இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலைத் இலங்கை மத்திய வங்கி தொடங்கிவைத்தது

இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலை 2022 மே 06 அன்று ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் தொடங்கிவைத்தது. இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தல் என்பது சுற்றாடல் ரீதியாக நிலைபெறத்தக்க பொருளாதார நடவடிக்கைகளை வரைவிலக்கணம்செய்து வகைப்படுத்துவதுடன் 2019இல் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் நிலைபெறத்தக்க நிதிக்கான வழிகாட்டலில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய செயற்பாட்டு விடயமொன்றாகக் காணப்படுகின்ற வகைப்படுத்தல் முறைமையொன்றாகும். இவ்வகைப்படுத்தலானது, பன்னாட்டு ரீதியான சிறந்த நடத்தைகளுக்கு இசைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்நாட்டு பின்னணிக்கு ஏற்றவிதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் இரண்டினூடாகவும் பசுமை நடவடிக்கைகளுக்கு குறைந்த செலவில் நிதியளித்தலைத் திரட்டுவதற்கு இது நிதியியல் சந்தை பங்கேற்பாளர்களை இயலச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைப் பசுமை நிதி வகைப்படுத்தலானது, நிதியியல் உற்பத்திகளை (வங்கிக் கடன்வழங்கல், படுகடன் சாதனங்கள், சொத்துப்பட்டியல் முகாமைத்துவம் மற்றும் முதலீட்டு நிதியங்கள் போன்ற) வழங்குகின்ற அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை பங்கேற்பாளர்களுக்கும் பாரிய கூட்டுத்தாபனங்கள், அதேபோன்று தேசிய மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் ஏற்புடையதாகவிருக்கும். கைத்தொழில்சார் திட்டமிடல் அதிகாரிகளின் மூலமான தொடர்புபடுத்தலாகவும் இது பயன்படுத்தப்படக்கூடியதாக இருக்குமென்பதுடன் வனம் மற்றும் மரம் அறுத்தல், வேளாண்மை, தயாரித்தல், மின்சக்திப் பிறப்பாக்கம், ஊடுகடத்தல் மற்றும் விநியோகம், எரிவாயு, ஆவி மற்றும் வாயுச்சீராக்கி வழங்கல், நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் கழிவு முகாமைத்துவம், நிர்மாணம், போக்குவரத்து மற்றும் களஞ்சியம், நிதியியல் சேவைகள் மற்றும் சுற்றுலா மற்றும் ஓய்வு போன்ற பலவகையான பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்குகின்ற பசுமைத்தொழில் துறைகளுக்கு ஆதரவளிப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான அடிப்படையாகவும் இது அமையும். 

முழுவடிவம்

Published Date: 

Thursday, May 12, 2022