• External Sector Performance - December 2021

    ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிய பெறுமதிகளைக் கொண்டிருந்த போதும், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2021 திசெம்பரில் விரிவடைந்தமைக்கு இறக்குமதிகளின் மிதமிஞ்சிய அதிகரிப்பினால் பதிவுசெய்யப்பட்ட முன்னொருபோதுமில்லாத உயர்ந்தளவிலான மாதாந்த இறக்குமதிச் செலவினம் முக்கிய காரணமாயமைந்தது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில், ஏற்றுமதிகளின் வளர்ச்சியினை விட விஞ்சிக் காணப்பட்ட இறக்குமதிகளின் கணிசமானளவு அதிகரிப்பினால் உந்தப்பட்டு வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவு விரிவடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்புடன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்திருந்தன.

  • Reiteration of Sri Lanka’s Commitment to Service Forthcoming Debt Obligations

    இலங்கையானது நாட்டிற்கான படுகடனைச் செலுத்தத் தவறுவதன் விளிம்பிலிருப்பதாக அண்மையில் வெளியான சில ஊடக அறிக்கைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியானது அத்தகைய கூற்றுக்கள் முற்றிலும் அடிப்படையற்றவையெனத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதுடன் பன்னாட்டு நியமங்களின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நம்பகமான உத்தியோகபூர்வ தரவுகளின் கிடைப்பனவிற்கு மத்தியிலும் இவ்வறிக்கைகள் வெளிப்படையாகவே உண்மைக்குப் புறம்பான துல்லியமற்ற தரவுகளைக் கொண்டுள்ளனவெனவும் வருந்தி நிற்கின்றது. ஆகையால், அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன எதிர்வரவுள்ள சகல படுகடன் கடப்பாடுகளையும் பூரணப்படுத்துவதன் மூலம் இலங்கையின் அப்பழுக்கற்ற படுகடன் பணிக்கொடுப்பனவுப் பதிவினைப் பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளன என்பதனை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர் சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும்  இலங்கை மத்திய வங்கியானது உறுதியளிக்க விரும்புகின்றது.

  • Central Bank of Sri Lanka Launches the 'National Remittance Mobile Application'

    இலங்கைக்கு வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிப்பதற்கும் அதேபோன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு பணம் அனுப்புகின்ற போது முறைசார்ந்த பணம் அனுப்பும் வழிகளை உபயோகிப்பதனை ஊக்குவிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதற்கமைய, "Lanka Remit" என்ற வர்த்தகநாமத்தின் கீழ் தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. இச்செயலி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

  • Inflation in January 2022 - CCPI

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 திசெம்பரின் 12.1 சதவீதத்திலிருந்து 2022 சனவரியில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2021 திசெம்பரின் 6.0 சதவீதத்திலிருந்து 2022 சனவரியில் 6.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் பணவீக்கம் தூண்டப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 திசெம்பரின் 22.1 சதவீதத்திலிருந்து 2022 சனவரியில் 25.0 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 திசெம்பரின் 7.5 சதவீதத்திலிருந்து 2022 சனவரியில் 9.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

  • Masterplan for Consolidation of Non-Bank Financial Institutions being fast-tracked

    இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முதன்மைத் திட்டத்தின் (முதன்மைத் திட்டம்) கீழ், பின்வரும் 9 நிறுவனங்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத் தேவைப்பாடுகளை நிறைவுசெய்வதற்காக   ஏற்கனவே ரூ. 12.56 பில்லியன் கொண்ட புதிய மூலதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளன: அவை, சர்வோதய டெவலப்மென்ட் பினான்ஸ் பிஎல்சி, டயலொக் பினான்ஸ் பிஎல்சி, ஏசியா எசட் பினான்ஸ் பிஎல்சி, லங்கா கிறடிட் அன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி, பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் பினான்ஸ் பிஎல்சி, சொப்ட்லொஜிக் பினான்ஸ் பிஎல்சி, மேர்ச்சன்ட் பாங்க் ஒவ் சிறிலங்கா அன்ட் பினான்ஸ் பிஎல்சி, யு பீ பினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் றிச்சட் பீரிஸ் பினான்ஸ் லிமிடெட்.

  • External Sector Performance - November 2021

    ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வரலாற்றில் உயர்ந்தளவிலான மாதாந்த ஏற்றுமதிப் பெறுமதியினை 2021 நவெம்பரில் பதிவுசெய்த வேளையில், தொடர்ச்சியாக ஆறாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனிற்கு மேலான ஏற்றுமதி பெறுமதிகளைக் குறித்துக்காட்டியிருந்தன. அதேவேளை, 2021 நவெம்பரில் இறக்குமதிச் செலவினமும் உயர்ந்த வீதமொன்றில் அதிகரித்துக் காணப்பட்டது. அதிகரித்த ஏற்றுமதிகளின் சாதகமான தாக்கத்தினைப் பிரதிபலித்து, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை 2020 நவெம்பரில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 600 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021 நவெம்பரில் ஐ.அ.டொலர் 553 மில்லியனிற்குச் சுருக்கமடைந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்புடன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்தமையானது மீட்சியின் வலுவான சமிக்ஞைகளைக் காண்பித்துள்ளன. 2021 நவெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்களில் மேலுமொரு மிதமான போக்கு அவதானிக்கப்பட்டிருந்தது. வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதம் இம்மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 202 ரூபாவாக தொடர்ந்தும் காணப்பட்டது. 

