அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வைப்புக் காப்புறுதி 

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம் 

1. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் உறுப்பு நிறுவனங்கள் யாவை?

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்  

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் 

2. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினால் காப்புறுதிசெய்யப்பட்ட/உள்ளடக்கப்பட்ட வைப்புக்கள் யாவை?

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் உறுப்பு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள  பின்வரும் இலங்கை ரூபா அல்லது வெளிநாட்டு நாணய பெயர்குறிக்கப்பட்ட வைப்புக்களை இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம் உள்ளடக்குகின்றது. 

- சேமிப்பு வைப்புக்கள் 

- கேள்வி வைப்புக்கள்

- வைப்புச் சான்றிதழ் உட்பட நிலையான வைப்புக்கள்

3. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்படுவர்கள்?

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமானது தனிப்பட்டவர்கள், கூட்டு முயற்சி, ஏக உரிமையாளர் கம்பனி, போன்றவற்றினால் வைத்திருக்கப்படும் வைப்புக்களை உள்ளடக்குகின்றது. இருப்பினும், 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 43(3)ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தகைமையற்ற வைப்புக்களை உள்ளடக்கவில்லை.

4. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் காணப்படும் தற்போதைய வைப்புத் தொகை காப்புறுதி உள்ளடக்கம் என்ன?

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் தற்போதைய உள்ளடக்கம் நிறுவன அடிப்படையொன்றில் வைப்பாளருக்கு ரூ.1,100,000 வரை காணப்படும்.

5. இழப்பீட்டு கொடுப்பனவுகளுக்காக ஒவ்வொரு வைப்புத்தொகையாளருக்கான வைப்புத் தொகைகளின் தகைமையுடைய பெறுமதி எவ்வாறு கணிப்பீடு செய்யப்படுகின்றது?

செலுத்தத்தக்க இழப்பீடு “வைப்பாளர் ஒருவர்” என்ற அடிப்படையில் கணிப்பிடப்பட்டு உறுப்பு நிறுவனத்தின் உரிமத்தை இரத்துச்செய்கின்ற திகதியிலுள்ளவாறு, எந்தவொரு அட்டுறு வட்டி வீதம் உள்ளடங்கலாக, எந்தவொரு நாணயத்திலும் ஒவ்வொரு பெயர்குறிக்கப்பட்ட ஒவ்வொரு வைப்பாளரின் அனைத்து வைப்புத்தொகைகளையும் ஒருங்கிணைத்தல் வேண்டும் என்பதுடன் தொடர்ந்துவருகின்ற காலத்திற்கு வட்டி எதுவும் செலுத்தலாகாது.

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் தற்போதைய உள்ளடக்கமானது நிறுவனத்தின் அடிப்படையில் வைப்பாளரொருவருக்கு ரூ.1,100,000 வரை ஆகும். 

6. வைப்பாளர் வெளிநாட்டு நாணய வைப்புக்களை வைத்திருக்கும் போது வைப்பாளரொருவருக்கான இழப்பீட்டுத் தொகை எவ்வாறு கணிப்பீடுசெய்யப்படுகின்றது?

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இல.5இல் விளக்கப்பட்டதற்கமைவாக, இலங்கை ரூபா வைப்புக்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகளின் விடயத்திற்கு ஏற்றவாறு இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் உறுப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்துச்செய்கின்ற சந்தர்ப்பத்தில், வெளிநாட்டு நாணய வைப்புத்தொகைகளைக் கொண்டுள்ள உறுப்பு நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள் நிறுவன அடிப்படையில் வைப்பாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ1,100,00 கொண்ட சமமான தொகை வரை இழப்பீடுசெய்யப்படும்.

7. வைப்பாளர் கூட்டு வைப்புத்தொகையைக் கொண்டிருக்கும்போது இழப்பீட்டு கொடுப்பனவு தொகை எவ்வாறு கணிப்பீடு செய்யப்படுகின்றது?

கூட்டு வைப்பு உடமையாளர்களின் விடயத்தில், ஒவ்வொரு கூட்டு வைப்பாளரும் தனிப்பட்ட வைப்பாளராக கருதப்படுவதுடன் அவரது உறுப்பு நிறுவனத்தில் வைத்திருக்கும் அனைத்து காப்புறுதிசெய்யப்பட்ட வைப்புத்தொகைகளைக் கருத்திற்கொண்டு, உயர்ந்தபட்சம் ரூ.1,100,000/- வரை அவருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

8. மரணமடைந்த வைப்பாளரின் பயன்பெறுநர்களுக்கு (கூட்டு உடமையாளர்கள்/பரிந்துரைக்கப்பட்டவர்) இழப்பீட்டு கொடுப்பனவுத் தொகையை எவ்வாறு கணிப்பீடு செய்வது? 

