இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் மோசடியாக உருவாக்கப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்கள் மீது, குறிப்பாக முகநூலில் தற்போது பரப்பப்படுகின்றது பற்றி பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படி இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றது. நம்பமுடியாத நிதியியல் ஆதாயங்களுக்கு வாக்குறுதியளிக்கின்ற முதலீட்டுத் திட்டங்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பரிந்துரைக்கின்றவாறு இக்காணொளிகள் பொய்யாகச் சித்திரிக்கின்றன. அறியாமலிருக்கின்ற தனிநபர்களை மோசடிக்குள்ளாக்குகின்ற நோக்கத்தினைக் கொண்டு இக்காணொளிகளைக் காண்பவர்களை சந்தேகத்திற்கிடமான வெளிவாரி இணைப்பொன்றிற்கும் இவை தொடர்புபடுத்துகின்றன.
-
Beware of Fraudulent AI-generated videos Misusing the CBSL Governor’s Image
-
The Sri Lankan foreign exchange market unveils a foreign exchange matching platform
விரிவான வெளிநாட்டுச் செலாவணி சந்தையொன்றின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கான இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பிற்கமைவாக, வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளமொன்றை இலங்கை வெளிநாட்டுச் செலாவணி சந்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி, மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பனவற்றுக்கு அணுகுவழியினைக் கொண்டிருக்கும் இத்தளமானது விலை கண்டறிதலை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் அதிக வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் ஊக்குவிப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதற்கமைய, இந்நோக்கத்திற்காக, புளூம்பேர்க் BMatch வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையினால் தெரிவுசெய்யப்பட்டது.
-
IMF Executive Board Completes the Third Review Under the Extended Fund Facility Arrangement with Sri Lanka
பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபை இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வினை நிறைவுசெய்து, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 334 மில்லியன்) கொண்ட தொகைக்கு உடனடி பெறுவழியினை நாட்டிற்கு வழங்குகின்றது. இது, பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கை பெறுகின்ற நான்காவது தாகுதியாவதுடன் அதற்கேற்ப இதுவரையிலும் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பன்னாட்டு நாணய நிதிய ஆதரவு சிறப்பு எடுப்பனவு உரிமை 1.02 பில்லியனாக (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.34 பில்லியன்) அதிகரிக்கின்றது.
-
External Sector Performance - January 2025
இலங்கை மத்திய வங்கியானது 2025 சனவரியிலிருந்து மாதாந்த வெளிநாட்டுத் துறை நடைமுறைக் கணக்குப் புள்ளிவிபரங்களை வெளியிடத் தொடங்கியது. நடைமுறைக் கணக்குப் புள்ளிவிபரங்கள் மாதாந்த அடிப்படையொன்றில் வெளியிடப்படுவது இதுவே முதலாவது தடவையாகும்.
-
CCPI-based headline inflation remained in the negative territory in February 2025
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைய, தொடர்ச்சியாக ஆறாவது மாதமாகவும் எதிர்க்கணிய புலத்தில் காணப்பட்டு, 2025 சனவரியின் 4.0 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2025 பெப்புருவரியில் 4.2 சதவீதம் கொண்ட பணச்சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது.
-
SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – January 2025
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 சனவரியில் 52.9 சதவீதமாக மேலும் அதிகரித்தது. நிலவுகின்ற வியாபார நிலைமைகள் குறிப்பாக, உறுதியான விலை மட்டங்கள் மற்றும் சாதகமான வானிலை முன்னெடுக்கப்படும் கட்டடவாக்கக் கருத்திட்டங்களின் நிறைவடைதலை துரிதப்படுத்தியிருந்தன என அநேகமான அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். புதிய கருத்திட்டங்களை நிலையாக முன்னெடுப்பது தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பேணுவதற்கு நிறுவனங்களுக்கு அத்தியாவசியமானது என்பது மேலும் எடுத்துக்காட்டப்பட்டது.
-
Land Valuation Indicator – Second Half of 2024
கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2024இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 7.7 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு அதிகரிப்புடன் 236.8 ஆகப் பதிவானது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்து, முறையே 9.9 சதவீதம், 9.4 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் கொண்ட ஆண்டு அதிகரிப்புகளைப் பதிவுசெய்தன. அரையாண்டு அடிப்படையில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் அதன் துணைக் குறிகாட்டிகளும் 2024இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் பதிவாகிய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் 2024இன் இரண்டாம் அரையாண்டுக் காலப்பகுதியில் மெதுவான வேகத்தில் அதிகரித்தன. அதிகூடிய அதிகரிப்பு வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியில் அவதானிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக்; குறிகாட்டிகள் காணப்பட்டன.
-
Use of the Word ‘Finance’ in Contravention of the Provisions of the Finance Business Act, No. 42 of 2011
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 10(2)ஆம் பிரிவின் படி, நிதிக் கம்பனியொன்றும், சட்டத்தின் 10(6) பிரிவில் குறித்துரைக்கப்பட்ட நிறுவனமொன்றும் தவிர்ந்த வேறு எந்தவொரு நபரும் இலங்கை மத்திய வங்கியின் எழுத்திலான முன்னங்கீகாரத்துடனின்றி, ‘நிதி’, ‘நிதியளித்தல்’, அல்லது ‘நிதிசார்’ என்னும் சொல்லை, அத்தகைய நபரது பெயரின் அல்லது விபரணத்தின் அல்லது வியாபாரப் பெயரின் பாகமாகத், தனியாகவோ அல்லது இன்னொரு சொல்லுடன் அல்லது அதன் வழிச்சொற்களுக்குள் அல்லது உருப்பெயர்ப்புகளுக்குள் எவற்றுடனும் அல்லது வேறேதேனும் மொழியில் அவற்றுக்குச் சமமானதுடன் சேர்த்தோ, பயன்படுத்தலாகாது என்பதை பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.
-
SL Purchasing Managers’ Index (PMI) – January 2025
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 சனவரியில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 சனவரியில் 59.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் மேலும் விரிவடைதலினை எடுத்துக்காட்டுகின்றது. இம்மேம்பாட்டிற்கு அனைத்துச் சுட்டெண்களும் சாதகமாகப் பங்களித்தன.
-
The Central Bank of Sri Lanka releases the Monetary Policy Report – February 2025
மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2025இற்கான அதன் முதலாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. நாணயக் கொள்கை அறிக்கையானது ஆண்டொன்றிற்கு இருமுறை வெளியிடப்படுகின்றது. மேலும், தற்போதைய அறிக்கையின் உள்ளடக்கமானது 2025 சனவரி மீளாய்வின் போது நாணயக் கொள்கைத் தீர்மானத்தினை உருவாக்குவதில் மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.