• Sri Lanka Prosperity Index - 2018

    அனைத்து மாகாண சுபீட்சச் சுட்டெண்களிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களின் காரணமாக 2018இல் இலங்கை சுபீட்சச் சுட்டெண் அதிகரித்துள்ளது.

    தேசிய சுபீட்சம்

    2018இல் இலங்கை சுபீட்சச் சுட்டெண்  2017இல் பதிவுசெய்யப்பட்ட 0.548 இலிருந்து 0.783 இற்கு அதிகரித்துள்ளது. இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணின் அனைத்து மூன்று துணைச் சுட்டெண்களுமான பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல், மக்கள் நலனோம்புகை, மற்றும் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு என்பன இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன.

    பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண் மேம்பட்டமைக்கு 2018ஆம் ஆண்டுப்பகுதியில் காணப்பட்ட விலை உறுதிப்பாடும் முறைசாராத் துறையின் கூலிகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் முக்கிய காரணங்களாக அமைந்தன. மக்கள் நலனோம்புகைத் துணைச் சுட்டெண்ணினைப் பொறுத்தவரை முக்கியமான மேம்பாடுகள், நலவசதிகள், கல்வியின் தரம், மக்கள் செல்வம் மற்றும் சூழல் தூய்மை ஆகிய அம்சங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டுப்பகுதியில் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணும் மெதுவாக அதிகரித்தமைக்கு மின்வலு, போக்குவரத்து மற்றும் தகவல் மற்றும் தொடர்பூட்டல் தொழில்நுட்பவியல் வசதிகள் என்பனவற்றின் கிடைப்பனவிலும் குழாய்வழி நீரின் தரத்திலும் ஏற்பட்ட முன்னேற்றங்களே முக்கிய காரணங்களாகும்.  

     

  • Forensic Audits

    2015 பெப்புருவரி 01ஆம் திகதி தொடக்கம் 2016 மாச்சு 31ஆம் திகதி வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்கல் தொடர்பாக பரீட்சித்துப் பார்த்து புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் பரிந்துரைகள், கணக்காய்வு அறிக்கைகளில் அண்மைய ஆண்டுக் காலங்களில் வெளிச்சத்திற்கு வந்த விடயங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட சில ஒழுங்குமுறைப்படுத்தல் அத்துடன் முகவர் தொழிற்பாடுகளுடன் தொடர்புடைய உள்ளக விசாரணைகளில் கண்டறியப்பட்டவைகள் என்பனவற்றின் விளைவாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஆலோசனையுடன் ஏற்புடைய அரசாங்கப் பெறுகை வழிகாட்டல்களுடன் இணங்கி அமைச்சரவை நியமித்த ஆலோசகர்கள் பெறுகைக் குழுவினால் தெரிவுசெய்யப்பட்டிருந்த உலகளாவிய நடைமுறையுடனும் பன்னாட்டு அனுபவத்துடனும் கூடிய கணக்காய்வு நிறுவனங்களின் இலங்கைக்கு வெளியிலமைந்த ஆளணியினால் முழுமையாகக் கொண

  • 32nd Annual Conference of Asian Credit Supplementation Institutions Confederation (ACSIC) - 2019, Colombo Sri Lanka

    ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின் 32ஆவது மாநாடு - 2019 இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையுடன் கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் 2019 ஒத்தோபர் 28-30 வரை நடைபெற்றது. 

  • The Central Bank Publishes 'Recent Economic Developments: Highlights of 2019 and Prospects for 2020'

    இலங்கை மத்திய வங்கி, “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை இன்றைய தினம் கணனிவழி அதேநேர முறைமையில் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுரம் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரவிறக்கப்படலாம் . 

    மேற்குறிப்பிட்ட வெளியீட்டில் பிரதிபலிக்கப்பட்டவாறு 2019இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பான சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

  • IMF Executive Board Completes the Sixth Review of Sri Lanka’s Extended Arrangement under the Extended Fund Facility

    •இலங்கை ஆறாவது மீளாய்வினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து ஆதரவு நிதியத்தின் அடுத்த பகிர்ந்தளிப்பினை இயலச் செய்துள்ளது. 