மரணமடைந்த வைப்பாளரின் கோரிக்கைகளுக்கு பல்வேறு நன்மைப்பெறுநர்கள் காணப்படுகின்றதால், உயர்ந்தபட்சமாக ரூ.1,100,000/- வரை தனிப்பட்ட கொடுப்பனவுகள் மொத்த வைப்புத்தொகைகளின் உரிய பங்கிற்கமைவாக விகிதாசாரமாகப் பிரிக்கப்படுகின்றது.

9. இழப்பீட்டு கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு யாது?

i.2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) நியதிகளில், காப்புறுதி செய்யப்பட்ட வைப்புக்களின் வைப்பாளர் உறுப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்துச்செய்த திகதியிலிருந்து ஆறு (06) ஆண்டுகளுக்குள் இழப்பீடுகளுக்காக முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும். 

ii.வங்கித்தொழில் சட்டத்தின் (விசேட ஏற்பாடுகள்) நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் (அதாவது 2023.11.15) இரத்துச்செய்யப்பட்டுள்ள/இடைநிறுத்தப்பட்டுள்ள உரிமங்களைக் கொண்ட உறுப்பு நிறுவனங்களின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களின் விடயத்தில், அவர்களின் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு பின்வரும் காலக்கெடுக்கள் ஏற்புடையதாகவிருக்கும்:

அ.2021.08.06இற்கு முன்னர் இரத்துச்செய்யப்பட்டுள்ள உறுப்பு நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள் உறுப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்துசெய்த/இடைநிறுத்திய திகதியிலிருந்து நான்கு (04) ஆண்டுகளுக்குள் அவர்களின் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல் வேண்டும். 

ஆ.2023.11.15இற்கு முன்னர் குறிப்பாக, 2021.08.06இற்கு இரத்துச்செய்யப்பட்டுள்ள உரிமத்தைக்கொண்ட உறுப்பு நிறுவனத்தின் காப்புறுதிசெய்யப்பட்ட வைப்பாளர்கள் உறுப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்துச்செய்கின்ற/இடைநிறுத்துகின்ற திகதியிலிருந்து ஆறு (06) ஆண்டுகளுக்குள் அவர்களின் கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும். 

10. ஏற்கனவே ரூ.600,000 வரை கோரியுள்ள வைப்பாளர்களுக்கு ரூ.500,000 நிலுவையை செலுத்துவதற்கான நடைமுறை யாது? 

காப்புறுதிசெய்யப்பட்ட வைப்பாளர்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுக்குள் (காலக்கெடுக்களுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இல. 11 மற்றும் 16 பார்க்க) வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்திற்கமைவாக ஒப்புதல் படிவத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும். ஒப்பந்த படிவங்கள் பின்வரும் இணைப்பினூடாக தரவிறக்கம் செய்யலாம்.

 

இலங்கை மத்திய வங்கியினூடாக வைப்பாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு கொடுப்பனவுகள் 

11. மத்திய வங்கியினால் நேரடியாக கையாளப்படுகின்ற/கையாளப்பட்ட இழப்பீட்டு கொடுப்பனவுகளுக்கு உரிமம் இரத்துச்செய்யப்பட்ட உறுப்பு நிறுவனங்கள் யாவை?

இலங்கை மத்திய வங்கியினால் கையாளப்படுகின்ற/கையாளப்பட்ட உரிமம் இரத்துச்செய்யப்பட்டுள்ள பின்வரும் உறுப்பு நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள்:

அ)சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி – 2023.06.06 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் முடிவுறுத்தப்பட்டது.

ஆ)த ஸ்ராண்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட் - 2023.02.08 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் முடிவுறுத்தப்பட்டது

இ)டிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் - 2023.09.19 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் முடிவுறுத்தப்பட்டது

ஈ)பிம்புத் பினான்ஸ் பிஎல்சி – 2029.08.31 வரை 

சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, மற்றும் த ஸ்ராண்டட் கிறடிற் பினான்ஸ் லிமிட்டெட் என்பனவற்றின் வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் தீர்த்துக்கட்டுனரின் நியமனம் காரணமாக மேலே குறிப்பிடப்பட்ட திகதியிலிருந்து நிறுத்தப்பட்டன அத்துடன் உயர்ந்தபட்சம் இழப்பீடு கோரப்பட்ட காலம் முடிவடைந்ததன் காரணமாக டிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் நிறுத்தப்பட்டது.

