இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 ஓகத்து

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 ஓகத்தில் அதிகரித்தன

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், யூலையிலிருந்து உயர்வடைந்து 2022 ஓகத்தில் 49.6 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்தது, இருந்தும் நடுநிலையான ஆரம்ப அளவு மட்டத்திற்கு சற்றுக் கீழேயே காணப்பட்டது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு என்பவற்றில் அறிக்கையிடப்பட்ட மேம்பாடுகளுடன் தயாரித்தல் நடவடிக்கைகளின் வீழ்ச்சி வீதம் குறைவடைந்த அதேவேளை, உற்பத்தியும் புதிய கட்டளைகளும் மெதுவான வேகத்தில் வீழ்ச்சியடைந்தன. மேலும், மேம்பட்ட நடமாட்டங்களுடன் வழங்குநர் விநியோக நேரம் சுருக்கமடைந்தது.

பணிகள் கொ.மு.சுட்டெண், தொடர்ச்சியாக நான்கு மாதங்களாக வீழ்ச்சியடைந்த பின்னர் 51.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, 2022 ஓகத்தில் வளர்ச்சிப் புலத்திற்கு திரும்பலடைந்து. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புகளால் இவ்விரிவடைதல் தூண்டப்பட்டிருந்தது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, September 15, 2022