொழிற்சாலைத் தொழிற்பாடுகளில் மேலதிக நேரங்களைப் பயன்படுத்தி குவிந்திருந்த கட்டளைகள் பூர்த்தி செய்யப்பட்டமையே காரணமாகும். குறிப்பாக, புடவை மற்றும் ஆடைகள் துறையிலுள்ள அநேக பதிலிறுப்பாளர்கள் இம்மாத காலப்பகுதியில் நிலுவையிலிருந்த கட்டளைகளை தீர்ப்பனவு செய்வதற்காக தாம் வார நாட்களிலும் அதேபோன்று வார இறுதியிலும் மேலதிக மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது என்பதனை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.

  • Central Bank of Sri Lanka Receives Presidential Award for Digital Excellence

    2019 யூன் 11ஆம் நாளன்று தாமரைத் தடாகத் திரையரங்கில் நடைபெற்ற சனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் விசேடத்துவம் மிக்க டிஜிட்டலுக்கான சனாதிபதி விருது இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது. நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வழியமைத்துக் கொடுத்த மாபெரும் பணியினை அங்கீகரிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கிக்கு இது வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு இலங்கை ரெலிகொம் பிஎல்சி இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

  • Regulatory Action on a Primary Dealer - Pan Asia Banking Corporation PLC

    பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல்கள் அடிப்படையான செயற்பாட்டிற்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் 2019 பெப்புருவரி 15ஆம் திகதி மு.ப. 10 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி அதன் முதனிலை வணிகர் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடைநிறுத்தலை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

  • Suspension of Business of NatWealth Securities Limited

    நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் முதனிலை வணிகர்களுக்கு ஏற்புடைத்தான பணிப்புரைகளுக்கு இணங்கியொழுகுவதற்கு தொடர்ச்சியாக தவறியமையினை பரிசீலனையில் கொண்டு, மத்திய வங்கியின் நாணயச் சபை 2019.05.30 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க செயற்படும் விதத்தில் 2019.05.31ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.

  • Monetary Policy Review - No. 3 of 2019

    மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 மே 30இல் நடைபெற்ற அதனது கூட்டத்தில் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பனவற்றை 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதம் மற்றும் 8.50 சதவீதமாகக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. பொருளாதாரமானது அதனது சாத்திய மட்டத்தினை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர கால பணவீக்கத்தினை நடு ஒற்றை மட்டங்களில் நிலைப்படுத்தும் பரந்த இலக்குடன் உள்நாட்டுப் பொருளாதாரம், நிதியியல் சந்தை மற்றும் உலகளாவிய பொருளாதாரம் போன்றவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளின் ஒரு கவனமான பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சபையானது இந்தத் தீர்மானத்திற்கு வந்தது.

  • External Sector Performance - March 2019

    2019இன் முதற்காலாண்டுப்பகுதியில், ஏற்றுமதி வருவாய்கள் 5.6 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்த வேளையில் இறக்குமதிச் செலவினம் 19.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, 2018இன் முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 2,982 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 1,661 மில்லியனுக்கு சுருக்கமடைந்தது.

    2019 மாச்சில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2018 மாச்சின் ஐ.அ.டொலர் 871 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 592 மில்லியனுக்குக் குறுக்கமடைந்தது. 

    2019 மாச்சில் வர்த்தகப் பற்றாக்குறையின் கணிசமான குறைப்பிற்கு இறக்குமதிச் செலவினம் 12.6 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தமை காரணமாக அமைந்ததுடன் இதற்கு ஏற்றுமதி வருவாய்கள் 2.6 சதவீதத்தினால் அதிகரித்தமை (ஆண்டிற்கு ஆண்டு) மேலும் ஆதரவாக விளங்கியது.

  • Inflation Increased in April 2019

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 மாச்சின் 2.9 சதவீதத்திலிருந்து 2019 ஏப்பிறலில் 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்புக்களே காரணமாகும். இதேவேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவுப் பணவீக்கமானது 2019 ஏப்பிறலில் -1.2 சதவீதமாகக் காணப்பட்ட வேளையில் உணவல்லாப் பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாக அதிகரித்த போக்கினைக்காட்டி நடைமுறை மாதத்தில் 7.5 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்தது.

  • Sri Lanka Purchasing Managers’ Index - April 2019

    2019 ஏப்பிறலில், தயாரிப்பு நடவடிக்கைகள், 2019 மாச்சிலிருந்து 25.9 சுட்டெண் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக முன்னெப்பொழுதுமில்லாத விதத்தில் தாழ்ந்த 41.0 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்தது. தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணின் வீழ்ச்சிக்கு உணவு, குடிபானம் மற்றும் புகையிலைத் தயாரிப்பு மற்றும்  புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான நடவடிக்கைகளுக்கான உற்பத்திகள் என்பனவற்றிற்கான புதிய கட்டளைகளிலும் அவற்றின் உற்பத்தியிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. இவ்வீழ்ச்சிக்கு, ஏப்பிறலில் காணப்பட்ட புத்தாண்டு விடுமுறைகளும் மற்றும் சுமூகமான தொழிற்சாலை தொழிற்பாடுகளைப் பாதித்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்புக் கரிசனைகளும் காரணங்களாக அமைந்தன.

  • Regulatory Actions Taken by the Central Bank of Sri Lanka on The Finance Co PLC

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் 2019 பெப்புருவரி 15ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தற்காலிக வழிமுறைகளாக, பல எண்ணிக்கையான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுத்தது. த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கு வசதியளிப்பதற்கான ஒழுங்குமுறைப்படுத்தும் வழிமுறைகள் புதிய வைப்புக்களை ஏற்றுக்கொள்தல், வைப்புக்களின் மீளப்பெறுகைகள், கடன்கள் மற்றும் முற்பணங்களின் பகிர்ந்தளிப்பு என்பனவற்றை இடைநிறுத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை உள்ளடக்கியிருக்கின்றன.

Pages