12. வைப்பாளரொருவர் இழப்பீட்டு கொடுப்பனவுகளை எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

வைப்பாளர்கள் பின்வரும் இணைப்பிலிருந்து கோரிக்கைப் படிவத்தை தரவிறக்கம் செய்யலாம்.

அல்லது

உரிமைக் கோரல் படிவத்தையும் ஏனைய படிவங்களையும் தலைமை அலுவலகக் கட்டடத்தின் முகப்பிலிருந்தும் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். 

வைப்பாளர்கள் ஏனைய கோரப்பட்ட ஆவணங்களுடன் இணைந்து முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கைப் படிவத்தை (அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இல 13.) வன் பிரதிகளாகப் பதிவுத் தபாலின் மூலமாக அல்லது நேரடியாக சமூகமளித்து இலங்கை மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கலாம்.  

அ)பதிவுத் தபாலின் மூலம்:

முகவரி: பணிப்பாளர், வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இல 30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு – 01.

அல்லது

ஆ)நேரடியாக சமூகமளிக்கும் முறை:

 

முத்திரையிடப்பட்ட கடித உறையில் “ பணிப்பாளர், வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களம்” எனக் குறிப்பிட்டு வார நாட்களில் மு.ப 8.00 தொடக்கம் பி.ப 4.00 மணி வரை இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01இல் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தின் தரை மாடியிலுள்ள அஞ்சல் அறையில் சமர்ப்பிக்கலாம்.

13. இழப்பீட்டிற்கான கோரிக்கையொன்றை மேற்கொள்வதற்கு தேவையான ஆவணங்கள் யாவை?

முறையாக சான்றுபடுத்தப்பட்ட கோரிக்கைப் படிவம் 

மூல வைப்புச் சான்றிதழ்கள் 

மூல சான்றிதழ்களுக்கமைவாக முறையாக சான்றுபடுத்தப்பட்ட அடையாள ஆவணங்கள் 

வங்கி கணக்கு விபரங்கள் 

பெயர் மாற்றம் ஏற்படுகின்ற போது சத்தியக்கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் போன்றனவாகும். 

மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இல.12இல் குறிப்பிடப்பட்டதற்கமைவாக, பதிவுத் தபாலின் மூலமாகவோ அல்லது நேரடியாக கையளிக்கப்படுவதன் மூலமாகவோ  வன் பிரதிளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

14. இழப்பீட்டு கொடுப்பனவை மேற்கொள்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

எடுக்கப்படும் காலமானது விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்வதையும் வேண்டப்படும் ஏனைய அனைத்து ஆவணங்களைச் சமர்ப்பிப்பதையும் பொறுத்து காணப்படும். அனைத்து வேண்டப்படும் ஆவணங்களும் ஒழுங்காக இருக்குமாயின், கோரலானது செயலாக்கப்பட்டு உடனடியாக அடுத்த தொகுப்பில் செலுத்தப்படும்.  

15. ஆவணங்கள் ஒழுங்கான விதத்தில் காணப்படாத போது இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் நடைமுறை யாது? 

தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால் குறைபாடுகள் மற்றும் வேண்டப்படும் ஏதேனும் மேலதிக விபரங்கள் வைப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. 

 

முகவர் வங்கியினூடாக வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் 

16. முகவர் வங்கியின் மூலமாக வைப்பாளர்களுக்கு செலுத்தப்படுகின்ற/செலுத்தப்பட்ட இழப்பீடு வழங்கப்பட்ட உரிமம் இரத்துச்செய்யப்பட்ட உறுப்பு நிறுவனங்கள் யாவை?

ஈடிஐ மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸ் ஆகியவற்றின் வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் 2020.07.25இலிருந்து தொடங்கப்பட்டன.

17. ஈடிஐ மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸ் ஆகியவற்றுக்கு கொடுப்பனவுச் செயன்முறை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

ஈடிஐ மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸ் ஆகியவற்றின் வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் 2020.07.25இலிருந்து தொடங்கப்பட்டன.

18. முகவர் வங்கியினூடாக இழப்பீட்டைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

மூல வைப்புச் சான்றிதழ்கள் மற்றும் செல்லுபடியாகும் அடையாள ஆவணத்துடன் (தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி உரிமம்) முகவர் வங்கியின் வைப்பாளர்கள் அருகிலுள்ள கிளைக்கு விஜயம் செய்யலாம் அத்துடன் கொடுப்பனவுப் பெற்றுக்கொள்வதற்கு முகவர் வங்கியின் மூலம் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றலாம். 

19. முகவர் வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை? 

