மத்திய வங்கியின் நாணயச்சபை இன்று, 2019 ஏப்பிறல் 08, நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி, மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரம் அதனது சாத்தியப்பாட்டு மட்டத்தை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதியாக பேணவேண்டியதன் பரந்த நோக்குடன், உள்நாட்டுப் பொருளாதாரம், நிதியியல் சந்தை அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்தின் அபிவிருத்திகள் என்பவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்திகளை மிகக்கவனமாக பகுப்பாய்வு செய்ததன் பின்னர் நாணயச்சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.
-
Monetary Policy Review - No. 2 of 2019
-
Opening of a Counter to Issue Coins to the General Public
2019 மாச்சு 27இல் இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1 இல் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமைக் காரியாலயக் கட்டிடத்திலுள்ள தரைத்தள காசுக் கரும பீடங்களில் ஒரு கருமபீடத்தினைப் பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி திறந்துவைக்கின்றது.
இக்கருமபீடமானது, அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தவிர்ந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மு.ப 9.00 மணி தொடக்கம் மு.ப 11.00 மணிவரை பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
-
Inflation Increased in February 2019
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100) ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் தளத்தாக்கத்தின் பிரதானமான காரணத்தினால் 2019 சனவரியின் 1.2 சதவீதத்திலிருந்து 2019 பெப்புருவரியில் 2.4 சதவீதமாக அதிகரித்தது. இதேவேளையில், ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கமானது 2019 சனவரியின் 6.5 சதவீதத்திலிருந்து 2019 பெப்புருவரியில் 6.7 சதவீதத்திற்கு அதிகரித்திருந்த வேளையில், உணவுப் பணவீக்கமும் 2019 சனவரியின் -4.8 சதவீதத்திலிருந்து 2019 பெப்புருவரியில் -2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
Issuances of International Sovereign Bonds (ISB) by the Central Bank of Sri Lanka
இலங்கை அரசாங்கத்தின் சார்பில், இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு கால நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் தொடர்பிலான ஆளுகை செயன்முறைகள் மற்றும் விளைவுகளை வழங்குவது தொடர்பான அண்மைய பத்திரிகைக் கட்டுரைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பின்வரும் தெளிவுபடுத்தல்களை வழங்க விரும்புகின்றது:
-
Sri Lanka Purchasing Managers’ Index - February 2019
தயாரிப்பு நடவடிக்கைகள் 2019 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2019 பெப்புருவரியில் மெதுவான வீதத்தில் அதிகரித்தமைக்கு குறிப்பாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான தயாரிப்புநடவடிக்கைகளில் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் குறைவடைந்தமையே முக்கிய காரணமாகும். இவ்வீழ்ச்சிக்கு பெப்புருவரியில் வேலைநாட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே முக்கிய காரணமாகும். புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் இணைந்துசெல்லும் விதத்தில் இம்மாதகாலத்தில் கொள்வனவுகளின் இருப்பும் குறைவடைந்தது.
எவ்வாறாயினும், இனிவரும் பருவகால கேள்விகளுக்காக வியாபார நடவடிக்கைகளை உயர்த்தும் பொருட்டு புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதன் காரணமாக தொழில்நிலையில் சிறிய முன்னேற்றமொன்று காணப்பட்டது. அதேவேளை, நிரம்பலர் வழங்கல் நேரம் சிறிதளவு வீதத்தினால் நீடிக்கப்பட்டது. பெப்புருவரியின் தொடக்கத்தில் பொருட்களின் வழங்கல் ஏற்பாடுகளும் சீன புத்தாண்டு பண்டிகை விடுமுறை காரணமாக ஏற்பட்ட வழங்கல் இடையூறுகளும் நிரம்பலர் வழங்கல் நேரத்தை நீடித்திருக்கின்றன. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் நீங்கலான அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான 50.0 இற்கு மேலான பெறுமதியைப் பதிவுசெய்தன.
-
External Sector Performance - December 2018
2018 திசெம்பரில் இறக்குமதிச் செலவினம் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமையுடன் வர்த்தகப் பற்றாக்குறையும் (ஆண்டிற்கு ஆண்டு) குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. 2018 திசெம்பரில் ஏற்றுமதிகள் 1.4 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) வளர்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் 15.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன.
2018ஆம் ஆண்டில் பொருட்களின் மொத்த ஏற்றுமதிகள் 4.7 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 11.9 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் இறக்குமதிகள் 6.0 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 22.2 பில்லியன் அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. இதன் விளைவாக, 2018இல் வர்த்தகப் பற்றாக்குறை 2017இன் ஐ.அ.டொலர் 9.6 பில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 10.3 பில்லியனுக்கு மிதமாக விரிவடைந்தது.
