• Administrative Penalties imposed by the Financial Intelligence Unit (FIU) on Financial Institutions from 27 September to 31 December 2023

    2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

    அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு, நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு 2023 செத்தெம்பர் 27 தொடக்கம் திசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் கீழே காட்டப்பட்டவாறு, மொத்தமாக ரூ.14 மில்லியன் கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது. தண்டப்பணங்களாக சேகரிக்கப்பட்ட தொகைத் திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டன.

  • Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the Excise Department of Sri Lanka

    2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் நியதிகளின் பிரகாரம் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் வேறு தொடர்புபட்ட குற்றங்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தல்கள் தொடர்புடைய தகவல்களை பரிமாற்றிக்கொள்வதற்கு இலங்கை மதுவரித் திணைக்களத்துடன் 2024 சனவரி 09 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. 

    இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் பிரசன்னத்துடன் மதுவரி ஆணையாளர் நாயகம் திரு. ஜே. எம். எஸ். என். ஜயசிங்க, நிதியியல் உளவறிதல் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் திருமதி. ஈ. எச். மொஹொட்டி ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டனர். 

  • The Central Bank of Sri Lanka releases the Monetary Policy Report - February 2024

    இலங்கை மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் இன்று (2024.02.15) நாணயக் கொள்கை அறிக்கை - 2024 பெப்புருவரியினை வெளியிட்டது. இவ்வறிக்கையின் உள்ளடக்கமானது முக்கியமாக 2024 சனவரி மாத மீளாய்வின் போது நாணயக் கொள்கைத் தீர்மானத்தினை உருவாக்குவதில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

  • Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - January 2024

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 சனவரியில் தயாரித்தல் மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டின.

    தயாரித்தலுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரித்தல்), 2024 சனவாியில் 55.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. இம்மேம்படுதலுக்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

    பணிகளுக்கான இலங்கை கொ.மு.சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 60.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண்2 மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 சனவரியில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியது.

  • Appointment of Two New Members to the Governing Board of the Central Bank of Sri Lanka

     2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபை, இலங்கை மத்திய வங்கியின் நிருவாகம் மற்றும் அலுவல்களின் முகாமைத்துவம் என்பனவற்றை மேற்பார்வை செய்வதற்கான பொறுப்புக்களைக் கொண்ட சபையாகவும் இலங்கை மத்திய வங்கியின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானிக்கும் சபையாகவும் நிறுவப்பட்டிருக்கிறது.

    ஆளுகைச் சபை

     ஆளுகைச் சபையானது ஆளுகைச் சபையின் தலைவராகச் செயலாற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான முனைவர். பி. நந்தலால் வீரசிங்க, திரு. ஏ. என் பொன்சேகா (2022.07.27 இலிருந்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் நியமன உறுப்பினராக இருந்த இவர் ஆளுகைச் சபையின் உறுப்பினராகத் தொடர்ந்தும் பணியாற்றுகின்றார்) முனைவர். ரவி ரத்னாயக்க (2023.09.21 அன்று நியமிக்கப்பட்டார்), திரு. அனுஷ்க எஸ் விஜயசிங்க (2023.09.21 அன்று நியமிக்கப்பட்டார்) மற்றும் திரு. விஷ்  கோவிந்தசாமி (2023.10.26 அன்று நியமிக்கப்பட்டார்) ஆகியோரை உள்ளடக்கியிருக்கிறது.

    மேலும், நாம் இத்தால் திரு. ரஜீவ் அமரசூரிய மற்றும் திரு. மணில் ஜயசிங்க ஆகியோர் ஆளுகைச் சபைக்கு நியமிக்கப்பட்டிருப்பது பற்றி அறியத் தருகிறோம். புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரக் குறிப்புக்கள் பின்வருமாறு தரப்படுகின்றன.

  • Relaxation of Restrictions Imposed on the Standing Facilities

    திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் துணைநில் வசதிகளை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் பயன்படுத்துவதன் மீது இலங்கை மத்திய வங்கி 2023 சனவரி 16ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் மட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, துணைநில் வைப்பு வசதியைப் பெற்றுக்கொள்வது பஞ்சாங்க மாதமொன்றிற்கு உயர்ந்தபட்சம் ஐந்து (05) தடவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, துணைநில் கடன்வழங்கல் வசதியைப் பெறுவது ஏதேனும் வழங்கப்பட்ட நாளொன்றில் ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியினதும் நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டின் 90 சதவீதத்திற்கு வரையறுக்கப்பட்டிருந்தது.

  • The Government of Sri Lanka and the World Bank sign an agreement for financing of $150 million to strengthen the resilience of Sri Lanka’s financial sector

    நிதியியல் துறை பாதுகாப்புவலை வலுப்படுத்தல் செயற்றிட்டத்தினூடாக (Financial Sector Safety Net Strengthening Project) நிதியியல் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் இலங்கைக்கு ஐ.அ.டொலர் 150 மில்லியனை நிதியிடுவதற்கு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அதேவேளை, உலக வங்கிக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான செயற்றிட்ட உடன்படிக்கையானது செயற்றிட்ட நடைமுறைப்படுத்தல் ஏற்பாடுகளின் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்டது.

  • Governing Board Appoints Six New Assistant Governors

    ஆளும் சபை, 2024 சனவரி 19 அன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் முனைவர். சி. அமரசேகர, திருமதி, டபிள்யூ.ஏ. டில்ருக்ஷினி, முனைவர். பி.கே.ஜி. ஹரிஸ்சந்திர, திருமதி. டி.எஸ்.டபிள்யூ. சமரதுங்க, திருமதி. ஈ.எச். மொஹொட்டி, திருமதி. ஆர்.டீ.ரி. குணசேகர ஆகியோரை 2024 சனவரி 22 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் உதவி ஆளுநர்கள் பதவிக்கு பதவி உயர்த்தியுள்ளது. 

  • External Sector Performance - December 2023

    ஏற்றுமதி வருவாய்களுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட ஒப்பீட்டளவிலான பாரிய சுருக்கத்தினால் ஆதரவளிக்கப்பட்டு 2023இற்கான வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2010இலிருந்தான மிகவும் தாழ்ந்தளவிலான மட்டத்தினைப் பதிவுசெய்தது.

    வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 2023 திசெம்பரில் விரிவடைந்தது. இருப்பினும், இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் அண்மைக்காலத் தளர்த்தல்களுக்கு மத்தியில் இறக்குமதிகள் தொடர்ந்தும் மிதமடைந்துக் காணப்பட்டன. 

    தொழிலாளர் பணவனுப்பல்கள் 2023இல் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 6 பில்லியன் தொகை ஆரோக்கியமான மட்டமொன்றைப் பதிவுசெய்ததுடன் 2021 ஏப்பிறலிலிருந்தான உயர்ந்தளவிலான மாதாந்தப் பெறுமதியை 2023 திசெம்பரில் பதிவுசெய்தது. 

  • CCPI based headline inflation continued to increase in January 2024

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 திசெம்பரின் 4.0 சதவீதத்திலிருந்து 2024 சனவரியில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பானது அநேகமாக இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது

Pages