உன்னதமிக்க மற்றும் தலைசிறந்த சேவையினை தாய் நாட்டிற்கு வழங்கியமைக்காக புகழ்பெற்ற ஆளுமைமிக்கவர்களுக்கான 'தேசிய கௌரவம்" அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2019 ஓகத்து 19ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களுடன் மேலும் ஐந்து ஆளுமைமிக்கவர்களுக்கு சனாதிபதியினால் 'தேசமான்ய" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
'தேசமான்ய" என்பது குடியியல் கௌரவமாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாவது அதியுயர்வான தேசிய கௌரவமாகும். இது தேசத்திற்கு வழங்கிய உன்னதமிக்க மற்றும் தலைசிறந்த சேவையினை அடையாளப்படுத்தி வழங்கப்படுகின்றது.