அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை காலத்தில் இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் வழிமுறைகள்

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறைக் காலத்தின் போது இலங்கை மத்திய வங்கியினால் பின்வரும் வழிமுறைகள் பின்பற்றப்படுமென இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.

 

அதேநேர மொத்தத் தீர்ப்பனவுத் தொழிற்பாடுகள்

அதேநேர மொத்தத் தீர்ப்பனவுத் தொழிற்பாடுகள் (RTGS) தொடர்ந்தும் வழமைபோன்று இடம்பெறும்.

 

வங்கித்தொழிற்துறை தொழிற்பாடுகள்

வங்கிகள் தமது தொழிற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொள்கின்ற அதேவேளை, கொரோனா (COVID - 19) வைரஸ் பரவும் இடர்நேர்வினைத் தணிப்பதற்கு இணையவழிக் கொடுக்கல்வாங்கல்களை அதிகம் மேற்கொள்ளுமாறு பொதுமக்களை ஊக்குவித்தல் உள்ளடங்கலாக அனைத்து முன்னெச்சரிக்கை வழிமுறைகளையூம் எடுக்குமாறு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

ஊழிய சேம நிதிய நடவடிக்கைகள்

ஊழிய சேம நிதியத் திணைக்களத்தினால் வழங்கப்படும் பொதுமக்களுக்கான பணிகள் 2020 மாச்சு 17 தொடக்கம் 20 வரை நிறுத்தப்படும். அதற்கமைய, கொழும்பிலுள்ள ஊழிய சேம நிதிய அலுவலகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு அல்லது குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது. எனினும், அவசியம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களின் போது பொதுமக்கள் தமது ஆவணங்களை ஊழிய சேம நிதியத் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதனை வசதிப்படுத்துவதற்கு கொழும்பு 01,  சேர் பாரோன் ஜயதிலக மாவத்தையில் அமைந்துள்ள லொயிட்ஸ் கட்டடத்திற்கு வெளியில் ஆவணங்களை இடுவதற்கான பெட்டியொன்று வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊழிய சேம நிதிய கருமங்கள் தொடர்பில் ஏதேனும் அவசர விசாரணைகளுக்காக பின்வரும் வழிமுறைகளினூடாக தொடர்புகொள்ளவும்.

மின்னஞ்சல்: epfhelpdesk@cbsl.lk

உடனடி அழைப்பு: 0112206690-94

மத்திய வங்கி: 0112477000

 

Published Date: 

Tuesday, March 17, 2020