வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 பெப்புருவரி

2022 பெப்புருவரியில் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சும் வகையில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் காணப்பட்ட உத்வேகம் தொடர்ச்சியடைந்தது. அதேவேளை, இறக்குமதிச் செலவினமும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 பெப்புருவரியில் சிறிதளவு வீழ்ச்சியடைந்த போதிலும் ஆண்டிற்காண்டு அடிப்படையில் கணிசமானளவு அதிகரித்து காணப்பட்டது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2022 பெப்புருவரி மாதத்தில் முன்னைய ஆண்டின் இதே மாத காலப்பகுதியைக் காட்டிலும் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியினைக் காண்பித்திருந்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 பெப்புருவரியில் தொடர்ந்தும் மிதமடைந்தன. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் மாத காலப்பகுதியில் தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன. வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது பெப்புருவரி மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 202 ரூபாவாகக் காணப்பட்டது. எனினும், உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தாழ்ந்த திரவத்தன்மைக்கு மத்தியில் செலாவணி வீதத்தின் மீதான அதிகரித்தளவிலான அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு 2022 மாச்சு மாதத்தின் முதலாவது வாரத்தில் செலாவணி வீதத்தில் அளவிடப்பட்ட சீராக்கத்தை மத்திய வங்கி அனுமதித்தமையானது அதன்பின்னரான சந்தைச் சக்திகளினால் அளவிடப்பட்ட சீராக்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட தேய்வு மட்டத்தைக் காட்டிலும் அதிகரித்த தேய்வைத் தோற்றுவித்தது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, May 12, 2022