• The Central Bank of Sri Lanka Successfully Completes the Settlement of the Maturing International Sovereign Bond of US Dollars 1 Billion on Behalf of the Government of Sri Lanka

    இலங்கை மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கம் சார்பில் ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறியின் தீர்ப்பனவினை கூப்பன் கொடுப்பனவுகளுடன் சேர்த்து 2020 ஒத்தோபர் 2 அன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

  • CCPI based Inflation decreased in September 2020

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 ஓகத்தின் 4.1  சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 4.0 சதவீதத்திற்கு சிறிதளவால் குறைவடைந்தது. 2019 செத்தெம்பரில் நிலவிய உயர்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கத்தின் மூலம் இது பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஓகத்தில் 12.3 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 11.5 சதவீதத்திற்கு குறைந்தவிடத்து உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஓகத்தின் 0.8 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 0.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஓகத்தின் 4.8 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 4.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

  • Response to the Downgrade of Sri Lanka’s Rating by Moody’s Investors Service

    இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தல் தரம்குறைக்கப்பட்டமை மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ் மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிதி அமைச்சு பதிலிறுத்தலொன்றினை வழங்கியுள்ளது. இதனை பின்வரும் இணைய தொடர்பில் காணமுடியும்:

    http://www.treasury.gov.lk/documents/10181/859446/PressReleaseModdysRating20200928-eng/2f58fa72-42a7-4bf8-8681-6a08f20df1ef

  • Release of 'Sri Lanka Socio Economic Data – 2020' Publication

    இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடான தரவு ஏடான “இலங்கை சமூக பொருளாதாரத் தரவு – 2020” பொதுமக்களின் தகவல்களுக்காக இப்போது கிடைக்கக்கூடியதாகவுள்ளது. தற்போதைய தரவு ஏடானது தொடரின் 43ஆவது வெளியீடாகும்.

    எடுத்துச் செல்வதற்கு இலகுவான இத்தரவு ஏடானது நாட்டின் தோற்றப்பாடு, முதன்மைப் பொருளாதார குறிகாட்டிகள்; நாட்டின் ஒப்பீடுகள்; சமூக பொருளாதார நிலைமைகள்; மனித வளங்கள்; தேசிய கணக்குகள்; வேளாண்மை; கைத்தொழில்; பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்புக்கள்; விலைகளும் கூலிகளும்; வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலர் வெளிநாட்டு நிதி; அரச நிதி மற்றும் பணம் வங்கித்தொழில் மற்றும் நிதி போன்ற தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

  • NCPI based Inflation increased in August 2020

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 யூலையின் 6.1 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 6.2 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகளிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்புக்களினால் இது தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 யூலையின் 12.9 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 13.2 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில், உணவல்லாப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 யூலையின் 1.0 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 1.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.

  • Sri Lanka Purchasing Managers’ Index - August 2020

    தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2020 ஓகத்தில் விரிவடைந்தன. 

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, நாட்டில் தொழில் நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு திரும்புவதிலிருந்து பயனடைந்து தயாரிப்பு நடவடிக்கைகள் 2020 ஓகத்தில் தொடர்ந்தும் மீட்சியடைந்தன. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்கள் 2020 ஓகத்தில் விரிவடையும் மட்டத்தில் காணப்பட்ட அதேவேளை தொழில்நிலை துணைச் சுட்டெண்ணில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. 

  • External Sector Performance - July 2020

    2020 யூலையில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை, வணிகப்பொருட்களின் இறக்குமதிகளில் காணப்பட்ட குறைப்புக்களுக்கும் மத்தியிலும் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளில் காணப்பட்ட அதிகரிப்பு மற்றும் அதிகரித்த தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பனவற்றின் உதவியுடன் மேலும் மீட்சியடைந்தது. கொவிட்-19 தொற்றிற்கு மத்தியிலும் பல குறிப்பிடத்தக்க சாதனைகள் அவதானிக்கப்பட்டன. யூலையில் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2020 சனவரியின் பின்னர் முதற்றடவையாக ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டதுடன் 2020 பெப்புருவரியின் பின்னர் முதற்றடவையாக நேர்க்கணியமான ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியையும் பதிவுசெய்தது. எதிர்பார்க்கப்பட்டவாறு, இன்றியமையாதனவல்லாத பொருட்களின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் காரணமாக வணிகப்பொருட்களின் இறக்குமதிகள் தொடர்ந்தும் குறைவடைந்து காணப்பட்டன.

  • Launch of 'Ratapuraama LANKAQR' Public Awareness Campaign in Matale

    இலங்கை மத்திய வங்கி LankaQR தொடர்பில் நிதியியல் நிறுவனங்களுடன் சேர்ந்து 'மாத்தளைக்கு LankaQR" (LankaQR ஐ மாத்தளைக்கு எடுத்துச் செல்வோம்) என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகம் - மாத்தளையில் செயலிகள்(apps) கொடுப்பனவுகளை இயலச்செய்யும் விதத்தில் 2020 செத்தெம்பர் 12ஆம் திகதியன்று 'மாத்தளை LankaQR" என்ற நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு பிரச்சாரமொன்றினை ஆரம்பித்தது. இவ்வாரம்ப வைபவத்திற்கான முதன்மை விருந்தினராக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன்  கலந்து கொண்டார்.

  • Release of "Economic and Social Statistics of Sri Lanka - 2020" Publication

    “இலங்கையின் பொருளாதார சமுகப் புள்ளிவிபரங்கள் - 2020” என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

    இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவினை அடையாளப்படுத்தி புள்ளிவிபரத் திணைக்களமானது எளிதாக உசாவும் விதத்தில் வெளியிட்டின் அமைப்பினை மீளக்கட்டமைத்துள்ள அதேவேளை அதன் உள்ளடக்கத்திற்கு மெருகூட்டுவதற்கு மேலும் புள்ளிவிபரங்களைச் சேர்த்துள்ளது. அதற்கமைய, புதிய பதிப்பானது எட்டு முக்கிய விடயப்பரப்புக்களின் அதாவது ‘தேசிய கணக்குகள்’, ‘பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு’, ‘விலைகள், கூலிகள் மற்றும் தொழில்’, ‘வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி’, ‘அரச நிதி’, ‘பணம் மற்றும் மூலதனச் சந்தைகள்’, ‘நிதியியல் துறை’ அத்துடன் ‘ஏனைய நாடுகளின் புள்ளிவிபரங்கள்’ என்பவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபர அட்டவணைகளை உள்ளடக்குகின்றது. 

  • CCPI based Inflation decreased in August 2020

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 யூலையின் 4.2 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 4.1 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 2019 ஓகத்தில் நிலவிய உயர்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கத்தின் மூலம் இது பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கமானது (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூலையில் 10.9 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 12.3 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூலையில் 1.5 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 0.8 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஓகத்தில் 4.8 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. 

Pages