    •தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்கும் உறுதியானதும் அனைத்தையுமுள்ளடக்கியதுமான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நிலைத்து நிற்கும்கொள்கை ஒழுங்காற்று தொடர்ந்தும் இன்றியமையாததாகவிருக்கின்றது. 

    •அரசிறையின் சேகரிப்பு அரச படுகடனை ஒரு கீழ்நோக்கிய பாதையில் வைத்திருக்கும் வேளையில், சமூக மற்றும் முதலீட்டு செலவினத்தினை பாதுகாப்பதற்கும் மையமாகவிருக்கும். 

  • Regulatory actions taken by the Central Bank of Sri Lanka on The Finance Company PLC

    2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ், உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2018இல் செலிங்கோ குழுமத்தினுள் காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது. வாய்ப்புக்களைக் கொண்ட முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீளமைப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அத்தகைய முயற்சிகள் திருப்திகரமான மட்டத்தில் இன்னமும் வெற்றியளிக்கவில்லை. 

  • Inflation increased in September 2019

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஓகத்தின் 3.4 சதவீதத்திலிருந்து 2019 செத்தெம்பரில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள விடயங்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்கள் ஆண்டிற்கு ஆண்டு உணவு மற்றும் உணவல்லா பணவீக்கத்தில் பிரதிபலிக்கப்பட்டவாறு இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்து 2019 செத்தெம்பரில் முறையே 4.9 சதவீதம் மற்றும் 5.1 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. மேலும், முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட தாழ்ந்த தளமும் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்தது.

    முழுவடிவம்

  • The Financial Action Task Force delisted Sri Lanka from the Grey List

    பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான உலகளாவிய கொள்கை வகுப்பாளரான நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு, அதன் இணங்குவிப்பு ஆவணத்திலிருந்தும் அதாவது “சாம்பல் நிறப்பட்டியல்” என பொதுவாக அடையாளம் காணப்படும் ஆவணத்திலிருந்து இலங்கையை நீக்கியிருக்கிறது. இத்தீர்மானமானது 2019 ஒத்தோபர் 13 - 18 காலப்பகுதியில் பாரிஸில் நடைபெற்ற நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவின் முழுநிறைவான சமவாயத்தில் மேற்கொள்ளப்பட்டது. 

  • Financial Intelligence Unit of Sri Lanka Entered into an Agreement with INTERPOL National Central Bureau for Sri Lanka

    2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, இன்ரபோல் தகவல் முறைமையினை நேரடியாக அணுகும் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்காக, 2019 ஒத்தோபர் 11ஆம் நாளன்று இலங்கைக்கான இன்ரபோல் தேசிய மத்திய பணியகத்துடன் (தேசிய மத்திய பணியகம், கொழும்பு) ஒப்பந்தமொன்றினை இலங்கை மத்திய வங்கியில் செய்து கொண்டது.

  • Sri Lanka Purchasing Managers’ Index - September 2019

    2019 செத்தெம்பரில் தயாரிப்பு நடவடிக்கைகள் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.7 சதவீதம் கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தன. இது, 2019 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 1.9 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு வீழ்ச்சியாகும். தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட இம்மெதுவான போக்கிற்கு செத்தெம்பர் மாத காலப்பகுதியில் உற்பத்தியும் புதிய கட்டளைகளும் மெதுவடைந்தமையே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. உற்பத்தியில் மெதுவான போக்கு, குறிப்பாக, உணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு மற்றும் புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையில் அவதானிக்கப்பட்டது. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் மெதுவான வேகத்தில் விரிவடைந்த போதும் எதிர்காலத்தில், குறிப்பாக, உணவு மற்றும் குடிபானத் துறையின் தயாரிப்பிற்கு உயர்ந்த கேள்வி காணப்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக கொள்வனவுகளின் இருப்பு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது.

Pages