தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினை இலங்கையில் முதன்முறையாக 2021 மாச்சு 04 அன்று தொடங்கி வைப்பதனை அறிவிப்பதில் இலங்கை மத்திய வங்கி பெருமகிழ்ச்சியடைகின்றது. இத்தொடக்க நிகழ்வைக் குறிக்கும்முகமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சரும் நிதித் திட்டமிடல் அமைச்சருமான கௌரவ மகிந்த ராஜபக்ஷ் அவர்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்கள் மூலம் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் வழங்கி வைக்கப்பட்டது. இத்தொடக்க நிகழ்வில் பணம் மற்றும் மூலதனச் சந்தை அத்துடன் அரச தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி அத்துடன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபன நாட்டிற்கான பிரதானி திருமதி. அமீனா ஆரிப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Thursday, March 4, 2021