• NCPI based annual average headline inflation rises to 6.2 per cent, while Y-o-Y inflation increases to 11.1 per cent in November 2021

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஒத்தோபரின் 8.3 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை ஆண்டுச் சராசரி அடிப்படையில் தேநுவிசு 2021 ஒத்தோபரின் 5.7 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்களால் பணவீக்கம் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கமானது (ஆண்டுக்கு ஆண்டு) 2021 ஒத்தோபரின் 11.7 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 16.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டுக்கு ஆண்டு) 2021 ஒத்தோபரில் 5.4 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

  • External Sector Performance - October 2021

    வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை 2020 ஒத்தோபரில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 509 மில்லியனிலிருந்து 2021 ஒத்தோபரில் ஐ.அ.டொலர் 495 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தது. ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2021 ஒத்தோபரில் வரலாற்றில் முதற்தடவையாக உயர்ந்தளவிலான மாதாந்த ஏற்றுமதிப் பெறுமதியினைப் பதிவுசெய்த அதேவேளையில், தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனிற்கு மேலான ஏற்றுமதி வருவாய்களைப் பதிவுசெய்தது. மேம்பாடடைந்துவரும் நாணய மாற்றல்களுடன் கூடிய ஏற்றுமதி வருவாய்களின் இத்தகைய அதிகரிப்பு எதிர்வரும் காலப்பகுதியில் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதிச் செலவினமும் 2021 ஒத்தோபரில் ஆண்டிற்காண்டுஅடிப்படையில் வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்புடன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்தன. 2021 ஒத்தோபரில் தொழிலாளர் பணவனுப்பல்களில் மேலுமொரு மிதமான போக்கு அவதானிக்கப்பட்டது. இம்மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை இம்மாத காலப்பகுதியில் வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடி செலாவணி வீதம் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 201 ரூபாவாகக் காணப்பட்டது.

  • The Government Strongly Disputes the Hurried Rating Action by Fitch Ratings

    பெருமளவிற்கு ஆய்ந்தமைவில்லாத ஓர் நடத்தையாக பிட்ச் தரமிடல் 2021 திசெம்பர் 17ஆம் நாளன்று இலங்கையின் நாட்டிற்கான பன்னாட்டுத் தரமிடலினைக் குறைத்தது. இதனூடாக ஒட்டுமொத்த உலகமும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பன்முக அலைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் சூழலொன்றில் இலங்கையில் நடைபெற்றுவரும் நேர்க்கணிய அபிவிருத்திகளை பிட்ச் தரமிடல் அங்கீககரிக்க தவறியமை எடுத்துக்காட்டப்படுகின்றது. இந்நடவடிக்கையானது 2022 தேசிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்பிற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விசஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தரமிடலின் வாத ஆதாரமற்ற குறைப்பினைப் போன்றதாகும்.

  • Provincial Gross Domestic Product (PGDP) - 2020

    கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில், மேல் மாகாணம் பொருளாதாரத்தின் உயிரோட்டத்தின் மையமாக தொடர்ந்தும் விளங்கிய அதேவேளை அதன் பங்கு வீழ்ச்சியடைந்து ஒட்டுமொத்த சுருக்கமடைதலுக்கும் பங்களிப்புச்செய்தது.

    நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாரிய பங்கினை (38.0 சதவீதம்) மேல் மாகாணம் தனதாக்கிக் கொண்டது. எனினும், நோய்த்தொற்று நிலைமையின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் மெதுவடைந்ததன் விளைவாக அதன் பங்கு 2019 இலிருந்து 1.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மத்திய (11.3 சதவீதம்) மற்றும் வடமேல் (11.0 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் காணப்பட்டன. 

  • SL Purchasing Managers’ Index (PMI) – November 2021

    தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 நவெம்பரில் விரிவடைந்தன.

    நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்புவதிலிருந்து நன்மையடைந்து, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 நவெம்பரில் தொடர்ந்தும் விரிவடைந்து 61.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. உற்பத்தி, புதிய கட்டளைகள் மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் இவ்வதிகரிப்பிற்கு தொடர்ந்தும் பிரதானமாகப் பங்களித்தன. 

    பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 2021 நவெம்பரில் 62.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, மேலும் உறுதியான செயலாற்றுகையினைக் குறித்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் மூலம் இவ்வதிகரிப்பிற்கு துணையளித்திருந்தன. 

  • The Credit Information Bureau (CRIB) donated Rs. 50 Mn to the “COVID – 19 Healthcare and Social Security Fund”

    நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்று பரவலினை கட்டுப்படுத்தி அதனோடிணைந்த சமூக நலனோம்புகை நிகழ்ச்சித்திட்டத்தினை இலக்காகக் கொண்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை வலிமைப்படுத்துவதற்காக சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களினால் தாபிக்கப்பட்ட “கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு” பரந்தளவிலான பொறுப்புகள் உரித்தளிக்கப்பட்டுள்ளன. “கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு” உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொடையாளிகள் தமது நிதியியல் பங்களிப்புக்களை வழங்கலாம்.

    “கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின்” தலைவர் என்ற வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கொடுகடன் தகவல் பணியகத்தின் பொது முகாமையாளர் திரு. நந்தி அந்தோனியிடமிருந்து “கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக” ரூ.50 மில்லியன் கொண்ட அன்பளிப்பினைப் பெற்றுக்கொண்டார்.

  • Central Bank Initiates Regulatory Actions Against Errant Money Changers

    2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாத நடவடிக்கைகளில் சில அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் ஈடுபடுகின்றமை தொடர்பான பல்வேறு முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் முகமாக, இலங்கை மத்திய வங்கி அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் தளங்களில் தொடர்ச்சியான திடீர் பரிசோதனைகளை மேற்கொள்கின்றது. இதன்மூலம் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பலப்படுத்தப்படும்.

    2021 நவம்பர் மற்றும் திசெம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின் போது, பின்வரும் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தொடர்பான பணிப்புரைகளுடன் இணங்கியொழுகுவதற்கு அவர்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • The Central Bank issues Operating Instructions on “Additional Incentive Scheme on Inward Workers’ Remittances”

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, “உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்படுகின்ற ரூ.2.00 ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக 2021.12.01 தொடக்கம் 2021.12.31 வரையான காலப்பகுதியின் போது உரிமம்பெற்ற வங்கிகள், ஏனைய சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைசார்ந்த வழிகளூடாக தொழிலாளர்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்புகின்ற பணம் இலங்கை ரூபாய்களாக மாற்றப்படுகின்ற போது அத்தகைய நிதியங்களுக்காக  ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ஊக்குவிப்பாக ரூ.8.00 கொண்ட தொகையினை கொடுப்பனவு செய்வதற்குத் தீர்மானித்துள்ளது.

    அதற்கமைய, 2021 திசெம்பர் மாதகாலப்பகுதியில் இலங்கை ரூபாய்களாக மாற்றப்படுகின்ற வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களினால் அனுப்பப்படுகின்ற பணத்திற்காக ஐ.அ.டொலர் ஒன்றிற்கான மொத்த ஊக்குவிப்புத் தொகை ரூ.10.00 ஆக அமைந்திருக்கும்.

  • Request for Proposals for Securitised Financing Arrangement for the Government of Sri Lanka

    The Central Bank of Sri Lanka (CBSL), on behalf of the Government of Sri Lanka (GOSL) requested proposals from international investor community on 12 November 2021 for the arrangement of a medium-term foreign currency financing facility by securitising the foreign currency receipts of the Central Bank of Sri Lanka under the mandatory sale of ten (10) per cent of workers’ remittances converted into Sri Lankan Rupees by licensed banks. The deadline for submitting responses was 15.00 hrs on 30 November 2021.

    Accordingly, there were seven (7) responses, among which there were five (5) leading international banks and two (2) established investment arrangers.

    These responses are being reviewed to determine the most suited modality to initiate the securitised financing arrangement.

  • CCPI YoY inflation increases to 9.9 per cent, while annual average inflation rises to 5.3 per cent in November 2021

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஒத்தோபரின் 7.6 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 ஒத்தோபரின் 4.8 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஒத்தோபரின் 12.8 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 17.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஒத்தோபரின் 5.4 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது

Pages