• Appointment of a High-Level Task Force on Anti-Money Laundering and Countering the Financing of Terrorism (AML/CFT) and Preparations for Sri Lanka’s Third Mutual Evaluation on AML/CFT Framework

    பணம் தூயதாக்குதல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பு மீதான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு அண்மைய எதிர்காலத்தில் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரவிருக்கும் இப்பரஸ்பர மதிப்பீட்டின் போது நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் (பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான உலகளாவிய கொள்கையை நிர்ணயிக்கும் அமைப்பு) 40 பரிந்துரைகளுடனான தொழில்நுட்ப ரீதியான இணங்குவித்தலையும் 11 உடனடிப் பெறுபேறுக;டான அவற்றின் செயல்திறன்வாய்ந்த நடைமுறைப்படுத்தலையும் எடுத்துக்காட்டுவதற்கு இலங்கை வேண்டப்பட்டுள்ளது.

  • CCPI-based headline inflation continued to remain in the negative territory in January 2025

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைய, தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாகவும் எதிர்க்கணிய புலத்தில் காணப்பட்டு, 2024 திசெம்பரின் 1.7 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2025 சனவரியில் 4.0 சதவீதம் கொண்ட பணச்சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது.

  • External Sector Performance - December 2024

    தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நடைமுறைக் கணக்கிற்கான   வலுவான உட்பாய்ச்சல்கள் மற்றும் வலுவடைந்த ஒதுக்குகள் என்பவற்றுடன் இலங்கைப் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையானது 2024 இல் குறிப்பிடத்தக்களவு மேம்பட்டது.

  • SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – December 2024

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 திசெம்பரில் 51.4 ஆகவிருந்து கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. எனினும், தொழிற்துறை வளர்ச்சியினை நிலைநிறுத்துவதற்கு மிகவும் பாரியளவிலான கட்டடவாக்கக் கருத்திட்டங்களின் தேவையை அநேகமான அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் வலியுறுத்தினர்

  • The Central Bank of Sri Lanka maintains the Overnight Policy Rate (OPR) at the current level

    இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2025 சனவரி 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளைக் கவனமாக கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. பணவீக்கமானது 5 சதவீத இலக்கினை நோக்கி ஒருங்கிணைவதனை நிச்சயப்படுத்துகின்ற வேளையில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலினை அடைவதனை ஆதரவளிக்கின்ற விதத்திலான நடுத்தர கால நோக்கொன்றுடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. முன்னர் எறிவுசெய்யப்பட்டவாறு, தற்போதைய பணச்சுருக்கக் காலப்பகுதியானது நிர்வாகரீதியாக நிர்ணயிக்கப்பட்ட வலு விலைக் குறைப்புக்களின் பாரியளவிலான பெறுபேறொன்றாகக் காணப்படுவதாக சபை அவதானத்தில் கொண்டது. பணவீக்கமானது 2025இன் இரண்டாம் அரையாண்டில் இலக்கிடப்பட்ட மட்டத்தினை நோக்கிச் சீராகுவதற்குத் தொடங்க முன்னர் அடுத்த சில மாதங்களிற்கு இப்போக்கு தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

  • Report on the Deviation of Headline Inflation from the Inflation Target Set Out in the Monetary Policy Framework Agreement
    2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(5)இற்கமைய, மத்திய வங்கியானது நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணவீக்க இலக்கினைக் குறித்துரைக்கப்பட்ட இடைவெளியொன்றினுள் தொடர்ச்சியான இரண்டு காலாண்டுகளில் பூர்த்திசெய்யத் தவறினால் நாணயக் கொள்கைச் சபையானது நிதியமைச்சரினூடாகப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கத் தேவைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது பொதுமக்களுக்குக் கிடைப்பனவாகவும் இருத்தல் வேண்டும். மாண்புமிகு நிதியமைச்சருக்கும் மத்திய வங்கிக்குமிடையே 2023 ஒத்தோபர் 03ஆம் நாளன்று கைச்சாத்திடப்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையானது 5 சதவீதத்தை பணவீக்க இலக்காக விதித்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(5)இன் நோக்கத்திற்காக இடைவெளியை ±2 சதவீதப் புள்ளிகளாகக் குறிப்பிடுகின்றது.
  • Notice to General Public on Prohibited Pyramid Schemes

    பின்வரும் கம்பனிகள் உள்ளடங்கலாக “21” கம்பனிகள் திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை நடாத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

  • SL Purchasing Managers’ Index (PMI) – December 2024
    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 திசெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
     
    தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 திசெம்பரில் 57.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் மேலும் விரிவடைதலினை எடுத்துக்காட்டுகின்றது. தொழில்நிலை தவிர அனைத்து துணைச் சுட்டெண்களும் இம்மேம்பாட்டிற்கு சாதகமாகப் பங்களித்தன
  • Renewal of the Bilateral Currency Swap Agreement signed between the Central Bank of Sri Lanka and the People’s Bank of China

    2021ஆம் ஆண்டில் கைச்சாதிடப்பட்ட இருதரப்பு நாணயப் பரஸ்பரப் பரிமாற்றல் உடன்படிக்கையை மூல உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் 2024 திசெம்பரில் மேலும் மூன்று (03) ஆண்டு காலப்பகுதிக்கு வெற்றிகரமாகப் புதுப்பித்துக்கொண்டன. சீன யுவான் 10 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.4 பில்லியன்) கொண்ட நாணயப் பரஸ்பரப் பரிமாற்றல் வசதியானது சீனா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான நிதியியல் ஒத்துழைப்பினை எடுத்துக்காட்டுகின்றது.

    இலங்கை மத்திய வங்கியின் சார்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க, உடன்படிக்கையை கைச்சாத்திட்ட அதேவேளை சீன மக்கள் வங்கியின் சார்பில் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் திரு. பென் கொங்செங் கைச்சாத்திட்டார்.

  • Central Bank of Sri Lanka launches the Digital Payments Promotion Campaign 2025

    “டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்கள் ஊடாக எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்புப் பிரசாரம் 2025 நிகழ்வு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க அவர்களினால் 2025 சனவரி 09 அன்று அம்பாந்தோட்டை மாக்கம் ருகுணுபுர நிருவாகக் கட்டடத்தொகுதியில் தொடங்கிவைக்கப்பட்டது. இப்பிரசாரம் அம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் திரு. பிமல் இந்திரஜித் த சில்வா, நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பூட்டல் பணி வழங்குநர்கள் ஆகியோரின் ஆதரவுடன் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாரிய எண்ணிக்கையிலான அரசாங்க அலுவலர்கள், நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

Pages