வைப்பாளரின் அடையாள ஆவணங்களின் மூலங்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி உரிமம்)

மூலச் சான்றிதழ்கள், வங்கிப் புத்தகங்கள், பங்குச் சான்றிதழ்கள்

முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கைப் படிவம் 

அற்றோனி தத்துவத்திற்கமைவாக, முகவர் வங்கியினால் வேண்டப்பட்டதன்படி வேறு ஏதேனும் ஆவணங்கள்,

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடிதங்கள், தொடர்புடைய தோல்வியுற்ற உறுப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் போன்றன. 

20. கருமப்பீடத்தில் முகவர் வங்கியிடமிருந்து மீளளிப்புக்களைப் பெற்றுக்கொள்வது சாத்தியமா? 

ஆம். 

மாற்றீடாக, தோல்வியுற்ற உறுப்பு நிறுவனங்களின் வைப்பாளர்களர்களுக்கு, முகவர் வங்கியில் அவர்களின் ஏற்கனவேயிருக்கின்ற/புதிய கணக்குகளுக்கு இழப்பீட்டு கொடுப்பனவை வரவு வைப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது.

 

வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் 

21. வைப்பாளரிடம் வைப்புத்தொகையின் மூலச் சான்றிதழ்கள் இல்லையென்றால், பின்பற்ற வேண்டிய நடைமுறை யாது?

வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால் வழங்கப்படும் படிவத்திற்கிணங்க வைப்பாளர் முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட சத்தியக்கடதாசியையும் இழப்பீட்டுக் கடிதத்தையும் சமர்ப்பிக்கலாம். இலங்கை மத்திய வங்கியினூடாக கொடுப்பனவைச் செலுத்தும்பட்சத்தில், வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால் வைப்பாளரின் கோரிக்கையின் பேரில் சத்தியக்கடதாசி மற்றும் இழப்பீட்டுப் படிவம் வழங்கப்படும். இழப்பீடானது முகவர் வங்கியின் மூலம் செலுத்துப்படுமாயின், சத்தியக்கடதாசி மற்றும் இழப்பீட்டின் தொடர்புடைய படிவமானது (படிவம் 07) தொடர்புடைய வங்கியின் மூலம் வழங்கப்படும். 

சத்தியக்கடதாசி வைப்பாளரினால் பூரணப்படுத்தப்பட்டு உறுதிமொழிக்காக சமாதான நீதவானினால்/ஆணையாளரினால் சான்றளிக்கப்பட வேண்டும்.

இழப்பீடானது தொடர்புடைய தோல்வியுற்ற உறுப்பு நிறுவனத்தினால் பூரணப்படுத்தப்பட வேண்டும்.

22. கூட்டு வைப்புத்தொகைகளைப் பொறுத்த வரையில், ஒரேயொரு வைப்பாளர் மாத்திரமே தமது இழப்பீட்டு கொடுப்பனவின் பகுதியைக் கோர முடியமா?

ஆம். முகவர் வங்கியில் நேரடியாக வெளிப்படுகின்ற கூட்டு உடமையாளர் அல்லது  வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்திற்கு முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கைப் படிவத்தை சமர்ப்பிக்கின்ற கூட்டு உடமையாளர், ஏனைய கூட்டு உடமையாளர்/உடமையாளர்கள் செல்லுப்படியாகும் கோரிக்கைப் படிவத்தை/படிவங்களை சமர்ப்பிக்க இயலாத சந்தர்ப்பத்தில் இழப்பீட்டு கொடுப்பனவின் அவரது தகைமையுடைய பகுதியை மாத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.  

23. வெளிநாட்டில் வசிக்கும் வைப்பாளர்கள் இழப்பீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?

வெளிநாட்டில் வசிக்கும் வைப்பாளர்கள் கோரிக்கைப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு ‘விசேட அற்றோனி தத்துவத்தை’ வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

வைப்பாளரொருவர் இலங்கையில் வசிக்கும் போது அற்றோனி தத்துவத்தில் கைச்சாத்திடுவாராயின், சமாதான நீதவானால்/சத்தியப்பிரமாண ஆணையாளரினால் சான்றளிக்கப்படலாம். வைப்பாளர் வெளிநாட்டில் வசிக்கும் போது அற்றோனி தத்துவத்தில் கைச்சாத்திட்டால், அது வைப்பாளர் வசிக்கும் நாட்டின் தூதரகத்தின் மூலம் சான்றளிக்கப்பட வேண்டும். எனினும், இரு சூழ்நிலைகளிலும் அற்றோனி தத்துவம் பதிவாளர் நாயகத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட வேண்டும்.  

