இலங்கை மத்திய வங்கி 2020ஆம் ஆண்டினை இலங்கையின் டிஜிட்டல் கொடுக்கல்வாங்கலுக்கான ஆண்டாகப் பெயரிட்டிருக்கிறது. இம்முயற்சியின் முக்கிய குறிக்கோள் உரிமம்பெற்ற வங்கிகளினாலும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினாலும் மற்றும் லங்கா கிளியர் பிறைவேட் லிமிடெட்டினாலும் நாட்டிற்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கொடுப்பனவுத் திட்டங்களைப் பிரபல்யப்படுத்துவதேயாகும். விழிப்புணர்வு என்பது செல்லிடத் தொலைபேசிக் கொடுப்பனவு பிரயோகங்களின் பயன்பாட்டினை அதிகரிப்பதற்கான திறவுகோலாகும். இம்முயற்சி தொழில்நுட்பவியல் நியதிகளில் நாட்டினை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு உதவுமென மத்திய வங்கி நம்புவதன் காரணமாக, இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீா்ப்பனவுத் திணைக்களம் டிஜிட்டல் கொடுப்பனவு மாதிரிகளைப் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வினை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
-
The Central Bank Holds Payment App Awareness and Onboarding Session
-
Credit Support to Accelerate Economic Growth
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (இனி உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பிடப்படும்) ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஊக்கத்தொகைகளை முழுமைப்படுத்த அந்தந்த உரிமம்பெற்ற வங்கிகளின் தகுதிவாய்ந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவன கடன்பெறுநர்களுக்கு சிறப்புக் கடன் ஆதரவுத் திட்டத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது வங்கிகளுக்கிடையில் சீரான திட்டமொன்றினை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. வங்கிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினை கீழேயுள்ள இணைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் திட்டத்தினுடைய முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
-
IMF Staff Concludes Visit to Sri Lanka
அலுவலர் குழுவின் பின்னரான பத்திரிகை வெளியீடானது நாடொன்றிற்கான விஜயமொன்றினைத் தொடர்ந்து பூர்வாங்க கண்டுபிடிப்புக்களை/ பெறுபேறுகளைத் தெரிவிக்கின்ற ப.நா.நிதியத்தின் அலுவலர் குழுக்களின் கூற்றுக்களை உள்ளடக்கும். இக்கூற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென அவசியமில்லை. இந்த அலுவலர் குழு நிறைவேற்றுச் சபை கலந்துரையாடலுக்கு வழிவகுக்கமாட்டாது.
-
CCPI based Inflation increased in January 2020
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 திசெம்பரில் 4.8 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த விலைகளின் அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2019 திசெம்பரில் 6.3 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 12.4 சதவீதம் கொண்ட 25 மாத உயர்வொன்றிற்கு கணிசமாக அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.9 சதவீதமாகக் காணப்பட்டது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 திசெம்பரில் 4.5 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 4.4 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.
-
The Central Bank of Sri Lanka Reduces its Policy Interest Rates
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 சனவரி 30ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆய்வு செய்தமையினைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. இத்தீர்மானமானது, 4–6 சதவீத வீச்சினுள் நன்கு நிலைப்படுத்தப்பட்டுள்ள பணவீக்கத்திற்கான சாதகமான நடுத்தரகால தோற்றப்பாட்டினைக் கருத்திற்கொண்டு சந்தை கடன் வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான குறைப்பொன்றுக்கு ஆதரவளித்து இதன் வாயிலாக பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சிக்கு வசதியளிக்கும்.
-
Inflation increased in December 2019
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 நவெம்பரில் 4.1 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பரில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2018 திசெம்பரில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபர விளைவுடன் சேர்ந்த உணவு வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் இது தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 நவெம்பரில் 4.0 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பரில் 8.6 சதவீதத்திற்கு கணிசமாக அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 4.2 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.
-
Forensic Audits
மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வுகள் தொடர்பில் பல தவறான அறிக்கையிடல்கள் இடம்பெற்றுள்ளதை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளதுடன் பின்வரும் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள விரும்புகின்றது:-
-
External Sector Performance - November 2019
இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் இரண்டிலும் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக 2019 நவெம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) சிறிதளவில் சுருக்கமடைந்தது. 2019இன் முதல் பதினொரு மாத காலப்பகுதியில், ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்படட சிறிதளவு அதிகரிப்புடன் இறக்குமதிகள் மீதான செலவினத்தல் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி சேர்ந்த கொண்டமையின் விளைவாக, 2018இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தது. 2019 நவெம்பரில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், சுற்றுலா வருகைகள் வீழ்ச்சியடைந்த போதும், சுற்றுலாத் தொழில் துறையில் தொடர்ச்சியான மீட்சி அவதானிக்கப்பட்டிருக்கிறது. 2019 நவெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்து 2019இன் முதல் பதினொரு மாத காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சியைப் பதிவுசெய்தது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - December 2019
2019 திசெம்பரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் கொள்வனவுகளின் இருப்புக்கள் என்பனவற்றில் ஏற்பட்ட மெதுவான விரிவாக்கமே முக்கிய காரணமாகும்.
-
Road Map 2020 - Monetary and Financial Sector Policies for 2020 and Beyond
இன்று, இலங்கையின் பொருளாதாரம் முக்கியமானதொரு காலகட்டத்தில் காணப்படுகிறது. இறைமையுடைய நாடென்ற ரீதியில் தசாப்த காலங்களாக வகுக்கப்பட்ட கொள்கை வழிமுறைகள் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களையும் முன்னேற்றியிருக்கின்றன. இருப்பினும் கூட, கடுமையான சவால்களாக - சராசரிக்கும் குறைவான வளர்ச்சி, ஆங்காங்கே காணப்படும் விடாப்பிடியான வறுமை, உற்பத்தியாக்க மூலவளங்கள் குறைந்தளவில் பயன்படுத்தப்படுகின்றமை, ஏற்றுமதிகள் போதுமானளவில் விரிவடையாமை மற்றும் பன்முகப்படுத்தப்படாமை, படுகடனை உருவாக்காத மூலதன உட்பாய்ச்சல்களில் காணப்படும் பற்றாக்குறை, பாரிய கொடுகடன் மற்றும் வட்டி வீத சுழற்சி வட்டம் மற்றும் உயர் இறைப் பற்றாக்குறைகள் மற்றும் பொதுப்படுகடன் மட்டங்கள் என்பன தொடர்ந்தும் காணப்படுகின்றன.