2018 திசெம்பரில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 4.8 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) கொண்ட ஆரோக்கியமான வளர்ச்சியுடன் தொடர்ந்தும் விளங்கி 2018இல் ஐ.அ.டொலர் 4.4 பில்லியன் கொண்ட மொத்த வருமானத்தினைத் தோற்றுவித்தது. இது 2017இனை விட 11.6 சதவீதம் கொண்டதொரு வளர்ச்சியாகும்.
-
The Democratic Socialist Republic of Sri Lanka USD 2.4 billion International Sovereign Bond Offering
இலங்கை மத்திய வங்கி, இலங்கை சனநாயக சோ~லிசக் குடியரசின் சார்பில் 2019 மாச்சு 7ஆம் நாளன்று, புதிய வழங்கல்களான 5 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் மற்றும் 10 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.4 பில்லியன் கொண்ட மூத்த பிணையிடப்படாத நிலையான வீதத்தினைக் கொண்ட முறிகளை வெற்றிகரமாக விலையிட்டதன் மூலமும் முறையே 2024 மாச்சு 14ஆம் நாள் மற்றும் 2029 மாச்சு 14ஆம் நாள் முதிர்ச்சிகளுடன் வழங்கியதன் மூலமும் ஐ.அ.டொலர் முறிச் சந்தைக்கு இலங்கை திரும்பியது. முறிகள் மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேற்றிங்ஸ் என்பனவற்றினால் 'B2', 'B' மற்றும் 'B' இல் முறையே தரமிடப்பட்டுள்ளன.
-
Land Price Index – Second Half of 2018
2018இன் இரண்டாம் அரையாண்டுப் பகுதியில் இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்படும் கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைச் சுட்டெண் 125.9 இனை அடைந்து 2017இன் இரண்டாம் அரையாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. காணி விலைச் சுட்டெண்ணின் மூன்று துணைச் சுட்டெண்களான வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் என்பன இவ்வதிகரிப்பிற்கு பங்களித்தன.
உண்மைச் சொத்துத் துறையின் அபிவிருத்திகளைக் கண்காணிக்கும் பொருட்டு, காணி விலைச் சுட்டெண் அரச மதிப்பீட்டுத் திணைக்களத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு பேர்ச்சு வெற்றுக் காணிக்கான விலையினை பயன்படுத்தி கொழும்பு மாவட்டத்தின்1 அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கும் விதத்தில் தொகுக்கப்படுகிறது. காணிப் பயன்பாட்டின் பல்லினத் தன்மையைக் கருத்திற்கொள்கையில், வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணிகளுக்காக மூன்று வெவ்வேறு துணைச் சுட்டெண்களாகக் கணிக்கப்பட்டதுடன் ஒரே விதமான சீர்மை அமைப்பினைப் பேணுவதற்காக இம்மூன்று துணைச் சுட்டெண்களினதும் சராசரியினைக் கருத்திற்கொண்டு ஒட்டுமொத்த காணி விலைச் சுட்டெண் கணிக்கப்படுகிறது.
-
IMF Reaches Staff-Level Agreement on the Fifth Review of Sri Lanka’s Extended Fund Facility
மனுவெல்லா கொறேட்டி தலைமையிலான பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழுவொன்று, மூன்று வருட விரிவாக்கப்பட்ட நிதி வசதியினால் துணைபுரியப்பட்ட இலங்கைப் பொருளாதாரத்தின் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஐந்தாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களுக்காக 2019 பெப்புருவரி 14-28 வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயம் செய்தது. விஜயத்தின் இறுதியில் செல்வி. கொறேட்டி பின்வருமாறான அறிக்கையை வெளியிட்டார்:
-
The Financial Action Task Force Endorsed the Progress Made by Sri Lanka
பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் தொடர்பான உலகளாவிய கொள்கையை நிர்ணயிப்பவரான நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு இலங்கை அதன் நடவடிக்கைத் திட்டத்தினை நிறைவுசெய்திருக்கின்றது என்பதனை ஆரம்பத்தில் தீர்மானித்ததுடன் இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதனை சரிபார்ப்பதற்கான தலத்திலான மதிப்பீடொன்றின் தேவைப்பாட்டினை கருத்திற்கொண்டு அதனை ஆரம்பித்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இது எதிர்காலத்தில் வலுவான நடைமுறைப்படுத்தல் இடம்பெறுவதற்கான அரசியல் கடப்பாட்டிற்கு அவசியமான ஒன்றாகவும் காணப்பட்டது.