வெளிநாட்டில் வசிக்கும் வைப்பாளரொருவர் முகவர் வங்கியினூடாக கோரிக்கை விடுக்கின்ற போது அத்துடன் அத்தகைய வங்கியில் கணக்கு வைத்திருக்கும் போதும், முகவர் வங்கியானது வைப்பாளரின் கணக்கில் நேரடியாக பணத்தை வரவு வைக்கும். 

வைப்பாளருக்கு முகவர் வங்கியில் கணக்கு இல்லாதிருப்பின், முகவர் வங்கியை அத்தகைய கணக்கிற்கு நேரடியாக நிதிகளை வரவு வைப்பதற்கு இயலச்செய்யும் வகையில், வைப்பாளரின் சார்பில் கணக்கொன்றை திறப்பதற்கு விசேட அற்றோனி தத்துவம் வழங்கப்பட வேண்டும். 

ஒன்றில் தனிநபர் அல்லது கூட்டு வைப்பாளரின் பெயரில் பேணப்படும் கணக்கொன்றுக்கு மாத்திரம் இழப்பீட்டு கொடுப்பனவு வரவு வைக்கப்படுகின்றது. 

24. தெளிவற்ற/கையால் எழுதப்பட்டஃகுறிக்கப்பட்ட/முத்திரையிடப்பட்ட சான்றிதழ்களின் விடயத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை யாது? 

வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால்/முகவர் வங்கியினால் தொடர்புடைய தோல்வியுற்ற உறுப்பு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடுகள் பெற்றுக்கொள்ளப்படும்.

25. மரணமடைந்த வைப்பாளர்களுக்கு இழப்பீடு எவ்வாறு கோரப்படலாம்?

மரணச்சான்றிதழ் மற்றும் அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் சமர்ப்பித்ததன் பின்னர் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

அ.கணக்கு உடமையாளரொருவர் மரணமடைந்தவிடத்து கூட்டு வைப்பாளர்கள்

ஒவ்வொரு கூட்டு வைப்பாளரும் இழப்பீட்டு கொடுப்பனவாக உயர்ந்தபட்சம் ரூ.1,100,00 பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவராவர். எனினும், மரணமடைந்த வைப்பாளரின் விடயத்தில், மரணமடைந்த வைப்பாளரின் சார்பில் எஞ்சியுள்ள கூட்டு உடமையாளருக்கு/உடமையாளர்களுக்கு மரணமடைந்த வைப்பாளரின் இழப்பீட்டு கொடுப்பனவின் பகுதி வழங்கப்படும். இதற்கமைய, கூட்டு உடமையாளர்/உடமையாளர்கள் தமக்கு மற்றும் மரணமடைந்த வைப்பாளரின் சார்பாக செலுத்தப்பட்ட கொடுப்பனவு இரண்டையும் பெற்றுக்கொள்வார்/பெற்றுக்கொள்வார்கள்.

ஆ.உறுப்பு நிறுவனங்களில் பேணப்படும் அனைத்து கணக்குகளுக்கும் பரிந்துரையாளர்/பரிந்துரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள மரணமடைந்த வைப்பாளர்கள்

மரணமடைந்த வைப்பாளரின் பரிந்துரைக்கப்பட்டவருக்குஃபரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவு வழங்கப்படும்.

இ.வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வைப்பாளர் பட்டியலுக்கமைவாக பரிந்துரைக்கப்பட்டவர்கள் நியமிக்கப்படாத மரணமடைந்த வைப்பாளர்கள்

முகவர் வங்கி/வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களம் கட்டளைக்கமைவாக பரிந்துரைக்கப்பட்டவர்களை சரிபார்ப்பதற்கு தொடர்புடைய உறுப்பு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடொன்றைப் பெற்றுக்கொள்வர்.

ஈ.பரிந்துரைக்கப்பட்டவர் நியமிக்கப்படாத நிலையில் மரணமடைந்த வைப்பாளர்கள்   இருப்பினும் ஏற்றுக்கொள்ளத்தக்க இறுதி உயில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது. 

முகவர் வங்கி/இலங்கை மத்திய வங்கியின் சட்ட அலுவலர்களிடமிருந்து சட்ட அனுமதியைப் பெற்றபிறகு, சட்ட நன்மைப்பெறுநர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

உ.பரிந்துரைக்கப்பட்டவர்கள் இல்லாத மற்றும் இறுதி உயில் கிடைக்கப்பெறாத மரணமடைந்த வைப்பாளர்கள்

பொதுச் சட்டம் மற்றும் வங்கித்தொழில் நடைமுறைகளிற்கமைவாக, சட்ட நன்மைப்பெறுநர்/நன்மைப்பெறுநர்களிலிருந்து தேவையான இழப்பீடுகள் முகவர் வங்கி/இலங்கை மத்திய வங்கியின் சட்டத் திணைக்களங்களிலிருந்து வேண்டப்படும் சட்ட ஆலோசனைகளைப் பெற்றபிறகு இழப்பீடு வழங்கப்படுகின்றது.

