அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வங்கித் தொடர்பாடல்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் வெளியீடுகளை எவ்வாறு கொள்வனவு செய்வது?

இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்,

  1. பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சி சாலை (தொ.பே. 011-2444502)
  2. வங்கிகளுக்கான கற்கை நிலையத்தின் விற்பனை கருமபீடம், ராஜகிரிய (தொ.பெ: 011 2477829)
  3. நாட்டிலுள்ள பிரபல புத்தகசாலைகள்
  4. பிரதேச அலுவலகம் மாத்தளை (தொ.பே. 066 2223367), அனுராதபுரம் (தொ.பே. 025 2222055), மாத்தறை (தொ.பே. 041 2222774), திருகோணமலை (தொ.பே. 026 2226966), கிளிநொச்சி (தொ.பே. 021 2285914) மற்றும் நுவரெலியா (தொ.பே. 052 3059004).

வைப்பகத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக சந்தா செலுத்துவது எவ்வாறு?

வாசகர்கள் வைப்பகத்தைப் பெற்றுக் கொள்வதற்கு (ஒரு வருடத்திற்கு அல்லது 6 மாதங்களுக்கு) இலங்கை மத்திய வங்கியின் பேரில் காசுக் கட்டளை அல்லது காசோலை மூலம் சந்தாக் கொடுப்பனவை செலுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

எனது சந்தாவினை மீள் புதுப்பிப்பது எவ்வாறு?

தமது சந்தாக் காலத்தின் முடிவில் விரும்பிய காலப்பகுதிக்காக உரிய கொடுப்பனவினை செய்வதன் மூலம் சந்தாவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் ஆசிரிய குழுக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி எடுத்துரைப்புகளை வழங்குகின்றதா?

ஆம், அதன் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் விரிவுரைகள்ஃ செயலமர்வுகள்/ கருத்தரங்குகள் போன்றவற்றுக்கு தொடர்பூட்டல் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொள்கின்றது. அத்தகைய எடுத்துரைப்பொன்றினை உங்களது பாடசாலையில் நடாத்துவதற்கு நீங்கள் விரும்பினால் தொடர்பூட்டல் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்து மூலக் கோரிக்கையொன்றினை முன்வைக்கலாம் (தொ.பே. இல. 011-2477418). வளவாளர்கள் கிடைக்கப்பெறும் தன்மைக்குட்பட்டு தொடர்பூட்டல் திணைக்களம் உங்களது கோரிக்கையினை நிறைவேற்றும்.

நாணய அரும்பொருட்காட்சி சாலை திறந்திருக்கும் நேரம்?

நாணய அரும்பொருட்காட்சி சாலை அரசாங்க மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தவிர்ந்த வாரநாட்களில் மு.ப. 9.00 தொடக்கம் பி.ப. 4.15 வரைத் திறந்திருக்கும். 

பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

மத்திய வங்கி அதன் பொதுமக்கள் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் பல்வேறு அமைச்சுக்களாலும் ஏற்பாடு செய்கின்ற கல்விசார்ந்த மற்றும் வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்கின்றது. நாணய அரும்பொருள் காட்சிசாலை, ஊழிய சேம நிதிய வினவல்கள், மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள் மற்றும் வெளியீட்டு விற்பனை நிலையம் போன்றன இலங்கை மத்திய வங்கியின் கூடங்களில் முக்கிய அம்சங்களாகும். 
மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டுவதற்கும் வங்கியின பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் வங்கியினால் வழங்கப்படுகின்ற பணிகள் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கும் தொடர்பூட்டல் திணைக்களம் ஆவணப் படங்களைத் தயாரிக்கின்றது.