கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 யூலையில் மேலும் அதிகரித்து, 62.9 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்தது. பல்தரப்பு முகவராண்மைகள் மூலம் நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் மூலம் முன்னிலைவகித்து கட்டடவாக்கப் பணிகளில் உறுதியான அதிகரிப்பினை பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.
-
SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – July 2024
-
Land Valuation Indicator – First Half of 2024
கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி, 2024இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 6.9 சதவீதத்தினால் அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளும் இவ்வதிகரிப்புக்குப் பங்களித்து முறையே 8.5 சதவீதம், 8.5 சதவீதம் மற்றும் 3.7 சதவீதம் கொண்ட வருடாந்த அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. அரையாண்டு அடிப்படையில், காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் அதன் துணைக் குறிகாட்டிகளும் 2023இன் இரண்டாம் அரையாண்டில் பதிவாகிய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் 2024இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் உயர்வான வீதத்தில் அதிகரித்தன. மேலும், கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது வர்த்தக மற்றும் வதிவிட காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளுடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதத்தில் அதிகரித்தது.
-
The Central Bank of Sri Lanka releases the Monetary Policy Report – August 2024
மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2024இற்கான அதன் இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. இவ்வறிக்கையின் உள்ளடக்கமானது 2024 யூலை மீளாய்வின் போது நாணயக் கொள்கைத் தீர்மானத்தினை உருவாக்குவதில் மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
-
Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - July 2024
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 யூலையில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 யூலையில் 59.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டியது. இம்மேம்பாட்டிற்கு அனைத்து துணைச் சுட்டெண்களும் சாதகமாகப் பங்களித்தன.
-
Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the Registrar General of the Registrar General’s Department
இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் இணைந்த குற்றங்கள் தொடர்பில் நம்பிக்கைப் பொறுப்புக்கள் மற்றும் ஆதனப் பதிவுகளுடன் தொடர்புடைய நம்பிக்கைப் பொறுப்புக்கள், ஆதனப் பதிவுகள் அத்துடன் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பதிவாளர் நாயகத்துடன் 2024 ஓகத்து 06 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் நிதியியல் உளவறிதல் பிரிவினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
-
IMF Staff Concludes Visit to Sri Lanka
அண்மைய பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்குக் கீழான பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் என்பன தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சிரேஷ்ட பணிக்குழுத் தலைவர் திரு. பீற்றர் புரூவர் தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிக்குழுவொன்று 2024 யூலை 25 தொடக்கம் ஓகத்து 02 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தது.
-
The Central Bank of Sri Lanka publishes its inaugural Market Operations Report
நடைமுறையிலுள்ள நாணயக் கொள்கை நிலைக்கு அமைவாக மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற நாணயத் தொழிற்பாடுகள் பற்றி ஆர்வலர்களுக்கிடையில் விழிப்புணர்வையும் அறிவையும் அதிகரிக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி அதன் தொடக்க சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் செயன்முறையினை ஆக்கபூர்வமாக தொடர்பூட்டுவதனூடாக நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்குக் கட்டமைப்பின் கீழ் மத்திய வங்கியின் வெளிப்படைத் தன்மையினையும் பொறுப்புக்கூறலையும் மேம்படுத்துவதற்கான வினையூக்கியொன்றாக சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை அமையும்.
-
External Sector Performance June 2024
2024இன் முதலாவது அரையாண்டில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது சிறியளவு உயர்வான வர்த்தகப் பற்றாக்குறையொன்றிற்கு மத்தியில் தொழிலாளர் பணவனுப்பல்களிற்கான உயர்ந்தளவிலான உட்பாய்ச்சல்களுடன் நேர்க்கணியமாக தொடர்ந்தும் காணப்பட்டது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது (ஆண்டிற்காண்டு) 2024 மேயுடன் ஒப்பிடுகையில் சுருக்கமடைந்தபோதிலும் 2024 யூனில் விரிவடைந்தது காணப்பட்டது.
-
CCPI based headline inflation accelerated, yet remained below the target, in July 2024
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 யூலையில் 2.4 சதவீதமாகக் காணப்பட்டது. பணவீக்கமானது இவ்வுயர்வடைதலின் பின்னரும்கூட 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்திற்கு கீழேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது.
-
SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – June 2024
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 யூனில் 59.5 சுட்டெண் பெறுமதியினை அடைந்து, மூன்றாவது தொடர்ச்சியான அளவீட்டுச் சுற்றுக்களில் அதன் அதிகூடிய சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. தொழிற்துறையானது பல்தரப்பு முகவராண்மைகள் மூலம் நிதியளிக்கப்பட்ட குறிப்பாக, வீதிப் புனரமைப்பு மற்றும் நீர் விநியோகத்துடன் தொடர்புபட்ட கருத்திட்டங்கள் மூலம் பிரதானமாக தூண்டப்பட்டிருந்ததென அநேகமான பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.