பிரதேச அலுவலகம் - நுவரெலியா

இலங்கை மத்திய வங்கி பிரதேச அலுவலகம் நுவரெலியா 2021 செப்டம்பர் 28 அன்று "பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடலைத் தடைசெய்தல்" என்ற வலையரங்கத்தை நடாத்தியது. இந்த வலையரங்கத்தின் நோக்கமானது பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடல் ஆகியவற்றின் சர்வதேச கொள்கை அமைப்பு, தேசிய சட்ட அமைப்பு மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் கடமைகள் பற்றிய புரிதலை வழங்குவதாகும்

இலங்கை மத்திய வங்கி பிரதேச அலுவலகம் நுவரெலியா 2021 செப்டம்பர் 29 அன்று "வெற்றிகரமான ஒரு சமூக தொழில்முனைவோராக மாறுவதற்கான வழிகள்" என்ற வலையரங்கத்தை நடாத்தியது. இந்த வலையரங்கத்தின் நோக்கமானது சமூக தொழில்முனைவு, யோசனை உருவாக்கம், மதிப்பீடு, தேர்வு, திட்டமிடல் மற்றும் ஒரு சமூக நிறுவனத்தைத் தொடங்குவது பற்றிய புரிதலை வழங்குவதாகும். இவ் வலையரங்கமானது ஜூம் (Zoom) இயங்குதளம் மூலமாக வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் இவ் நிகழ்ச்சியின் வளவாளராக லங்கா சோஷியல் வென்ச்சர்ஸ் (Lanka Social Ventures) இன் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர். லலித் வெலமெடேகே அவர்கள் கலந்து கொண்டார்.

இலங்கை மத்திய வங்கி பிரதேச அலுவலகம் - நுவரெலியா, 2021 செப்டம்பர் 29 அன்று "இலங்கையில் இலத்திரனியல் கட்டண முறைகள்" என்ற வலையரங்கத்தை நடாத்தியது. இந்த வலையரங்கத்தின் நோக்கமானது, நாட்டில் இலத்திரனியல் கட்டண முறைகளின் தற்போதைய மற்றும் புதிய போக்குகள் பற்றிய புரிதலை வழங்குவதாகும். பங்கேற்பாளர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க, இலத்திரனியல் கொடுப்பனவுகளைப் பயன்படுத்துதல் பற்றிய சிறப்பு அறிவுரை வழங்கப்பட்டது. இவ் வலையரங்கமானது ஜூம் (Zoom) இயங்குதளம் மூலமாக வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியினுடைய கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் திருமதி காஞ்சனா அம்பகஹவிட அவர்கள் கலந்து கொண்டார்.

Pages