  • Central Bank makes it mandatory for hotel service providers to accept payments from persons resident outside Sri Lanka in foreign exchange

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை சுற்றுலாவிடுதிப் பணிகளை வழங்குவோர் இலங்கைக்கு வெளியே வதியும் ஆட்களிடமிருந்து வெளிநாட்டுச் செலாவணியில் மாத்திரமே கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதனை கட்டாயமாக்குகின்ற விதிகளை விடுத்திருக்கிறது. இவ்விதிகள் 2022 சனவரி 21ஆம் நாளிடப்பட்ட இல. 2263/41 கொண்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

    இவ்விதிகள் வெளியிடப்பட்டமையினைத் தொடர்ந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் பதிவுசெய்து கொண்டுள்ள அத்துடன் அதனால் உரிமம் வழங்கப்பட்டுள்ள சுற்றுலாவிடுதிப் பணி வழங்குவோர் பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டுமென தேவைப்படுத்தப்படுகின்றனர்: 

  • NCPI based annual average headline inflation rises to 7.0 per cent, while Y-o-Y inflation increases to 14.0 per cent in December 2021

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 நவெம்பரின் 11.1 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 14.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி அடிப்படையில் தேநுவிசு 2021 நவெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 7.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்களால் பணவீக்கம் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கமானது (ஆண்டுக்கு ஆண்டு) 2021 நவெம்பரின் 16.9 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 21.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டுக்கு ஆண்டு) 2021 நவெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

  • Monetary Policy Review - No. 1 of 2022

    நாணய மற்றும் ஏனைய கொள்கை வழிமுறைகள் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது

    தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலனையிற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 சனவரி 19ஆம் நாளன்று இடம்பெற்ற அதனது  கூட்டத்தில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை வலுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு கொள்கை வழிமுறைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானித்தது. அதற்கமைய, நாணயச்சபையானது பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டிருந்தது:

    அ) மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்தல்;  

    ஆ) எரிபொருள் கொள்வனவுகளுக்காக அத்தியாவசிய இறக்குமதிப் பட்டியல்களின் நிதியிடலை உரிமம்பெற்ற வங்கிகளின் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களுக்கு விகிதசமமாக அவ்வங்கிகளுக்கிடையில் பகிர்ந்தளித்தல்;

    இ) அனைத்துப் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாப்பயணி நிறுவனங்களும் இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆட்களுக்கு வழங்கப்படும் பணிகள் தொடர்பில் வெளிநாட்டுச் செலாவணியை மாத்திரம் ஏற்றுக்கொள்வதனைக் கட்டாயமாக்குதல்;

    ஈ)  “உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் ஐ.அ.டொலர் ஒன்றிற்கு வழங்கப்படும் ரூ.2.00 ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக தொழிலாளர் பணவனுப்பல்களுக்காகக் கொடுப்பனவுசெய்யப்படும் ஐ.அ.டொலர் ஒன்றிற்கு மேலதிகமாக ரூ.8.00 கொடுப்பனவை வழங்குவதனை 2022 ஏப்பிறல் 30 வரை நீடித்தல், 2022 பெப்புருவரி 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம்பெற்ற வங்கிகள் அத்துடன் ஏனைய முறைசார் வழிக;டாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றிற்கு ரூ.1,000 கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீளளித்தல் அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய மற்றும் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட வைப்புகள் இரண்டிற்கும் உயர்வான வட்டி வீதங்களை அறிமுகப்படுத்தல்.

  • Sri Lanka Purchasing Managers’ Index - December 2021

    தயாரிப்பு நடவடிக்கைகள், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 2021 திசெம்பரில் விரிவடைதலை நிலைநிறுத்தி 58.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்துள்ளது என்பதனை தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் எடுத்துக்காட்டுகின்றது. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகளில் ஏற்பட்ட விரிவடைதல் இதற்கு பிரதான காரணமாக அமைந்தது. மாத காலப்பகுதியில் தொழில்நிலை தவிர்ந்த அனைத்து துணைச் சுட்டெண்களும் அதிகரித்தன. 

    பணிகள் துறை கொ.மு.சுட்டெண், திசெம்பரில் 62.4 சுட்டெண் பெறுமதியை அண்மித்து 2021இன் இறுதியில் வலிமைபெற்றது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை, மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்கைகள் துணைச் சுட்டெண்களில்  அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் மூலம் இவ்வதிகரிப்பு துணையளிக்கப்பட்டிருந்தது. 

Pages