அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வங்கி மேற்பார்வை

இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் யாவை?

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினைப் பார்க்கவும்

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்

இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் யாவை?

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினைப் பார்க்கவும்

உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்

உரிமம்பெற்ற வர்த்தக வங்கியொன்றின் அல்லது உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கியொன்றின் திருப்திகரமற்ற வங்கித்தொழில் பணிகள் பற்றி வாடிக்கையாளரொருவர் இலங்கை மத்திய வங்கிக்கு எவ்வாறு முறைப்பாடு செய்யலாம்?

இலங்கை மத்திய வங்கி பொதுமக்களின் முறைப்பாடுகளைக் கையாள்வதற்காக பிரத்தியேக திணைகளமொன்றினை நிறுவியிருக்கிறது. இது தொடர்பில், பின்வரும் இணைப்பினை நீங்கள் பார்வையிடலாம்.

நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்

வங்கித்தொழில் சட்டத்தினை நாம் எங்கே பார்வையிடலாம்?

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினைப் பார்க்கவும்

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம்

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கு வங்கித்தொழில் தொழிற்பாடுகள் தொடர்பில் வங்கி மேற்பார்வைத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்களை நாம் எங்கே பார்வையிடலாம்?

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினைப் பார்க்கவும்

வங்கிகளுக்கான பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்

சட்ட ரீதியான படுகடன் தாமதம் என்பதன் கருத்து யாது?

சட்ட ரீதியான படுகடன் தாமதம் என்பது, தற்காலிக அடிப்படையில் தொடர்பான சலுகைக் காலப்பகுதியொன்றிற்குள் செலுத்தப்பட வேண்டிய மூலதனம் அத்துடன்/ அல்லது வட்டிக் கொடுப்பனவுகள் பிற்போடுவதனைக் குறிக்கிறது. எனினும், சட்ட ரீதியான படுகடன் தாமதம் என்பது மூலதனத்தினையும் அத்துடன்/அல்லது வட்டியையும் நிரந்தரமாக தள்ளுபடி செய்வது எனக் கருதப்படக்கூடாது. வாடிக்கையாளர், தொடர்பான வங்கியினால் வழங்கப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட மீள்கொடுப்பனவு திட்டத்தின்படி, பிந்திய திகதியொன்றில் சலுகைக் காலப்பகுதிக்குள் உரிய திகதியில் மூலதனத்தினையும் அத்துடன் அல்லது வட்டியையும் செலுத்துதல் வேண்டும்.

படுகடன் சட்ட இசைவுத்தாமத வசதி தொடர்பில் விடுக்கப்பட்ட அண்மைய பணிப்புரைகள் ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டல்கள் யாவை?

2021ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க சுற்றறிக்கை - கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட சுற்றுலா தொழில் துறையிலுள்ள வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கான படுகடன் சட்ட இசைவுத்தாமதத்தினை நீடித்தல் 

2021ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க சுற்றறிக்கை - கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் தொழில் துறையிலுள்ள வியாபாரங்கள் தனியாட்களுக்கான படுகடன் சட்ட இசைவுத்தாமதத்தினை நீடித்தல் 

2020ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க சுற்றறிக்கை - கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கடன் காலதாமதங்கள்

படுகடன் சட்ட இசைவுத்தாமதம் தொடர்பில் காலத்திற்குக் காலம் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட விளக்கங்களை நாம் எங்கே காணலாம்?

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினைப் பார்க்கவும்.

2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க விளக்கம்

2020ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க விளக்கம்

2020ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க விளக்கம்

2020ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க விளக்கம்

2020ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க விளக்கம்

2021ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க விளக்கம்

இலங்கையில் மூடப்பட்ட உரிமம்பெற்ற வங்கியொன்றிலுள்ள வைப்பாளரின் பணத்தினை கோருவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை யாது?

நடவடிக்கை 1: உரிமம்பெற்ற வர்த்தக வங்கியொன்று அல்லது உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கியொன்று தன்னிச்சையாக ஒடுக்கிவிடுவதற்கான நடவடிக்கையினைத் தொடரும் போது அல்லது இலங்கையில் வங்கித்தொழில் வியாபாரத்தினை நடத்துவதனை நிறுத்திவிடும் போது அத்தகைய உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கி அதன் வைப்பாளர்கள் தொடர்பான அனைத்து வைப்புப் பொறுப்புக்களையும் தீர்ப்பனவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படும்.

