பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2020 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.
-
Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited
-
Meeting of Targets on Average Weighted Prime Lending Rate for end 2019 in line with the Monetary Law Act Order No. 2 of 2019
“அண்மைய கொள்கைத் தீர்மானங்களை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட சந்தைக் கடன் வழங்கல் வீதங்களுக்கு ஊடுகடத்துவதன் வினைத்திறனை அதிகரித்தல்” தொடர்பான 2019ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நாணயவிதி சட்டத்தின் கட்டளை, மற்றைய விடயங்களுடன், ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியும் 2019 ஏப்பிறல் 26ஆம் திகதியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டிகளின் வெளியீட்டில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அவற்றின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 திசெம்பர் 27ஆம் நாளளவில் குறைந்தபட்சம் 250 அடிப்படைப் புள்ளிகளினால் அவற்றைக் குறைத்தல் வேண்டுமென தேவைப்படுத்தியது.
-
Monetary Policy Review - No. 8 of 2019
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, 2019 திசெம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 7.00 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் தொடர்ந்தும் பேணுவதன் மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கையினைத் தொடர்ந்தும் பேணுவதற்குத் தீர்மானித்தது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆய்வு செய்தமையினைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. நாணயச்சபையின் தீர்மானமானது, பணவீக்கத்தினை 4–6 சதவீத வீச்சில் பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு உதவும் நோக்குடன் இசைந்து செல்வதாகக் காணப்படுகிறது.
-
Prof. W D Lakshman Takes Office as the Governor of the Central Bank of Sri Lanka
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் 2019 திசெம்பர் 24ஆம் நாள் செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் அவரது புதிய பதவியின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது நியமனமானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்அவர்களினால் செய்யப்பட்டது. இதற்கிணங்க, பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகவும் தொழிற்படுவார்.
-
Inflation decreased in November 2019
தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 5.6 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 2018 நவெம்பாில் நிலவிய உயா்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே பங்களித்தது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 7.3 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.0 சதவீதத்திற்கு கணிசமாக வீழ்ச்சியடைந்த வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு) 2019 ஒத்தோபாின் 4.3 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.
ஆண்டுச் சராசாியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 ஒத்தோபாின் 2.8 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 3.0 சதவீதத்திற்கு அதிகாித்தது.
-
Response to the Revision of Sri Lanka’s Rating Outlook by Fitch Ratings
2019 திசெம்பர் 19ஆம் நாளன்று இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் செலுத்தத் தவறும் வீதம் மீதான தோற்றப்பாட்டிற்கான திருத்தம் தொடர்பான பிட்ஜ் றேட்டிங்கின் அறிவித்தலைத் தொடர்ந்து நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு பதிலிறுப்பொன்றினை விடுத்திருக்கிறது. கீழே காணப்படும் இணைப்பில் இதனைக் காணமுடியும்.
-
Sri Lanka Purchasing Managers’ Index - November 2019
2019 நவெம்பரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் விரிவடைந்து 56.0 சுட்டெண் பெறுமதியொன்றினை பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகள்இ உற்பத்தி மற்றும் தொழில்நிலையில் ஏற்பட்ட விரிவாக்கமே முக்கிய காரணமாக அமைந்தது.
அனைத்து துணைச் சுட்டெண்களும் விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டிய போதும்இ 2019 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் அவை மெதுவான வேகத்திலேயே காணப்பட்டன. புதிய கட்டளைகளும் உற்பத்தியும் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் தயாரிப்பில் காணப்பட்ட மெதுவான தன்மை முக்கிய காரணமாக அமைந்தது. இவ்வபிவிருத்திகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் தொழில்நிலையும் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.
-
External Sector Performance - October 2019
இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட சிறிதளவு வீழ்ச்சி என்பனவற்றின் காரணமாக 2019 ஒத்தோபரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) சுருக்கமடைந்தது. இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதிகளிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றின் விளைவாக 2019இன் முதல் பத்து மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை 2018இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுருக்கமடைந்தது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் காணப்பட்ட வீழ்ச்சி 2019 ஒத்தோபரில் மேலும் கட்டுப்படுத்தப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்களில் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சி பதிவுசெய்யப்பட்ட போதும் 2019 ஒத்தோபரில் (ஆண்டிற்கு ஆண்டு) மேம்பட்டது. நிதியியல் கணக்கில், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகள் தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த வேளையில் அரச பிணையங்கள் சந்தை 2019 ஒத்தோபரில் சிறிதளவு தேறிய உட்பாய்ச்சலைத் தோற்றுவித்தது. ஒத்தோபர் மாத காலப்பகுதியில் செலாவணி வீதம் கலப்பு அசைவொன்றினைப் பதிவுசெய்ததுடன் இவ்வாண்டுப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராகத் தொடர்ந்தும் உயர்வடைந்தது.
-
Central Bank of Sri Lanka holds its 12th International Research Conference
இலங்கை மத்திய வங்கி அதன் மாபெரும் வருடாந்த நிகழ்வான 12ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2019 திசெம்பர் 09ஆம் திகதி நடத்தியது. மாநாடானது சமகால பேரண்டப் பொருளாதாரக் கொள்கை தொடர்பான கோட்பாட்டு ரீதியான மற்றும் அனுபவ ரீதியான ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதனையும் பல்லினத் தன்மை கொண்ட பின்புலத்திலிருந்து வருகை தருகின்ற ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது பார்வை, கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் அனுபவங்களைப் பல்வேறுபட்ட கோணங்களிலிருந்து ஆராய்வதற்கான தளமொன்றினை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
-
Public Awareness on Moneylending Activities
அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் உட்பட பல்வேறுபட்ட வழிமுறைகளினூடாக கடன் வழங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற விளம்பரங்கள் மற்றும் தொடர்பூட்டல் வடிவங்கள் பற்றி இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது. இது தொடர்பாக, குறிப்பிட்ட ஒழுங்கீனங்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சில குற்றச்சாட்டுக்கள் கடன் வழங்குநர் தொடர்பான மோசடிகள் தொடர்பானவையாகக் காணப்படுகின்ற வேளையில், சில உயர் வட்டி வீதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும், வாடிக்கையாளர்களுக்கான தொந்தரவு தொடர்பானவையாகவும் மற்றும் வாடிக்கையாளர் தகவல் தொடர்பான இரகசியத்தன்மைகளை தவறாகப் பயன்படுத்துகின்றமை தொடர்பாகவும் காணப்படுகின்றன.