இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 செத்தெம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
-
The Central Bank of Sri Lanka maintains policy interest rates at their current levels
-
Functioning of Banks on 23rd September 2024
2024.09.23ஆம் தினம் அரசாங்கத்தினால் விசேட பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார் என்பதனைக் குறிப்பிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் மூலம் வழங்கப்பட்ட 2024.09.21ஆம் திகதியின் விசேட ஊடக அறிக்கையுடன் இது தொடர்புடையது.
-
Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - August 2024
2024 ஓகத்தில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 ஓகத்தில் 55.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. இது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதத்தில் காணப்படுகின்ற போதிலும் தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. தொழில்நிலை தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களும் ஓகத்தில் நடுநிலையான எல்லைக்கு மேல் இருந்தன.
-
Relaxation of the period applicable for exporters of goods to convert their export proceeds into Sri Lanka Rupees
பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை, குறிப்பாக உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை நிலைமைகளின் அபிவிருத்திகளைப் பரிசீலணையிற்கொண்டு பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு ஏற்புடைய காலப்பகுதியைக் கணிசமாகத் தளர்த்தி, இலங்கை மத்திய வங்கி “2024ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புதல் விதிகளை (விதிகள்) வழங்கியுள்ளது. இது 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் நியதிகளுக்கமைய 2024.07.01ஆம் திகதியிடப்பட்ட 2391/02ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
-
Central Bank of Sri Lanka Co-hosted the 5th CBSL-ADBI-APAEA Macroeconomics Conference
இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றிற்கிடையிலான பேரண்டப்பொருளாதார மாநாட்டிற்குத் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக 2024 செத்தெம்பர் 06ஆம் திகதியன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றுடன் கூட்டிணைந்து இலங்கை மத்திய வங்கி இணை அனுசரணை வழங்கியது.
-
CCPI based headline inflation decelerated sharply in August 2024
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 யூலையின் 2.4 சதவீதத்திலிருந்து 2024 ஓகத்தில் 0.5 சதவீதத்திற்கு சடுதியாக குறைவடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாகக் காணப்படுகின்றது.
-
Release of ‘Economic and Social Statistics of Sri Lanka – 2024’
‘Economic and Social Statistics of Sri Lanka – 2024’, an annual release of socio-economic statistics of the Central Bank of Sri Lanka, is now available for public access.
-
External Sector Performance July 2024
2024 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட விரிவாக்கமொன்றிற்கு மத்தியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் என்பவற்றிலிருந்தான அதிகரித்தளவிலான உட்பாய்ச்சல்களினால் உந்தப்பட்டு வெளிநாட்டுத் துறையானது தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினைக் கொண்டிருந்தது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 யூலையில் விரிவடைந்து (ஆண்டிற்காண்டு), 2024இன் இதுவரையான காலப்பகுதியில் உயர்ந்தளவிலான மாதாந்த வர்த்தகப் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.
-
SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – July 2024
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 யூலையில் மேலும் அதிகரித்து, 62.9 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்தது. பல்தரப்பு முகவராண்மைகள் மூலம் நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் மூலம் முன்னிலைவகித்து கட்டடவாக்கப் பணிகளில் உறுதியான அதிகரிப்பினை பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.
-
Land Valuation Indicator – First Half of 2024
கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி, 2024இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 6.9 சதவீதத்தினால் அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளும் இவ்வதிகரிப்புக்குப் பங்களித்து முறையே 8.5 சதவீதம், 8.5 சதவீதம் மற்றும் 3.7 சதவீதம் கொண்ட வருடாந்த அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. அரையாண்டு அடிப்படையில், காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் அதன் துணைக் குறிகாட்டிகளும் 2023இன் இரண்டாம் அரையாண்டில் பதிவாகிய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் 2024இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் உயர்வான வீதத்தில் அதிகரித்தன. மேலும், கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது வர்த்தக மற்றும் வதிவிட காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளுடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதத்தில் அதிகரித்தது.