நடவடிக்கை 2: குறிப்பிட்ட தன்னிச்சையான ஒடுக்கிவிடுதல் அல்லது வங்கித்தொழில் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதனை நிறுத்துதல் தொடர்பில் வங்கியின் அறிவித்தல் கிடைத்ததும் வைப்பாளர்கள் அவர்களது நிதியினை எடுப்பனவு செய்வதற்குத் தேவையான சான்றுகள் மற்றும் அடையாள ஆவணங்களுடன் குறிப்பிட்ட வங்கியைத் தொடர்பு கொண்டு அவர்களது நிதியினை எடுப்பனவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

நடவடிக்கை 3: இலங்கை ரூபாவிலும் வெளிநாட்டு நாணயத்திலுமுள்ள வைப்பாளர்களின் கோரப்படாத பங்கினை இலங்கை மத்திய வங்கியிலுள்ள சிறப்புக் கணக்கிற்கு தொடர்பான வங்கி மாற்றல் செய்ய வேண்டுமென்பதுடன் அது கோரப்படாத நிதியம் எனக் கருதப்படுதலாதலும் வேண்டும்.

Step 4: இலங்கை ரூபாவிலும் வெளிநாட்டு நாணயத்திலுமுள்ள கோரப்படாத நிதிகளைக் கோருவது தொடர்பில், வைப்பாளர்கள் அவர்களது நிதிகளைக் கோருவது தொடர்பில் தேவையான சான்றுகளையும் அடையாள ஆவணங்களையும் சேர்த்து, இலங்கை மத்தியை வங்கியைத் தொடர்பு கொள்ளுதல் வேண்டும்.

கைவிடப்பட்ட சொத்து என வகைப்படுத்தப்பட்ட (செயற்படாத கணக்குகள்) வங்கிக் கணக்கிலிருந்தான பணத்தினையும் ஏதேனும் உரிமம்பெற்ற வங்கியினால் அல்லது சிறப்பியல்வு வாய்ந்த வங்கியினால் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றல் செய்யப்பட்ட மீதிப் பணத்தினையும் எவ்வாறு கோருவது?

நிதிகள் இலங்கை ரூபாவில் பேணப்பட்டிருப்பின்

நடவடிக்கை 01: வாடிக்கையாளரினால் தொடர்பான வங்கிக்கு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் அல்லது கணக்கின் உரிமையினை அடையாளம் காண்;பதற்கு உதவும் விதத்தில் ஏதேனும் மற்றைய ஆவண மூலங்கள் போன்ற அடையாளத்தினை நிரூபிக்கும் ஆவணங்களுடன் முறை சார்ந்த கோரிக்கையொன்றினைச் செய்தல் வேண்டும்.

நடவடிக்கை 02:கைவிடப்பட்ட சொத்துக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள பணத்தில் 10 சதவீதத்தினை உள்ளடக்குகின்ற தொடர்பான வங்கியின் கட்டுப்பாட்டுக் கணக்கில் பிடித்துவைக்கப்பட்டுள்ள நிதியத்தினைப் பயன்படுத்தி வைப்பாளர்களின் கோரிக்கையினை வங்கி செலுத்தும்.

நடவடிக்கை 03:  வைப்பாளர்களின் கோரிக்கை வங்கியின் கட்டுப்பாட்டுக் கணக்கில் பிடித்துவைக்கப்பட்டிருக்கும் நிதிகளில் 10 சதவீதத்தினை விஞ்சுமாயின், தொடர்பான வங்கிகள் வாடிக்கையாளரான அவரின்/ அவளின் கோரல்களை அடையாளத்தினை சரிபார்த்த பின்னர் செலுத்திய கோரிக்கையினை மீள்செலுத்தலுக்காக இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கும்.

வாடிக்கையாளர் கணக்கு வெளிநாட்டு நாணயத்தில் பேணப்பட்டிருக்குமாயின்:

நடவடிக்கைகள்: நிதியத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக வைப்பாளர்கள் அவர்களது கோரல்கள் தொடர்பில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கியொன்றிற்கு அல்லது உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கியொன்றிற்கு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் அல்லது கணக்கின் உரிமையாளரை அடையாளம் காண்பதற்கு உதவும் விதத்தில் வேறு ஏதேனும் மூல ஆவணங்கள் போன்றவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.

நிதியியல் துறை தொடர்பான அண்மைய புள்ளிவிபரவியல் தரவுகளை எவ்வாறு கண்டறிய முடியும்?

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினைப் பார்க்கவும்.

நிதியியல் துறை புள்ளிவிபரங்கள்