• Financial Sector Performance in 2025

    வெளிநாட்டு பாதிக்கப்படக்கூடியத்தன்மைகள் தொடர்பில் கரிசனையொன்று காணப்பட்டபோதிலும், 2025இல் உள்நாட்டு பேரண்ட நிதியியல் நிலைமைகள் மேலும் வலுவடைந்து, தொடர்ச்சியான கொடுகடன் விரிவாக்கத்திற்கு ஆதரவளித்தது. 2025இன் இறுதியளவில் வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகள் வழங்கிய மொத்த கொடுகடன் அதிகரித்ததனூடாக கொடுகடன் வளர்ச்சி குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்தது. நிதியியல் துறையின் வெளிப்படுத்துகையானது, வலுவான தனியார் துறைக் கொடுகடன் வளர்ச்சியுடன், தனியார் துறையை நோக்கி மேலும் மாற்றமடைந்தமைக்கு மத்தியில் தற்போதைய இறை ஒருங்கமைப்பினைப் பிரதிபலிக்கின்ற வகையில் பொதுத் துறைக்கான வெளிப்படுத்துகை சிறிதளவில் சுருக்கமடைந்தது. அரசாங்கத்துடன் தொடர்புடைய வெளிப்படுத்துகை  வீழ்ச்சியடைந்திருந்த போதிலும், அது கணிசமானளவிலேயே காணப்படுகின்றது. வங்கித்தொழில்; துறையினது வைப்புகளுக்கான கொடுகடன் விகிதத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு, நிதியியல் இடையீடு உயர்வடைந்தது. 

  • SL Purchasing Managers’ Index (PMI) – February 2026

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 பெப்புருவரியில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

    தயாரிப்பிற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 பெப்புருவரியில் 56.8  சுட்டெண் பெறுமதியொன்றைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. அனைத்து துணைச் சுட்டெண்களும் இவ்விரிவடைதலுக்குச் சாதகமாகப் பங்களித்தன.

  • The Financial Intelligence Unit of Sri Lanka Releases the Executive Summary of the National Risk Assessment on Money Laundering, Terrorist Financing and Proliferation Financing – 2024/25

    அரசாங்க நிறுவனங்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் என்பவற்றை உள்ளடக்கி மொத்தமாக 86 நிறுவனங்களின் கூட்டிணைப்புடன் பணம் தூயதாக்கல், பயங்கரவாத நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தல் மீதான தேசிய இடர்நேர்வு மதிப்பீடு – 2024/2025 அறிக்கையை இலங்கை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்நிறுவனங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 200 நிபுணர்கள் இத்தேசிய பணிக்கு பங்களித்துள்ளனர். இது நாட்டின் மூன்றாவது தேசிய இடர்நேர்வு மதிப்பீடாவதுடன் இம்மதிப்பீட்டின் கீழ், நாட்டில் பணம் தூயதாக்கல், பயங்கரவாத நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தல் மீதான தேசிய இடர்நேர்வு மதிப்பீடு – 2024/2025, இடர்நேர்வுகளை அடையாளப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருந்தது. இலங்கை எதிர்கொள்கின்ற மிக முக்கிய பணம் தூயதாக்கல், பயங்கரவாத நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பெறுக்கத்திற்கு நிதியளித்தல் மீதான தேசிய இடர்நேர்வு மதிப்பீடு – 2024/2025 அறிக்கையானது  அச்சுறுத்தல்கள், பாதிக்கப்படும்தன்மைகள் மற்றும் ஒட்டுமொத்த இடர்நேர்வு என்பவற்றை இம்மதிப்பீடு எடுத்துக்காட்டுகின்றது.

