பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கடன் வசதி

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (இனி உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பிடப்படும்) ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஊக்கத்தொகைகளை முழுமைப்படுத்த அந்தந்த உரிமம்பெற்ற வங்கிகளின் தகுதிவாய்ந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவன கடன்பெறுநர்களுக்கு சிறப்புக் கடன் ஆதரவுத் திட்டத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது வங்கிகளுக்கிடையில் சீரான திட்டமொன்றினை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. வங்கிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினை கீழேயுள்ள இணைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் திட்டத்தினுடைய முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

 

பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • இத்திட்டமானது 01.01.2020 இலிருந்து 31.12.2020 வரை தொழிற்பாட்டிலிருக்கும்.
  • தகுதியான பங்கேற்பாளர்கள்
   • இந்த திட்டத்தின் நோக்கத்திற்காக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எனப்படுபவை 31.12.2019இல் முடிவடைந்த ஆண்டிற்கான வருடாந்த வருமானமாக ரூபா 16 மில்லியனிலிருந்து ரூபா 750 மில்லியன் வரை கொண்ட கடன்பெறுநர்கள். எப்படியாகினும், 31.12.2019இல் செயற்படாக் கடன்களாக வகைப்படுத்தப்பட்ட சிறிய நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கு ஆகக்குறைந்த வருடாந்த வருமானமான ரூபா 16 மில்லியன் எனும் நிபந்தனை பொருந்தாது.
   • உற்பத்தி, சேவைகள், விவசாயம் (பதனிடல் உட்பட) மற்றும் கட்டுமானம் ஆகியவை ஆதரவு கிடைக்கும் வணிகத் துறைகளாக இருக்கும். எப்படியாகினும், 31.12.2019இல் செயற்படாக் கடன்களாக வகைப்படுத்தப்பட்ட சிறிய நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கு, பெறுமதி சேர் வியாபாரங்கள் மற்றும் வியாபாரம் போன்ற இத்திட்டத்தின் கீழ் ஆதரவு வழங்கும் வியாபாரத் துறைகளாக உள்ளடக்கப்படும்.

  • தகுதியுடைய கடன்பெறுநர் 10.02.2020இல் அல்லது அதற்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுத்துமூல கோரிக்கையினை விடுக்குமிடத்து உரிமம்பெற்ற  வங்கிகள் கடன் ஆதரவு திட்டத்தை வழங்கவேண்டும்.
  • குறிப்பிடப்பட்ட வட்டித்தொகையை கடன்பெறுநர்கள் செலுத்தாதவிடத்து இத்திட்டத்தின் நன்மைகளை அனுமதிக்க முடியாது மற்றும் அவர்கள் இத்திட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருக்கமுடியாது.

 

செயற்படு கடன்கள்

  • உரிமம்பெற்ற வங்கியில் 31.12.2019 இல் ரூபா 300 மில்லியன் வரையான மொத்த நிலுவை அடிப்படையிலான உட்படுத்தல்களைக் கொண்ட தகுதியான பங்கேற்பாளர்கள் உரிமம்பெற்ற வங்கிகளிடமிருந்து 01.01.2020 இலிருந்து 31.12.2020 வரை இத்திட்டத்தின் கீழ் சலுகையைப் பெறலாம்.
  • 31.03.2020 வரையான காலப்பகுதியில் தீர்வுக்கு அல்லது முதிர்ச்சியின் போது அல்லது மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய நிலையான மேலதிகப்பற்று வசதிகள் 30.06.2020 வரை நீடிக்கக்கூடியதாக இருக்கும். எப்படியாகினும் 31.12.2019இல் உள்ளவாறான தற்காலிக மேலதிகப்பற்றின் பிரகாரம், தற்காலிக மேலதிகப்பற்றின் முதிர்வு இரண்டு மாதங்களினால் நீடிக்கக்கூடியதாக இருக்கும்.
  • கொடுத்துத் தீர்க்க வேண்டிய அல்லது முதிர்வடைகின்ற அல்லது 31.03.2020 காலப்பகுதியில் மீளாய்வுக்குத் தகுதியுடைய வர்த்தக நிதியிடல் வசதிகள் 30 நாட்களினால் நீடிக்கக்கூடியதாக இருக்கும்.
  • குறைந்தபட்ச ஒரு வருடகால சலுகைக் காலத்துடன் நிபந்தனைகளுக்கமைய உரிமம்பெற்ற வங்கிகளானது, கடன்பெறுநர் நம்பகத்தன்மையான வியாபாரத் திட்டத்தினை வழங்கும்போது ஒரு ரூபா 300 மில்லியனுக்கு மேற்படாமல் மேலதிகக் கடன்களையோ அல்லது புதிய கடன் வசதிகளையோ முதலீடு அல்லது தொழிற்படு மூலதன தேவைக்காக வழங்கலாம்.
  • வியாபார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக ஆகக்கூடுதலாக சராசரி நிறையிடப்பட்ட முதன்மை கடன்வழங்கும் வீதத்துடன் 1.5 சதவீதத்தினை கூட்டுவதற்கு சமமான வட்டி வீதத்தில் ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக முதலீட்டு நோக்கத்திற்கான கடன் வசதிகளை மீளச்செலுத்தக்கூடியதாக இருக்கும். தொழிற்படு மூலதனத் தேவைக்கான வசதிகள் சராசாி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கும் வீதத்திற்குச் சமமான வட்டி வீதத்தில் இரண்டு வருடத்திற்கு மேலதிகமாக மீளச் செலுத்தக்கூடியதாக இருக்கும்.
  • 31.12.2020 முன்னதாக காலாவதியாகக்கூடிய வெவ்வேறு நிவாரணத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகள் 31.12.2020 காலப்பகுதி வரை நீடிக்கப்படும். எப்படியாகினும், அவ்வகையான கடன்பெறுநர் இத்திட்டத்தின் வேண்டுகோளுக்கிணங்க வேண்டும் என வேண்டப்படுகின்றார்கள்.
  • கடன்பெறுநர்களின் மொத்தக் கடன்கள் ரூபா 300 மில்லியனுக்கு மேற்படுமிடத்து, அத்தகைய கடன்பெறுநர் வெவ்வேறு அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்குவதற்கு கருத்தில் கொள்ளலாம்.

