• Asia Pacific Group on Money Laundering High-Level Visit to Sri Lanka Mutual Evaluation Preparation Briefing

    பணம் தூயதாக்குதல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமத்தின் உயர்மட்ட தூதுக்குழு, 2026 மாச்சில் தொடங்குவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ள பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் பற்றிய இலங்கையின் கட்டமைப்பு தொடர்பில் வரவிருக்கும் பரஸ்பர மதிப்பீட்டிற்கான இன்றியமையாத ஆலோசனைகளையும் உத்திகளையும் வழங்குவதற்காக 2025 மாச்சு 10 – 12 காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தது. தூதுக்குழுவானது இம்முக்கிய மதிப்பீட்டிற்கான இலங்கையின் தயார்நிலை பற்றி ஆராய்வதற்காக உள்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது. 

  • External Sector Performance – February 2025

    இலங்கைப் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையானது 2025 பெப்புருவரியில், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் கணிசமானளவு உயர்ந்த நடைமுறைக் கணக்கொன்றுடன் தொடர்ந்தும் வலுவடைந்தது.

  • CCPI in March 2025 signals easing of deflationary conditions

    மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைய 2025 மாச்சில் பணவீக்க நிலைமைகள் தளர்வடையத் தொடங்கியுள்ளன. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக ஏழாவது மாதமாகவும் எதிர்க்கணிய புலத்தில் காணப்பட்டது, இருந்தும் 2025 பெப்புருவரியில் பதிவாகிய 4.2 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2025 மாச்சில் 2.6 சதவீதம் கொண்ட மெதுவான பணச்சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது.  

  • Sri Lanka PMI - Construction expands further in February 2025

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 பெப்புருவரியில் 55.6 சதவீதமாக மேலும் அதிகரித்தது. மாதகாலப்பகுதியில் கட்டடவாக்கப் பணியில் தொடர்ச்சியான அதிகரிப்பை அநேகமான பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டனர், இருந்தும் வளர்ச்சியினை நிலைநிறுத்துவதற்கு மிகவும் பாரியளவிலான கருத்திட்டங்களுக்கான தேவையை வலியுறுத்தினர்.

  • Administrative Penalties imposed by the Financial Intelligence Unit (FIU) on Reporting Institutions from November to December 2024

    2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

  • Relief Measures to Assist the Affected Small and Medium Enterprises

    வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கிகள் சங்கம் (உத்தரவாதம்) உடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களுக்கமைய, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக, 2024.12.19ஆம் திகதியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் அதன் பிற்சேர்க்கையான 2025.01.01ஆம் திகதியிடப்பட்ட 2025ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க சுற்றறிக்கை ஆகியன அவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்தைப் போன்று திறன்மிக்க நிவாரண வழிமுறைகளை எல்லா உரிமம்பெற்ற வங்கிகளும் ஓர் சீர்முறையில் நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டன.  

  • The Central Bank of Sri Lanka keeps the Overnight Policy Rate (OPR) unchanged

    நாணயக் கொள்கைச் சபையானது நேற்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. நிலவுகின்ற நாணயக் கொள்கை நிலைமையானது, பணவீக்கம் 5 சதவீத இலக்கினை நோக்கி நகருவதனை நிச்சயப்படுத்தும் வேளையில் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்குமெனச் சபை நம்பிக்கை கொண்டுள்ளது.

  • Notice to General Public on Prohibited Pyramid Schemes

    Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd, திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

  • Shaping the future through Digital Transactions: Central Bank of Sri Lanka Promotes Digital Payments in the Nuwara Eliya District
    இலங்கை மத்திய வங்கி அதன் 2025ஆம் ஆண்டிற்கான மற்றுமொரு டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பு பிரச்சாரத்தை நுவரெலியாவில் 2025 மாச்சு 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர். முனைவர். நந்தலால் வீரசிங்க அவர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கின்றது.
  • SL Purchasing Managers’ Index (PMI) – February 2025
    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 பெப்புருவரியில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
     
    தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 பெப்புருவரியில் 56.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் விரிவடைவதனை எடுத்துக்காட்டுகின்றது. இவ்விரிவடைதலுக்கு அனைத்து துணைச் சுட்டெண்களும் சாதகமாகப் பங்களித்தன.

Pages