ஊ.மரணமடைந்த வைப்பாளரின் வெவ்வேறு வைப்புக்களுக்கு வேறுபட்ட பரிந்துரைக்கப்பட்டவர்கள் அத்துடன்/அல்லது கூட்டு உடமையாளர்கள்

முகவர் வங்கி/வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களம் தொடர்புடைய தோல்வியுற்ற உறுப்பு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடுகளைப் பெற்று, தேவை ஏற்படின், சட்ட ஆலோசனையைப் பெறும். 

26. பரிந்துரைக்கப்பட்டவர்களின் விபரங்கள் எவ்வாறு பெறப்படும்?

வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால்/முகவர் வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட உறுதிப்படுத்தல் தொடர்புடைய தோல்வியுற்ற உறுப்பு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு படிவத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

27. ரூ.1,100,000 கொண்ட ஏற்புடைய வரையறை வரை இழப்பீடு செலுத்தப்பட்ட பிறகு, வைப்புத்தொகையின் எஞ்சியுள்ள நிலுவையை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

தோல்வியுற்ற உறுப்பு நிறுவனத்தின் திரவப்படுத்தல் செயன்முறையின் போது நிலுவைத் தொகையை தீர்த்துக்கட்டுனரிமிருந்து கோரலாம்.

 

தனிப்பட்ட அடையாள இலக்கங்களின் கட்டாயப் பதிவு

28. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் (இதனகத்துப் பின்னர் உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பீடு செய்யப்படும்) அத்துடன் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் ஆகியவற்றினால் தனிப்பட்ட அடையாள இலக்கத்தைப் பதிவுசெய்வதற்கு ஏற்புடைய பணிப்புரைகள் யாவை?

உரிமம்பெற்ற வங்கிகளுக்கு - ‘உரிமம்பெற்ற வங்கியினால் தனிப்பட்ட அடையாள இலக்கங்களை கட்டாயமாகப் பதிவுசெய்தல்’ தொடர்பாக 2022ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகள்.

உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு – வைப்பாளர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கங்களைப் பதிவுசெய்தல்’ தொடர்பாக 2022ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க நிதித் தொழில் சட்டப் பணிப்புரை.

29. உரிமம்பெற்ற வங்கிகளினாலும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினாலும் தனிப்பட்ட அடையாள இலக்கத்தை கட்டாயமாகப் பதிவுசெய்தலின் பிரதான நோக்கங்கள் யாவை? 

உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் தகவல் முகாமைத்துவச் செயன்முறையின் உறுதியையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கும் இழப்பீட்டுச் செயன்முறையின் வினைத்திறனை முன்னேற்றுவதற்கு இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினால் வைப்பாளர் தகவலைத் தொகுப்பதற்கு வசதிப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது.

30. பராயமடையாதவர்களுக்கு கணக்குகளைத் திறக்கும்போது பயன்படுத்தப்பட வேண்டிய தனிப்பட்ட அடையாள இலக்கம் யாது?

கீழே விளக்கபட்டதற்கமைவாக, 12 இலக்க எண்ணை உருவாக்குவதற்கு அதே துறையில் பிறந்த திகதியைத் தொடர்ந்து பிறப்புச் சான்றிதழ் இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். 

உதாரணம்: பிறந்த திகதி: 2005 சனவரி 7 (2005.01.07) மற்றும் பிறப்புச் சான்றிதழ் இலக்கம்: 0325

2 0 0 5 0 1 0 7 0 3 2 5

 

31. பிறப்புச் சான்றிதழ் எண்ணில் 5 இலக்கங்களை உள்ளடக்கியிருக்கின்ற விதிவிலக்கான சூழ்நிலையில் பராயமடையாதவர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கத்தை எவ்வாறு பதிவுசெய்வது?

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி 29இல் விளக்கப்பட்டுள்ளதைப் போலவே, 13இலக்க எண்ணை உருவாக்குவதற்கு அதே துறையில் பிறந்த திகதியைத் தொடர்ந்து, பிறப்புச் சான்றிதழ் இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.

32. பராயமடையாதவரின் தேசிய அடையாள அட்டை எண் இருக்குமாயின், தனிப்பட்ட அடையாள இலக்கமாகப் பதிவுசெய்ய முடியுமா?