 

செயற்படாக் கடன்கள் 

  • 31.12.2019இல் செயற்படாக் கடன்களாக வகைப்படுத்தப்பட்ட தகுதியுடைய சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கீழே குறிப்பிட்டப்பட்ட சலுகைகள் கிடைப்பதற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.
  • ஒன்றுசேர்ந்த வட்டி மற்றும் செலுத்தப்படாத செயற்படாக் கடன்களின் மொத்த தண்டனைப் பணம் மற்றும் முற்பணங்கள் உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்;களின் செலவினடிப்படையில் விட்டுக்கொடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
  • மீள அட்டவணைப்படுத்தப்படும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பின்வருமாறு இருக்கவேண்டும்:
   • உரிமம்பெற்ற வங்கிகள் இத்திட்டத்தின் கீழ் கடன்பெறுநர் 50 சதவீதமோ அதற்கு மேற்பட்ட ஆரம்ப மூலதனத்தினை செலுத்தியிருப்பின், கருத்திற் கொள்ளப்படும் காலம் வரை செலுத்தத் தவறிய தவணைகளின் 50 சதவீத ஒருங்கித்த மற்றும் செலுத்தாத வட்டியினை (மேலே குறிப்பிடப்பட்ட தண்டனை வட்டியினை விட்டுக்கொடுத்த பின்பு) பிற்போட வேண்டியிருக்கும் எஞ்சிய கடன் மூலதனம் மற்றும் செலுத்தத்தவறிய தவணையின் எஞ்சிய வட்டியின் பகுதி/ மற்றும் எதிர்கால வட்டி மீள அட்டவணைப்படுத்தப்பட வேண்டும். 

   • உரிமம்பெற்ற வங்கிகள் இத்திட்டத்தின் கீழ் கடன்பெறுநர் 50  சதவீதத்திற்குக் குறைவான ஆரம்பக் கடன் மூலதனத்தை செலுத்தியிருப்பின், கருத்திற்கொள்ளப்படும் காலம் வரை செலுத்தத் தவறிய தவணைகளின் 25 சதவீத ஒருங்கித்த மற்றும் செலுத்தாத வட்டியினை (மேலே குறிப்பிடப்பட்ட தண்டனை வட்டியினை விட்டுக்கொடுத்த பின்பு) பிற்போடப்பட வேண்டியிருக்கும். எஞ்சிய கடன் மூலதனம் மற்றும் செலுத்தத்தவறிய தவணையின் எஞ்சிய வட்டியின் பகுதி மற்றும் எதிர்கால வட்டி மீள அட்டவணைப்படுத்தப்படல் வேண்டும்.

   • ஆரம்பக் கடன் தவணைகளின் எஞ்சிய காலப்பகுதியின் இரட்டிப்பு மடங்கிற்கு விஞ்சாத வகையில் எஞ்சிய கடன் மூலதன மீதி மீள அட்டவணைப்படுத்தப்படல் வேண்டும். 

   • கடன் மூலதனத்தை மீளச்செலுத்துவதற்கு ஒரு வருட தயவுக்காலம் வழங்கப்படல் வேண்டும். எப்படியாகினும், கடன்பெறுநர் வட்டியினை உரிய காலத்தில் செலுத்துமாறு வேண்டுக்கொள்ளப்படுகின்றனர்.

  • புதிய தொழிற்படு கடன் மூலதனம்: உாிமம் பெற்ற வங்கிகள், செயற்பாடாக் கடன் வகைக்குளிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர  தொழில்முயற்சிகள் அவற்றின் வியாபாரத்திற்கு புத்துயிா் அளிக்கும் விதத்தில் உயா்ந்த பட்சம் ஆறு மாதங்களுடன் கூடிய கடனொன்றாக உயா்ந்தபட்ச மூன்று மாத தொழிற்படு மூலதனத் தேவைப்பாடுகளை, நிபந்தனைகளுக்குட்பட்டு தற்போது நிலவுகின்ற துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்திற்கு மேலதிகமாக 2% இனை விஞ்சாத ஒரு வட்டி வீதத்தில் வழங்கலாம். 
  • இத்திட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருந்தும் திட்டத்தின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் கடன் பெறுநர்களின் சொத்துக்களின் ஏலம் 31.12.2020 வரை ஒத்திவைக்கப்படும்.
  • உரிமம்பெற்ற வங்கிகளானது, கொடுகடன் தகவல் பணியகத்தின் எதிர்மறையான அறிக்கைகளின் அடிப்படையில் மட்டும் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் இருப்பதற்கு முறையான ஓர் செயற்பாட்டினை வைத்திருப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
  • கடன் உத்தரவாதத் திட்டம்: உரிமம்பெற்ற வங்கியினால் அனுமதியளிக்கப்பட்ட மேலதிகமான கடன் மற்றும் முற்பணங்களிலிருந்து 75 சதவீதம் வரையில் இடர்நேர்வினைக் குறைப்பதற்கு அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் ஒரு கடன் உத்தரவாதத் திட்டம் உருவாக்கப்படும்.

 

Published Date: 

Monday, February 10, 2020