  • The CBSL releases the key findings of the Systemic Risk Survey (SRS) – H1 2026

    2026 ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது நிதியியல் முறைமை பற்றிய சந்தைப்பங்கேற்பாளர்களின் எண்ணப்பாங்கினைப் பிரதிபலிக்கின்றது. இந்த அளவீடு 2025 திசெம்பர் 19 முதல் 2026 சனவரி 16 வரையான, டிட்வா சூறாவளிக்குப் பின்னைய உடனடிக்காலத்தில் நடாத்தப்பட்டது.

  • CCPI based headline inflation decelerated in February 2026

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100)  அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2026 பெப்புருவரியில் குறைவடைந்துள்ளது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கம், 2025 சனவரியின் 2.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 பெப்புருவரியில் 1.6 சதவீதமாகப் பதிவாகியது.

  • External Sector Performance - January 2026

    வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது அண்மைய மாதங்கள் மற்றும் 2025இன் சனவரி ஆகிய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2026 சனவரியில் பாரியளவிலான மிகையொன்றினைப் பதிவுசெய்தது. இது 2025இல் ஐ.அ.டொலர் 1.7 பில்லியன் தொகையிலான (தற்காலிகமானது) மதிப்பிடப்பட்ட மிகையினைப் பின்தொடர்வதுடன் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்தில் தொடர்ச்சியான மேம்பாட்டினைக் குறித்துக்காட்டுகின்றது. 

    ஏற்றுமதி வளர்ச்சியானது இறக்குமதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியினை விஞ்சிக் காணப்பட்டமையினால் வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2026 சனவரியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் சுருக்கமடைந்தது. 

  • Sri Lanka PMI - Construction Increased Notably in January 2026

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2026 சனவரியில் 75.0 கொண்ட சுட்டெண் பெறுமதியினை அடைந்து 2020 யூலையில் 75.7 கொண்ட உச்சத்தின் பின்னர் அதன் இரண்டாவது அதிகூடிய வாசிப்பினை பதிவுசெய்தது. புதிய ஆண்டில் புதிய கருத்திட்டங்கள் தொடங்கப்பட்டமை அத்துடன் திசெம்பரில் எதிர்கொண்ட காலநிலை தொடர்புபட்ட இடையூறுகள் தளர்வடைந்தமை மூலம் தூண்டப்பட்டு மாதகாலப்பகுதியில் அதிகரித்த கருத்திட்ட நடவடிக்கைகளை அநேகமான நிறுவனங்கள் அறிக்கையிட்டன.

  • Land Valuation Indicator – Second Half of 2025

    கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2024இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மேல்நோக்கிய போக்கில் சென்று, 2025இன் இரண்டாம் அரையாண்டில்; 10.6 சதவீதத்தினால் அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, முறையே 12.4 சதவீதம், 11.3 சதவீதம் மற்றும் 8.0 சதவீதம் கொண்ட ஆண்டு அதிகரிப்புகளைப் பதிவுசெய்த வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளுக்கிடையில் இவ்வதிகரிப்பு காணக்கிடைத்தது. அதேவேளை, காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் அதன் துணைக் குறிகாட்டிகளும் 2025இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் பதிவாகிய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில், 2025இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் அரையாண்டு அடிப்படையில் மிதமான அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. வர்த்தக மற்றும் வதிவிட காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள், 2025இன் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் உயர்வான அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.   

  • Notice to General Public on Prohibited Pyramid Schemes

    திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ்இ இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு “I.C.A.N Advertising (Pvt) Ltd மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களான icanonlineadvertising.com / bannercuts.com / bannercuts.lk / bannercuts.net / bannercuts.org” என்பன தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவித்துள்ளது என உறுதிசெய்து தீர்மானித்துள்ளது.

  • Central Bank of Sri Lanka to promote digital payments in Kurunegala

    இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் ஏனைய முதுநிலை அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2026 பெப்புருவரி 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் குருநாகலையில் வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் குறித்த விழிப்புணர்வினை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வுப் பிரச்சாரமொன்றினை இலங்கை மத்திய வங்கி ஏற்பாடுசெய்துள்ளது. 

Pages