மேலே அடிக்கடி கேட்கப்படும் கேள்வி 1இல் குறிப்பிடப்பட்டுள்ள பணிப்புரைகளின் நோக்கத்திற்கு இலங்கைப் பிரசைக்கான முதன்மை அடையாள இலக்கமானது தேசிய அடையாள அட்டையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பராயமடையாவதவர்கள் பராயமடையாதற்கு முன்னர் தேசிய அடையாள அட்டையைப் பெற்றிருந்தால், மேலேயுள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்வி 29இல் விளக்கப்பட்டதன்படி, பிறந்தத் திகதியைத் தொடர்ந்து பிறப்புச் சான்றிதழ் இலக்கத்தைப் பதிவுசெய்வதற்கு பதிலாக, பராயமடையாதவரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் தனிப்பட்ட அடையாள இலக்கமாகப் பதிவுசெய்யலாம்.

எனினும், இதேபோன்ற சந்தர்ப்பங்களில், உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும்; அவ்வைப்பாளர்களை வேறுபட்ட தனிப்பட்ட அடையாள இலக்கங்களின் கீழ் அவர்களின் முக்கிய வங்கித்தொழில் முறைமைகளில் பிரதியெடுக்காமல் அவரது தேசிய அடையாள அட்டையன் கீழ் தொடர்புடைய வைப்பாளரின் அனைத்து ஏற்கனவேயுள்ள பராயமடையாதவர்களின் கணக்குகளைப் பதிவுசெய்தல் வேண்டும்.

33. பராயமடையாதவர்களின் வகையின் கீழ் ‘பௌத்த சமனெர’ கணக்கைத் திறக்கும்போது பயன்படுத்த வேண்டிய தனிப்பட்ட அடையாள இலக்கம் என்ன? 

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி 29இல் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்களைப் போலவே, ஆட்பதிவுத் திணைக்களத்திடமிருந்து தேசிய அடையாள அட்டை பெறப்படும் வரை பௌத்த சமனெராவின் தனிப்பட்ட அடையாள இலக்கமாகப் பிறந்த திகதியைத் தொடர்ந்து பிறப்புச் சான்றிதழ் இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும், பௌத்த சமனெராவின் பெயர் மாற்றமானது சமனெராவின் பிறப்பின் பெயர்கள் மற்றும் தற்போதைய பெயர் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், நியமனச் சான்றிதழைப் (சமனெராச் சான்றிதழ்/உபசம்பதா சான்றிதழ்) பெறுவதன் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும்.   

34. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரின் அல்லது முதிர்ச்சியடைவதற்கு முன்னர் அத்துடன் தேசிய அடையாள அட்டையைக் கொண்டிராது வெளிநாட்டிற்கு சென்றவர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கம் யாது? 

நடைமுறைப் பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு, அவ்வைப்பாளர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கமாக இலங்கை கடவுச்சீட்டு இலக்கத்தைப் பதிவுசெய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடவுச்சீட்டு இலக்கம் தனிப்பட்ட அடையாளங்காட்டியாக இல்லாதிருக்குமாயின், வேறுபட்ட அடையாள இலக்கங்களின் கீழ் முக்கிய வங்கித்தொழில் முறைமையில் வைப்பாளரைப் பிரதியெடுக்கமலிருப்பதை உறுதிப்படுத்துமாறு உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. மேலும், அவ்வைப்பாளர்களை ஊக்குவித்து அவர்களின் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வழிமுறைகளை எடுப்பதற்கும் அத்துடன் எதிர்கால திகதியில் வங்கி முறைமையில் அதை இற்றைப்படுத்துவதற்கும் உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

35. இலங்கையில் அல்லது வெளியில் வசிக்கும் அத்துடன் தேசிய அடையாள அட்டையை கொண்டிராத இரட்டைக் குடியுரிமையுடையவர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கம் யாது?

நடைமுறைப் பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு, அவ்வைப்பாளர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கமாக வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தைப் பதிவுசெய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடவுச்சீட்டு இலக்கம் தனிப்பட்ட அடையாளங்காட்டியாக இல்லாதிருக்குமாயின், வேறுபட்ட அடையாள இலக்கங்களின் கீழ் முக்கிய வங்கித்தொழில் முறைமையில் வைப்பாளரைப் பிரதியெடுக்கமலிருப்பதை உறுதிப்படுத்துமாறு உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. மேலும், அவ்வைப்பாளர்களை ஊக்குவித்து அவர்களின் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வழிமுறைகளை எடுப்பதற்கும் அத்துடன் எதிர்கால திகதியில் வங்கி முறைமையில் அதை இற்றைப்படுத்துவதற்கும் உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

36. பாராளுமன்றச் சட்டமொன்றினால் இணைக்கப்பட்ட நிறுவனமொன்றின் தனிப்பட்ட அடையாள இலக்கம் யாது?

உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் தொடக்கச் சட்ட இலக்கத்தைத் தொடர்ந்து தனிப்பட்ட அடையாள இலக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. 

உதாரணம்: 2023ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம். 

நிறுவனத்தின் தனிப்பட்ட அடையாளம் இலக்கம் “352023” ஆக இருக்க வேண்டும். 

37. பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையிலிருந்து உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அடையாள இலக்கத்தை தனிப்பட்ட அடையாள இலக்கமாகப் பயன்படுத்த முடியுமா?

தற்போதுள்ள பல்வேறு தரவு இடைவெளிகளை நிரப்புவதை இலக்காகக்கொண்டு, எல்லைக் கடந்த கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் உள்நாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் பற்றிய அனைத்தையுமுள்ளடக்கிய தரவுச் சேகரிப்பு முறைமையை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டு, உரிமம்பெற்ற வங்கிகளின் பங்குபற்றலுடன் பன்னாட்டு கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் முறைமை எனப்படும் தரவுச் சேகரிப்பு முறைமையொன்றை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. பன்னாட்டு கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் முறைமையின் பாகமொன்றாக, இம்முறைமையில் ஈடுபட்டுள்ள பதிவுசெய்யப்படாத நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து தனிப்பட்ட அடையாள இலக்கங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இதன்விளைவாக, பன்னாட்டு கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் முறைமையின் கீழ் வழங்கப்பட்ட அடையாள இலக்கங்கள் அக்குறிப்பிட்ட நிறுவனத்திற்கான தனிப்பட்ட அடையாள இலக்கமாக பதிவுசெய்யப்படுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன.

38. சங்கங்கள், அமைப்புக்கள், க்ளப்கள் மற்றும் அலகுகள் போன்ற மேலே பணிப்புரைகளில் குறிப்பிட்ட ஏனைய நிறுவனங்களுக்கு பதிவு வழங்குவதற்கான எடுத்துக்காட்டுகள் யாவை?

சங்கங்கள் 

1891ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க சமூக கட்டளைச் சட்டத்திற்கமைவாக, கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் மற்றும் அதைத்தொடர்ந்து திருத்தங்கள்

உள்ளூராட்சி மன்றங்கள் 

அமைப்புக்கள்

கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் - 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 34ஆம் பிரிவின் கீழுள்ள அமைப்புக்கள்: வர்த்தகம், கலை, அறிவியல், சமயம், தொண்டு, விளையாட்டு, அல்லது வேறு ஏதேனும் பயனுள்ள பொருளை மேம்படுத்துவதற்காக அமைப்பொன்று உருவாக்கப்பட்டு அதன் இலாபங்களை ஏதேனுமிருப்பின், அல்லது அதன் பொருட்களை ஊக்குவிப்பதிலுள்ள ஏனைய வருமானத்தைப் பயன்படுத்துவதற்கு விரும்புகின்றதுடன் அதன் உறுப்பினர்களுக்கு எந்தவொரு பங்குலாபக் கொடுப்பனவைச் செலுத்துவதைத் தடைசெய்கின்றதென கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் திருப்தியடைகின்றவிடத்து, அமைப்பானது உத்தரவாதத்தினால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக பதிவுசெய்யப்படலாம்.

களரிகள்

உள்ளூராட்சி மன்றங்கள் - 1975ஆம் ஆண்டு 17ஆம் இலக்க க்ளப் சட்டத்தின் உரிமத்திற்கமைவாக அத்துடன் அதைத்தொடர்ந்து அதனுடனான திருத்தங்கள், உள்நாட்டு அதிகாரி சபையின் பிரதேசத்தில் அமைந்துள்ள க்ளப்கள் உள்நாட்டு அதிகார சபையுடன் பதிவுசெய்யப்பட வேண்டும்.

நம்பிக்கை

சமூக சேவைகள் திணைக்களம்:  தன்னார்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முதியோர் இல்லங்கள்/நம்பிக்கைகள்

அரச- சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகம் - அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புடையது.

கம்பனிகள் பதிவாளர்: உதாரணம். கூறு நம்பிக்கைகள்

பாராளுமன்றச் சட்டங்களின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட நம்பிக்கை: தொடக்கச் சட்ட எண்ணைத் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டை அடையாள இலக்கமாகப் பயன்படுத்தப்படலாம்.